For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதல்வர்களை ரப்பர் ஸ்டாம்ப் போல் நடத்தும் மத்திய அரசு: ஜெயலலிதா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Jaya will not attend CM meet
சென்னை: டெல்லியில் நாளை நடைபெறும் முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பிரதமர் தலைமையிலான முதல்வர்கள் மாநாடு, ஆண்டுதோறும் நடைபெறும் சம்பிரதாய சடங்காகிவிட்டது.

நிர்வாகத்தில் மத்திய அரசுக்கு சமமான பொறுப்புள்ள, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்களின் கருத்துகளுக்கு இதுபோன்ற மாநாடுகளில் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

மாநாட்டு முடிவுகளை மத்திய அரசு முன்கூட்டியே தீர்மானித்துவிட்டு, முதல்வர்களை வெறும் ரப்பர் ஸ்டாம்பாக பயன்படுத்துகிறது.

மாநாட்டில் ஒவ்வொரு முதல்வரும் 10 நிமிடம் மட்டுமே பேச அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த டிசம்பரில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் பேசும் போது பாதியிலேயே பேச்சை நிறுத்துமாறு அறிவுறுத்தினார்கள்.

10 நிமிடங்களில் 12 முக்கிய திட்டங்களை எடுத்துரைப்பது சாத்தியமல்ல என்றும் ஆட்சி நிர்வாகத்தில் மத்திய அரசுக்கு உள்ளது போல் மாநில அரசுக்கும் சமபங்கு இருக்கிறது.

ஆகவே, டெல்லியில் நாளை நடைபெறும் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான முதல்வர்கள் மாநாட்டில் தான் பங்கேற்கப் போவதில்லை தமக்குப் பதிலாக தமிழக சட்டத்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி பங்கேற்பார். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
Chief Minister Jayalalitha has said that she will attend CMs meeting in Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X