For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கமாட்டோம்: நிதிஷூக்கு உறுதிமொழி கொடுத்தார் கட்காரி?

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க மாட்டோம் என்று பாஜக தலைவராக இருந்த நிதின் கட்காரிபீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு உறுதிமொழி கொடுத்ததாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கக் கூடாது என்பதில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் உறுதியாக உள்ளது. இதேபோல் மற்றொரு கூட்டணிக் கட்சியான சிவசேனாவுக் எதிர்ப்பு காட்டி வருகிறது. இந்நிலையில் பாஜக தலைவராக கட்காரிஇருந்த காலத்தில் நிதிஷ்குமாரிடம், பிரதமர் வேட்பாளராக மோடியை நிச்சயமாக பாஜக முன்னிறுத்தாது என்று கூறியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய ஜனதா தள பிரமுகர் ஒருவர், பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரையில் எந்த ஒரு நபருக்கும் ஆதரவாகவும் நாங்கள் முடிவெடுக்க மாட்டோம் என்று நிதிஷ்குமாரிடம் கட்காரிஉறுதி அளித்திருந்தார். குறிப்பாக நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கு கட்சியில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இதனால் மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படமாட்டார் என்றே கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற சந்திப்பின் போது நிதிஷ்குமாரிடம் கட்காரிகூறியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அப்படி ஒன்றும் நிதிஷ்குமாருக்கு உறுதிமொழி கொடுக்கப்படவில்லை என்கிறது கட்காரி வட்டாரம். நிதிஷ்குமாரை கட்காரிசந்தித்தது உன்மைதான். அப்போது பிரதமர் பதவிக்கான வேட்பாளர் பற்றி விவாதிக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கட்காரி, இந்த விவகாரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அனைத்து கட்சிகளுடன் விவாதித்த பிறகே இறுதி முடிவெடுக்கப்படும் என்றுதான் கூறியதாக தெரிவிக்கின்றன.

ராஜ்நாத் கருத்து:

இதனிடையே டெல்லியில் செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது ராஜ்நாத் சிங் கூறுகையில், பாரதிய ஜனதா கூட்டணி உடைய வேண்டும் என்று நாங்கள் ஒருபோதும் விரும்பவில்லை. அனைத்து கூட்டணி கட்சிகளும் ஒன்றாக அமர்ந்து, மத்திய ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம். வரும் லோக்சபா தேர்தலை நாங்கள் கூட்டாக சந்திப்போம்.

திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க போல வேறு ஒரு கட்சி ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகினால் நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் வரும். கட்சியின் மிக மூத்த முதல்வர் நரேந்திர மோடி. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பாரதிய ஜனதா தலைமை வகிக்கிறது. கூட்டணியின் மிகப்பெரிய கட்சி பாரதிய ஜனதா. இதனால் பிரதமர் பதவிக்கு ஒரு வேட்பாளரை பாஜக முன்னிலைப்படுத்துவது அவசியம். ஆனால் நாங்கள் இனிமேல்தான் அதுபற்றி பேச வேண்டும். நரேந்திர மோடியைப் பொறுத்தமட்டில் என்னிடம் வந்து ஒரு முறை கூட அவரது பெயரை பிரதமர் வேட்பாளாராக முன்னிலைப்படுத்தும்படி கூறியது கிடையாது என்றார்.

ராஜ்நாத்திடம் பிரதமர் பதவி வேட்பாளராக அத்வானி முன்னிலைப்படுத்தப்படுவாரா என்று கேட்கப்பட்டதற்கு அவர் எங்களின் மிகுந்த மரியாதைக்குரிய தலைவர் என்று மட்டுமே பதிலளித்தார்.

English summary
Did former BJP president Nitin Gadkari assure Nitish Kumar that Narendra Modi would not be projected as PM candidate? Sources close to Kumar on Wednesday said Gadkari had indeed given the Bihar CM such an assurance at a quiet meeting the two had in July last year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X