யூனிபார்ம் கட்டுப்பாடு நீக்கம்.. ஹிஜாப்பிற்கு முழு அனுமதி.. மைசூர் தனியார் கல்லூரி துணிச்சல் முடிவு!
பெங்களூர்: மைசூரில் இருக்கும் தனியா பியு கல்லூரி ஒன்றில் யுனிபார்ம் விதிகள் மொத்தமாக நீக்கப்பட்டு உள்ளது. ஹிஜாப் அணிந்து மாணவிகள் வர அனுமதிக்கும் வகையில் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளிகள் மற்றும் பியு கல்லூரிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மாணவிகள் பலர் இதற்கு எதிராக கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
இந்த வழக்கில் இறுதி உத்தரவு வரும்வரை மாணவ, மாணவிகள் மத அடையாளங்களோடு கல்வி நிலையங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது

ஹிஜாப் தடை
இந்த கட்டுப்பாடு காரணமாக கர்நாடகாவில் பியு கல்லூரிகள் திறக்கப்பட்டும் அங்கு மாணவிகள் பலர் வகுப்பிற்கு வரவில்லை. ஹிஜாப் தடை காரணமாக இஸ்லாமிய மாணவிகள் பலர் வகுப்பிற்கு வரவில்லை. இஸ்லாமிய மாணவிகளுக்கு ஆதரவாக இஸ்லாமிய மாணவர்கள் பலரும் வகுப்பிற்கு வருவதை புறக்கணித்தனர். இதனால் மைசூர், ஷிமோகா, சிக்மங்களூர், மங்களூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வகுப்பில் இந்து மாணவ, மாணவியர் மட்டுமே இருந்தனர்.

வகுப்பிற்கு வரவில்லை
முக்கியமாக இஸ்லாமியர்கள் அதிகம் படிக்கும் கல்வி நிலையங்களில் மிக குறைந்த அளவிலான மாணவ, மாணவியர் மட்டுமே வந்தனர். கல்லூரி நிர்வாகம் பலருக்கு போன் செய்து அழைத்தும் கூட மாணவ, மாணவியர் வகுப்பிற்கு வரவில்லை. ஹிஜாப் எங்கள் மத ரீதியிலான அடிப்படை உரிமை. அதற்கு எதிராக இடைக்கால தடை உள்ளது. ஹிஜாப்போடு அனுமதித்தால் மட்டுமே நாங்கள் வகுப்பிற்கு வருவோம். இல்லையென்றால் நாங்கள் வகுப்பிற்கு வர மாட்டோம் என்று மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

யூனிபார்ம் விதிகள்
இதையடுத்து மைசூரில் இருக்கும் தனியா பியு கல்லூரி ஒன்றில் யுனிபார்ம் விதிகள் மொத்தமாக நீக்கப்பட்டு உள்ளது. ஹிஜாப் அணிந்து மாணவிகள் வர அனுமதிக்கும் வகையில் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது. மாணவிகள் பலர் வகுப்பிற்கு வராத நிலையில் மாணவிகளை வகுப்பிற்கு வர வைக்கும் வகையில் மொத்தமாக யூனிபார்ம் விதி நீக்கப்பட்டுள்ளது. இந்த தனியார் கல்லூரியின் கமிட்டி சேர்ந்து இந்த யூனிபார்ம் நீக்கம் தொடர்பான முடிவை எடுத்து இருக்கிறது.

துணிச்சல் முடிவு
கல்லூரியின் பெயர் பாதுகாப்பு கருதி வெளியிடப்படவில்லை. கர்நாடகாவில் யூனிபார்ம் குறித்த முடிவை கல்லூரி கமிட்டி எடுக்கும்படி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாங்கள் ஹிஜாப்பை தடை செய்யவில்லை. கல்லூரி கமிட்டி இதில் முடிவு எடுக்கலாம் என்று கல்லூரி கமிட்டிக்கு முழு உரிமை கொடுத்து இருப்பதாக கர்நாடக அரசு நேற்றுதான் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வாதம் வைத்தது. இந்த நிலையில்தான் முதல் முறையாக மைசூரில் இருக்கும் அந்த தனியார் பியு கல்லூரி யுனிபார்மை தடை செய்துள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications