Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"காவி" திகில் திட்டம்.. உடுப்பி கல்லூரியில் நடந்தது என்ன, எப்படி திரண்டார்கள் இந்துத்துவா மாணவர்கள்?

உடுப்பி கல்லூரியில் என்ன நடந்தது என்பது குறித்து புது தகவல் வெளியாகி உள்ளது

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: உடுப்பி கல்லூரியில் காவி துண்டு மாணவர்களின் போராட்டம் தன்னிச்சையாக நடக்கவில்லை என்றும், அதை ஹிந்து ஜாக்ரண வேதிகே அமைப்புதான் தூண்டி விட்டு நடத்தியதாகவும் புது தகவல் வெளியாகி பரபரப்பை கூட்டி வருகிறது.

பள்ளி, கல்லூரிகளில் அனைவரும் ஒரே சீருடையை அணிய வேண்டும், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என இந்து அமைப்புகளை சேர்ந்த மாணவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பதால், கர்நாடகாவில் பெரும் சர்ச்சை உருவாகியிருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு மங்களூரில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் பியுசி வகுப்பில் பயிலும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து மாணவர்கள் சிலர் பதிலுக்கு காவித் துண்டு அணிந்து வந்தனர்.

ஹிஜாப்

ஹிஜாப்

ஹிஜாப் அணிந்தால் காவி துண்டு அணிவோம் என்றும் இந்து மாணவர்கள் அதிரடியாக அப்போது அறிவித்தனர். இதைதொடர்ந்து பல கல்வி நிறுவனங்களிலும் இதேபோல சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்தேறியது... குறிப்பாக உடுப்பி மாவட்டத்தின் மஹாத்மா காந்தி கல்லூரியிலும், ஹிஜாப் அணிய அனுமதிக்கக்கோரி மாணவிகள் போராட்டத்தில் இறங்கினர்... ஒரே கல்லூரி வளாகத்தில், ஒரே நேரத்தில் ஹிஜாப், காவித்துண்டுடன் 2 பிரிவாக மாணவர்கள் போராடி பதற்றத்தை கூட்டிவிட்டனர்..இன்னும் இந்த விவகாரம் முடியவில்லை.

போராட்டம்

போராட்டம்

இதனிடையே, உடுப்பியில் உள்ள எம்ஜிஎம் கல்லூரியில் காவித் துண்டு, தொப்பியுடன் மாணவர்கள் பெருமளவில் திரண்டு போராட்டம் நடத்தியதன் பின்னணி குறித்து சில பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன.. இந்த விவகாரத்தின் பின்னணியில் ஹிந்து ஜாக்ரக வேதிகே என்ற இந்து அமைப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்கள்தான் மாணவர்களுக்கு காவித் துண்டு, தலைப்பாகை ஆகியவற்றை சப்ளை செய்துள்ளனர்... போராட்டத்திற்குப் பிறகு இவர்களே அதை வந்து வாங்கிக் கொண்டும் போயுள்ளனர்.

ஹிஜாப்

ஹிஜாப்

கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மொத்தமாக திரண்டு வந்து, ஜெய் ஸ்ரீராம் கோஷம் போட்டபடி, ஹிஜாப் அணிந்து வந்த ஒரு இஸ்லாமிய மாணவியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதும், அந்தப் பெண் சற்றும் கலங்காமல், பயப்படாமல், அல்லாஹு அக்பர் என்று முழங்கிய காட்சியும் யாராலும் மறக்க முடியாதது... அந்த சம்பவம் நடந்தது உடுப்பியில் உள்ள எம்ஜிஎம் கல்லூரியில்தான்.

 காவி துண்டு

காவி துண்டு

இந்த காவி துண்டு மாணவர்களின் போராட்டம் தன்னிச்சையாக நடக்கவில்லை என்றும், அதை ஹிந்து ஜாக்ரண வேதிகே அமைப்புதான் தூண்டி விட்டு நடத்தியதாகவும் "தி நியூஸ் மினிட்" இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது... வேதிகே அமைப்புதான் மாணவர்களை போராட்டம் நடத்தத் தூண்டியது என்றும், வேதிகேதான் காவித் துண்டு, தலைப்பாகை ஆகியவற்றை சப்ளை செய்ததாகவும் தி நியூஸ்மினிட் தெரிவிக்கிறது.

மெசேஜ்

மெசேஜ்

அதாவது போராட்டத்திற்கு 2 நாட்களுக்கு முன்பே எம்ஜிஎம் கல்லூரி மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் போராட்டம் குறித்து தெரிவித்துள்ளனர்... அந்த மெசேஜ் கன்னடத்தில் இருந்துள்ளது.. அதில், "ஹிஜாப் பிரச்சினை உடுப்பியில் உள்ள கல்லூரிகளில் சூடு பிடித்துள்ளது.. முஸ்லீம் மாணவர்கள் இதை சமூக வலைதளங்களில் பெரிதாக்கி வருகின்றனர். எம்ஜிஎம் கல்லூரியிலும் இந்தப் பிரச்சினை இருப்பதை அறிவோம். இந்த பிரச்சினைக்கு இந்த வருஷமே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்... அதனால் எல்லாரும் சேர்ந்து சீருடைக்கு ஆதரவாக போராட வேண்டியது அவசியம்.

Recommended Video

    லீக்கான வீடியோ.. இந்துத்துவா மாணவர்களுக்கு காவி துண்டு, தொப்பி கொடுத்தது யார்? கர்நாடகாவில் பரபரப்பு
     ஜெய் ஸ்ரீராம்

    ஜெய் ஸ்ரீராம்

    வரும் திங்கள்கிழமை எல்லா மாணவர்களும் காவித் துண்டுடன் கட்டாயம் வர வேண்டும்... உங்களது பைகளுக்குள் அதை வைத்திருங்கள்... போராட்ட ஏற்பாட்டாளர்கள் சொல்லும்போது அதை தோளில் அணிந்து கொண்டு கல்லூரிக்குள் வாருங்கள்" என்பது போல செய்தி நீள்கிறது.. செய்தியின் கடைசியில் ஜெய் ஸ்ரீராம் என்றும் எழுதியுள்ளனர்.. இந்த தகவல் வெளிவந்து மேலும் பரபரப்பை உடுப்பியில் கூட்டிக் கொண்டிருக்கிறது.. எனினும் அனைத்து சர்ச்சை சலசலப்புகளும் விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்பிக்கையுடன் அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது...!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+