தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் அழகிரி விடுதலையை எதிர்த்து ஜெ. அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Tha. Krishnan murder case: TN govt. appeals in Supreme court against Azhagiri
சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் தா. கிருஷ்ணன் கொலை வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

திமுக முன்னாள் அமைச்சர் தா. கிருஷ்ணன் கடந்த 2003ம் ஆண்டு மே மாதம் 20ம் தேதி மதுரை கேகே நகரில் உள்ள அவரது வீட்டுக்கு அருகே அதிகாலை நேரத்தில் நடைபயிற்சிக்கு சென்றுவிட்டு வந்தபோது கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி, முன்னாள் துணை மேயர் மன்னன், திமுக செயற்குழு உறுப்பினர் எஸ்ஸார். கோபி, திமுக நிர்வாகிகள் முபாரக் மந்திரி, கராத்தே சிவா உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். மு.க. அழகிரி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

ஆனால் மதுரை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு கடந்த 2006ம் ஆண்டில் திமுக ஆட்சியில் ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. சித்தூர் நீதிமன்றம் அழகிரி உள்ளிட்ட 13 பேரை விடுதலை செய்து கடந்த 2008ம் ஆண்டில் உத்தரிவிட்டது.

இந்நிலையில் அழகிரி விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TN government has filed a petition in the apex court challenging the verdict of Chittoor sessions court releasing former DMK central minister MK Azhagiri and 12 others in former minister Tha. Krishnan murder case.
Please Wait while comments are loading...