கைலாசாவில் பாலியல் வன்கொடுமை - நித்யானந்தா மீது இமெயிலில் புகார் அளித்த வெளிநாட்டு பெண்
வெளிநாட்டை சேர்ந்த ஒரு பெண் நித்யானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி புகார் அளித்துள்ளார்.
பெங்களூரு: கைலாசாவில் பாலியல் வன்கொடுமை நடப்பதாக வெளிநாட்டை சேர்ந்த ஒரு பெண் நித்யானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி புகார் அளித்துள்ளார். யாருக்கும் பயப்படாமல் இந்தியாவுக்கு வந்து, இங்குள்ள ஏதாவது போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கும்படி அந்த பெண்ணுக்கு பிடதி போலீசார் பதிலளித்திருக்கிறார்கள்.
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில் நித்யானந்தா சாமியாருக்கு சொந்தமான தியான பீடம் உள்ளது.
இந்தியாவில் இருந்த வரைக்கும் நித்யானந்தா தினம் தினம் செய்தியில் அடிபட்டுக்கொண்டே இருந்தார். பலாத்கார வழக்கில் அகமதபாத் காவல்துறையினரால் குற்றவாளியாக தேடப்பட்டு வரும் நித்தியானந்தா, ஒரு புதிய இறையாண்மை தேசத்தை உருவாக்குவதாகவும், அதற்கு கைலாசா என்று பெயரிடுவதாகவும் தெரிவித்தார்.
யுட்யூப் சேனலில் தினம் தினம் வீடியோ வெளியிட்டு வருகிறார். கைலாசாவுக்கென தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். கைலாசாவிற்கு அனைவரும் வரலாம் என்றும் மெயில் அனுப்புங்கள் என்றும் கூறி வருகிறார்.

நித்யானந்தா
கைலாசா தனி நாட்டில் தனது சிஷ்யைகளுடன் வசித்து வருகிறார் நித்யானந்தா. அங்கிருந்தபடி அவ்வப்போது வீடியோக்களை அவர் வெளியிட்டு வருகிறார். அங்கேயும் பாலியல் துன்புறுத்தல் புகாரில் சிக்கியுள்ளார். ராமநகர் மாவட்டம் பிடதி போலீசாருக்கு வெளிநாட்டை சேர்ந்த ஒரு பெண் நித்யானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி புகார் அளித்துள்ளார்.

பாலியல் புகார்
புகார் அளித்த அந்த வெளிநாட்டு பெண்ணின் பெயர் சாரக் லான்ட்ரி ஆகும். பிடதி போலீசாருக்கு இ-மெயில் மூலம் அவர் புகார் அனுப்பி வைத்திருந்தார். அதில் கைலாசா நாட்டில் இருக்கும் நித்யானந்தா சாமியார், அவரது சீடர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி இருந்தார். மேலும் அந்த பெண் தனது டுவிட்டர் பதிவிலும் நித்யானந்தா மீது குற்றச்சாட்டு கூறி இருந்தார்.

இமெயில் மூலம் புகார்
ஆனால் நித்யானந்தா மீது இ-மெயில் வெளிநாட்டு பெண் அளித்திருக்கும் புகாரின் பேரில் பிடதி போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. மாறாக இ-மெயில் மூலம் அளிக்கும் புகார் மீது நடவடிக்கை எடுக்க சாத்தியமில்லை.
யாருக்கும் பயப்படாமல் இந்தியாவுக்கு வந்து, இங்குள்ள ஏதாவது போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கும்படி அந்த பெண்ணுக்கு பிடதி போலீசார் பதிலளித்திருக்கிறார்கள்.
Recommended Video

கைது செய்ய முடியுமா
இந்தியாவில் இருந்தவரை பல புகார்களில் சிக்கினார். சிறை சென்று வந்தார். கைலாசாவிற்கு சென்ற பின்னரும் அவரை பாலியல் புகார்கள் தொடர்ந்து வருகின்றன. தனது நாட்டிற்கு என்று புதிய கல்விக்கொள்கை, பணக்கொள்கை, ரிசர்வ் வங்கி என அனைத்து அறிவிப்புகளையும் வெளியிட்ட நித்யானந்தா தன் நாடு கைலாசா எங்கிருக்கிறது என்று மட்டும் அறிவிக்கவில்லை என்பதுதான் வேடிக்கை. வெளிநாட்டு பெண் இந்தியா வந்து புகார் அளித்தாலும் நித்யானந்தாவை கைது செய்ய முடியுமா?
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications