எல்லா ஆண்களையும் ஜெயில்ல போடலாமா? தெருநாய் வழக்கில் உச்சநீதிமன்ற கருத்தால் நடிகை ரம்யா அதிருப்தி
பெங்களூர்: சமீபத்தில் தெருநாய்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் நாய்களால் சாலைகளில் ஆபத்து ஏற்படுகிறது என்று கூறியது. இந்த கருத்தில் அதிருப்தியான நடிகை ரம்யா என்ற திவ்ய ஸ்பந்தனா ஒரு ஆண் எப்போது பாலியல் துன்புறுத்தல் குற்றத்தில் ஈடுபடுவான் என்பது தெரியாது. இதனால் அனைத்து ஆண்களையும் சிறையில் அடைக்கலாமா? என்று பதிவிட்டு இருப்பது விவாதமாகி உள்ளது.
தமிழில் சிலம்பரசனின் குத்து, தனுஷின் பொல்லாதவன் சூர்யாவின் வாரணம் ஆயிரம் உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா என்ற திவ்ய ஸ்பந்தனா.

இவர் கர்நாடகாவை சேர்ந்தவர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பியாக இருந்தவர். தற்போது அரசியலில் இருந்து சற்று விலகி மீண்டும் திரைப்படத்துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் தான் தெருநாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின்போது தெருநாய்களை கட்டுப்படுத்த தவறும் மாநிலங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியது.
உச்சநீதிமன்ற விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி. அஞ்சாரியா அடங்கிய அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‛‛தெருக்களில் நாய்கள், விலங்குகள் இருக்கக் கூடாது. எந்த நாய் காலையில் எந்த மனநிலையில் இருக்கும் என்று யாருக்குத் தெரியும்?. சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் தெருநாய்களை பொதுஇடங்களில் இருந்து அப்புறப்படுத்துவது, கருத்தடை செய்வது, தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட விஷயங்களை முறையாக மாநில அரசுகள் செய்ய வேண்டும். இதை செய்யாத அரசுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியது. மேலும் ராஜஸ்தானில் சாலைகளில் நடமாடிய தெருநாயால் நீதிபதிகள் காயமடைந்த விபத்தை நீதிபதிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இந்நிலையில் உச்சநீதிமன்ற கருத்தால் நடிகை ரம்யா அதிருப்தியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ந்நிலையில் தான் ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‛‛ஒரு ஆண் எப்போது பாலியல் குற்றம் செய்வான் என்பது தெரியாத நிலையில் அனைத்து ஆணை்களையும் சிறையில் அடைக்கலாமா?'' என்று பதிவிட்டுள்ளார். இது தற்போது விவாதமாகி உள்ளது.
நம் நாட்டில் தெருநாய்களால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் கடந்த ஆண்டு முதல் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு விசாரணையின்போதும் நீதிமன்றம் சில முக்கிய உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.
கடந்த ஆண்டு நவம்பரில் பள்ளிகள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், விளையாட்டு வளாகங்கள், ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களிலிருந்து தெருநாய்களை அகற்றி, குறிப்பிட்ட முகாம்களுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications