அட கொரோனா கிடக்குது.. தொழில்கள்தான் முக்கியம்.. மால், மதுபான கடைகளையும் திறக்கப்போறோம்.. எடியூரப்பா
பெங்களூர்: அட கொரானா கிடக்குது.. நாம நம்ம வேலையை ஆரம்பிப்போம் பாஸ்.. என்ற மோடில் இருக்கிறது கர்நாடக அரசு. முதல்வர் எடியூரப்பா அளித்த பேட்டியிலும் இதே தொனிதான் எதிரொலித்தது.
Recommended Video
இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்கு, பாதிப்பு இருக்கத்தான் செய்யும். அதற்காக பொருளாதார நடவடிக்கைகளை முடக்கி விட முடியாது. ஒரு பக்கம் கட்டுப்பாடு, மற்றொரு பக்கம் பொருளாதார நடவடிக்கைகள், என இரண்டையுமே செய்தாக வேண்டியுள்ளது என்றார் எடியூரப்பா.
ஏற்கனவே நேற்று 14 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவை தளர்த்தியது கர்நாடக அரசு. இப்போது அடுத்தகட்டத்திற்கு நகர்கிறது.

மத்திய அரசு திட்டம்
மே 3ஆம் தேதி தேசிய அளவில் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், அதன் பிறகு சிவப்பு மண்டல பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் ஊரடங்கை முழுமையாக தளர்வு செய்ய மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மத்திய அரசின் முடிவை எதிர்பார்க்காமல், கர்நாடக அரசு இப்போது அந்த முடிவுக்கு வந்துவிட்டது என்பது எடியூரப்பா பேட்டியில் உறுதியாக தெரிகிறது.

தொழில் துவக்கம்
இதுவரை, சிவப்பு மண்டலப் பகுதிக்கு மட்டும் கட்டுப்பாடுகளை விதித்து விட்டு, பசுமை மண்டலப் பகுதிகளில் தொழில்களை இயங்குவதற்கு கர்நாடக அரசு அனுமதித்தது. மே 4ஆம் தேதிக்குப் பிறகு சிவப்பு மண்டல பகுதியாக இருந்தாலும் கூட, அது கண்டைன்மெண்ட் பகுதியாக இல்லாவிட்டால் அங்கெல்லாம் தொழில்கள் தொடங்கவும், குறைந்த அளவு தொழிலாளர்களைக் கொண்டு பணிகளை நடத்திடவும் முடிவு செய்துள்ளது எடியூரப்பா அரசு.

பெங்களூர் நிலவரம்
கண்டைன்மெண்ட் பகுதியாக இல்லாவிட்டால் அங்கு, மால்கள், தியேட்டர்கள் போன்றவற்றை திறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு மதுபான கடைகளை திறக்க அனுமதி வழங்குவது பற்றியும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெங்களூர் நகரப்பகுதி சிவப்பு மண்டலம் என்ற பிரிவின் கீழ் வருகிறது. இங்கு 24 கண்டைன்மெண்ட் பகுதிகள் உள்ளன. இது 34 வார்டு பகுதிகளில் உள்ளது.

எடியூரப்பா பேட்டி
இந்த பகுதிகளில் மட்டும் வழக்கமான பணிகளுக்கு தடை விதிக்கப்படும். மற்ற பகுதிகளில் தொழில்கள் வழக்கம்போல இயக்கப்படும். இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புக்கொண்டால் பெங்களூரில் கூட மால்கள் மற்றும் சினிமா தியேட்டர்கள் திறக்கப்படும் என்று தெரிகிறது. மார்ச் 24ஆம் தேதி தேசிய அளவில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. அதற்கு 10 நாட்கள் முன்பாகவே, பெங்களூரில் மால்கள் மற்றும் தியேட்டர்கள் மூடப்பட்டன கர்நாடக அரசின் இந்த திட்டத்திற்கு பிரதமர் ஒப்புதல் அளிப்பார் என்று நம்புகிறேன் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார். அதேநேரம் மே 15ஆம் தேதி வரை பஸ்கள் மற்றும் மெட்ரோ ரயில் இயக்கத்திற்கு அனுமதி கிடைக்காது என்று கூறப்படுகிறது.

மத்திய அரசு அனுமதி
எடியூரப்பா இவ்வாறு நம்பிக்கை தெரிவித்தாலும், சென்னை, பெங்களூர் உட்பட 130 பகுதிகளை சிவப்பு மண்டல பகுதியாக அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே எடியூரப்பாவின் மற்ற திட்டங்களுக்கு மோடி அரசு ஒப்புதல் வழங்கினாலும், பெங்களூரில், லாக்டவுனை தளர்த்த அனுமதி கிடைப்பதில் சிரமம் இருப்பதாகவே கூறப்படுகிறது.
-
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications