அதிகமானவர்கள் பேசினால் இந்தி தேசிய மொழியா? அஜய் தேவ்கனை விளாசிய கர்நாடக முன்னாள் முதல்வர்கள்
பெங்களூர்: இந்தி ஒருபோதும் தேசிய மொழியாக இருக்காது. அதிக மக்கள் பேசுவதாலே இந்தி தேசியமொழி ஆகாது என கர்நாடக முன்னாள் முதல்வர்கள் சித்தராமயைா, எச்டி குமாரசாமி ஆகியோர் நடிகர் அஜய் தேவ்கனை கடுமையாக தாக்கி பேசியுள்ளனர்.
'விக்ரம் ராணா' பட புரோமோஷன் விழாவில் கன்னட நடிகர் கிச்சா சுதீப் பேசுகையில், ‛‛இந்தி தேசிய மொழி கிடையாது. பாலிவுட் நட்சத்திரங்களும் பான் இந்தியா படங்களை தயாரிக்கிறார்கள். இந்த படங்களை தமிழ், தெலுங்கு மொழிகளில் டப் செய்கிறார்கள்'' என கூறியிருந்தார்.
இதுதொடர்பான வீடியோ, செய்திகள் இணையதளத்தில் வைரலாகின. இதற்க பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் எதிர்ப்பு தெரிவித்தார்.

அஜய் தேவ்கன் டுவிட்
இதுபற்றி அஜய் தேவ்கன் இந்தி மொழியில் தனது டுவிட்டரில், ‛‛சகோதரர் கிச்சா சுதீப், இந்தி நமது தேசிய மொழி இல்லையென்றால் நீங்கள் ஏன் உங்கள் தாய்மொழி படங்களை இங்கு டப் செய்து வெளியிடுகிறீர்கள்?. இந்தி முன்பும் இப்போதும் எப்போதும் நமது தாய்மொழியாக, தேசிய மொழியாக இருக்கும்'' என்றார்.

சுதீப் பதிலடி
இதற்கு கிச்சா சதீப், "என்னுடைய பேச்சின் பொருள் தவறாக உங்களுக்கு வந்து சேர்ந்திருக்கும் என நினைக்கிறேன் சார். நேரில் சந்திக்கும் போது ஏன் அப்படி சொன்னேன் என்பதை உங்களுக்கு விளக்குகிறேன். புண்படுத்த வேண்டும் என்றோ விவாதம் செய்ய வேண்டும் என்றோ நான் அப்படி சொல்லவில்லை" என்றார். மேலும், இன்னொரு பதிவில், "நீங்கள் இந்தியில் அனுப்பியது எனக்கு புரிந்தது. ஏனெனில் நாங்கள் நேசித்து இந்தியை கற்றுக்கொண்டிருக்கிறோம். ஆனால் என்னுடைய இந்த பதிலை ஒருவேளை நான் எனது தாய்மொழியான கன்னடத்தில் பதிவிட்டு இருந்தால் நிலைமை என்னவாக இருக்கும். அது உங்களால் எப்படி புரிந்து கொள்ள முடியும். நாங்களும் இந்தியாவில்தானே இருக்கிறோம் சார்?" என்று பதிலடி கொடுத்தார்.

சூடுபிடித்த விவாதம்
இவர்கள் 2 பேருக்கும் இடையே நடந்த இந்த விவாதம் இந்தியா முழுவதும் எதிரொலிக்க துவங்கியது. இதனால் டுவிட்டரில் இந்திக்கு ஆதரவான மற்றும் எதிரான கருத்துகள் தொடர்ந்து பதிவேற்றப்பட்டது. மேலும் தேசிய மொழி இந்தியா என்பது தொடர்பான விவாதம் சூடுபிடித்தது.
அரசியல் கட்சி தலைவர்கள் முதல் நடிகர், நடிகைகள் வரை இதற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சித்தராமையா எதிர்ப்பு
இதற்கு கர்நாடக மாநில எதிர்க்கட்சி தலைவரான(காங்கிரஸ்) சித்தராமையாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ‛‛இந்தி ஒருபோதும் நமது தேசிய மொழியாக இருக்காது. நம் நாட்டின் மெழியியல் பன்முகத்தன்மையை மதிப்பது என்பது இந்தியர்கள் ஒவ்வொருவரின் கடமை. ஒவ்வொரு மொழி குறித்தும் அதன் சொந்த மக்கள் பெருமைப்படக்கூடிய வரலாறு இங்கு உண்டு. கன்னடனாக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.

சுதீப் மீது தவறு இல்லை
இதுபற்றி கர்நாடக முன்னாள் முதல்வரும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்தவருமான எச்டி குமாரசாமி டுவிட்டரில் கூறியதாவது:
நடிகர் கிச்சா சுதீப் இந்தி தேசியமொழி அல்ல என கூறியிருப்பது சரியானது. அவர் கூறியதில் எந்த தவறும் இல்லை. கன்னடா, தெலுங்கு, தமிழ், மலையாளம், மராத்தி ஆகிய மொழிகளை போல் இந்தியும் ஒரு மொழி தான்.

பாஜகவின் ஊதுகுழல்
இந்தியா என்பது பல மொழிகள் நிறைந்த தோட்டம். இங்கு பல்வேறு கலாசாரங்கள் உள்ளன. இதற்கு இடையூறு செய்ய முயற்சிக்க கூடாது. அதிகளவில் மக்கள் பேசுவதால் மட்டுமே இந்தியை தேசிய மொழி என கூறிவிட முடியாது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 9க்கும் குறைவான மாநிலங்கள் மட்டுமே இந்தியை 2வது மொழியாக வைத்துள்ளன. அப்படி இருக்கும்போது அது எப்படி தேசிய மொழியாக இருக்க முடியும். துவக்கம் முதலே இந்தி அடிப்படையிலான அரசியல் கட்சிகள் பிராந்திய மொழிகளை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் முன்னெடுத்த செயலை தற்போது பாஜக தொடர்கிறது. இதனால் அஜய் தேவ்கனை ஒரே தேசம், ஒரே வரி, ஒரே மொழி எனும் பாஜகவின் ஊதுகுழலாக தான் பார்க்க முடிகிறது'' என கூறியுள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications