For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுதந்திரதின விழாவில் யாரையும் தாக்கிப் பேசக்கூடாது: மோடி பேச்சுக்கு அத்வானி பதிலடி

Google Oneindia Tamil News

Advani and Narendra modi
டெல்லி: 'சுதந்திர தினமான இன்று நாம் யாரையும் தாகிப் பேசக்கூடாது' என மோடியின் கருத்துக்கு பதிலடி கொடுப்பது போல் நேற்று சுதந்திர தின உரையாற்றியுள்ளார் பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி.

நேற்று நாடெங்கும் 67வது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அரசியல் தலைவர்கள் பல்வேறு இடங்களில் கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார்கள். அந்த வகையில் குஜராத் மாநிலம் பூஜ் பகுதியில் நடந்த சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட அம்மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி பிரதமர் மன்மோகன் சிங்கை கடுமையாக விமர்சித்து சிறப்புரை ஆற்றியிருந்தார்.

மோடியின் இந்த்ப் பேச்சைக் கண்டிக்கும் வகையில், நேற்று காலை டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் சுதந்திர தின விழாவைக் கொண்டாடிய பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி பேசியுள்ளார்.

அதில், "இன்று சுதந்திர தின நாள். இந்த நாளில் தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கிப் பேசக்கூடாது. நாட்டின் முன்னேற்றத்தைப் பற்றி மட்டுமே பேச வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

English summary
In an apparent jibe at Narendra Modi, who lashed out Prime Minister Manmohan Singh from Bhuj, senior BJP leader L K Advani on Thursday said that on a day like Independence Day leaders should not be critical of others.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X