For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலக நாடுகளில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டம்: ஒரு சிறப்பு பார்வை

By Siva
Google Oneindia Tamil News

லண்டன்: உலகின் பல்வேறு பகுதிகளில் இந்திய சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சுதந்திர தினம் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் இந்தியர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பல்வேறு நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் மூவர்ணக் கொடியேற்றப்பட்டு, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

ரியாத்

ரியாத்

ரியாத்தில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் தேசிய கீதம் மற்றும் தேசபக்திப் பாடல்களை இந்தியன் சர்வதேச பள்ளி மாணவ, மாணவிகள் பாடினர்.

ரஷ்யா

ரஷ்யா

சுதந்திர தினத்தன்று ரஷ்யாவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர் வைத்து மரியாதை செய்யும் ரஷ்யாவுக்கான இந்திய தூதர் அஜய் மல்ஹோத்ரா.

இலங்கை

இலங்கை

கொழும்பில் நடந்த இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது அங்குள்ள இந்திய அமைதிப்படை நினைவிடத்தில் மறைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் தூதரக உயர் அதிகாரி.

லண்டன்

லண்டன்

லண்டனில் உள்ள இந்தியா ஹவுஸில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அப்போது அங்கு கூடிய இந்திய மக்கள் தொலைக்காட்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்துவதை பார்க்கின்றனர்.

வாஷிங்டன்

வாஷிங்டன்

வாஷிங்டனில் உள்ள இந்தியா ஹவுஸில் நடந்த சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது குழந்தைகளுடன் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிரூபமா ராவ்.

ஜப்பான்

ஜப்பான்

ஜப்பானுக்கான இந்திய தூதர் தீபா கோபாலன் வாத்வா குடியரசுத் தலைவர் உரையை வாசித்தார்.

கெய்ரோ

கெய்ரோ

எகிப்துக்கான இந்திய தூதர் நவ்தீப் சூரி கெய்ரோவில் நடந்த சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றினார்.

பஹ்ரைன்

பஹ்ரைன்

பஹ்ரைன் கேரளிய சமாஜத்தில் நடைபெற்ற விழாவில் இந்திய தூதர் டாக்டர் மோகன் குமார் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.

கலை நிகழ்ச்சிகள்

கலை நிகழ்ச்சிகள்

சுதந்திர தினத்தையொட்டி பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இடப்புறம் கொழும்பில் நடந்த விழாவில் நடனமாடிய மாணவ, மாணவியர். வலப்புறம் பாரீஸில் நடந்த விழாவில் தேசப்பக்திப் பாடல்கள் பாடிய இசைக்குழுவினர்.

English summary
Indians celebrated independence day in various parts of the world on august 15.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X