Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அடாவடி அண்ணாமலையை புறக்கணிப்போம்!" பத்திரிகையாளர்களை மிரட்டுவது கேவலம்: யுஎம்பிசி கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், அவரது அடாவடித்தனத்தை வன்மையாக கண்டிப்பதாகவும், அண்ணாமலையை பத்திரிகை மற்றும் ஊடக நிறுவனங்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் காயத்ரி ரகுராம் கட்சியிலிருந்து விலகியது குறித்தும், அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் பற்றியும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதேபோல் அவர் கையில் கட்டி இருக்கும் விலை உயர்ந்த ரபேல் வாட்ச் குறித்து செய்தியாளர்கள் கேள்விகளை முன்வைத்தார்கள். ஆனால், அதற்கு முறையாக பதிலளிக்காமல், செய்தியாளர்களின் ஊடகங்களின் பெயரை கேட்டு அவர்களையும் ஊடகங்களையும் விமர்சித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

 யுஎம்பிசி அறிக்கை

யுஎம்பிசி அறிக்கை

இந்த நிலையில் அண்ணாமலையின் செயல்பாட்டிற்கு பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகள் அடுத்தடுத்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது, "சென்னையில் இன்று (04.01.23) பாஜக தலைமை அலுவலகத்தில் அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

பாஜகவே அழைத்தது

பாஜகவே அழைத்தது

பாஜக மாநிலத் தலைமை அழைப்பு விடுத்ததன் பேரிலேயே பத்திரிகையாளர்கள் அந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். அப்போது, பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாத அண்ணாமலை, வழக்கம்போல் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசி உள்ளார்.

தரக்குறைவாக பேசிய அண்ணாமலை

தரக்குறைவாக பேசிய அண்ணாமலை

எந்த தலைவராக இருந்தாலும், பத்திரிகையாளர் சந்திப்பின்போது கேள்வி எழுப்புவது பத்திரிகையாளர்களின் உரிமை மற்றும் அது அவர்களின் கடமையும் கூட. அப்படி, தங்கள் கடமையை செய்த பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசுவதை அண்ணாமலை வழக்கமாக வைத்து உள்ளார். இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் பத்திரிகையாளர்களை அண்ணாமலை மிகவும் கீழ்த்தரமாக நடத்தியுள்ளார்.

பத்திரிகையாளர்களுக்கு மிரட்டல்

பத்திரிகையாளர்களுக்கு மிரட்டல்

ஆனால், இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பத்திரிகையாளர்களை மிரட்டும் அளவிற்கு அண்ணாமலை சென்று உள்ளார். இதுதொடர்பாக, மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் சார்பாக அண்ணாமலையை பாஜக அலுவகத்தில் நேரில் சந்தித்தபோது, "பத்திரிகையாளர்களை அப்படித்தான் நடத்துவேன். வேண்டுமென்றால் என்னுடைய செய்தியாளர் சந்திப்பை புறக்கணித்துக்கொள்ளுங்கள்" என்று கூறினார்.

 மமதையில் பேசுகிறார் அண்ணாமலை

மமதையில் பேசுகிறார் அண்ணாமலை

அண்ணாமலையின் இந்த கருத்தை அடாவடி மற்றும் ஆணவத்தின் உச்சம் என்றே மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் கருதுகிறது. பத்திரிகையாளர்களும், பத்திரிகை மற்றும் ஊடக நிறுவனங்களும் தன்னை ஒன்றும் செய்துவிட முடியாது என்ற மமதையில் அண்ணாமலை இப்படி நடந்துகொள்கிறார் என்பது வெளிப்படையாக தெரிகிறது.

 இந்திய பிரஸ் கவுன்சிலில் புகார்

இந்திய பிரஸ் கவுன்சிலில் புகார்

ஏற்கனவே, அண்ணாமலையின் கீழ்த்தரமான நடவடிக்கைகளை கண்டித்து, பத்திரிகையாளர்களை திரட்டி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளன. அத்துடன், பத்திரிகையாளர்களை அச்சுறுத்தி கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் அண்ணாமலைக்கு எதிராக இந்திய பிரஸ் கவுன்சிலில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

அண்ணாமலையை யுஎம்பிசி எதிர்கொள்வோம்

அண்ணாமலையை யுஎம்பிசி எதிர்கொள்வோம்

இந்த நிலையில், அண்ணாமைலை தொடர்ந்து இதுபோன்ற கேவலமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது, என்ன நடந்தாலும் ஊடகங்கள் தன்னை புறக்கணிக்காது என்ற அவருடைய தவறான எண்ணத்தையே காட்டுகிறது. ஆகவே, அண்ணாமலையின் இந்த மூன்றாம் தர நடவடிக்கையை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் எதிர்கொள்ள வேண்டிய அனைத்து தளங்களிலும் எதிகொள்ளும் என்று உறுதியளிக்கிறோம்.

ஊடகங்கள் புறக்கணிக்க வேண்டும்

ஊடகங்கள் புறக்கணிக்க வேண்டும்


ஒரு அரசியல் கட்சி தலைவருக்கான எந்த தகுதியும் இல்லாமல், தொடர்ந்து கீழ்த்தரமாக நடந்துகொள்ளும் அண்ணாமலையை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது. அதேவேளையில், தொடர்ந்து பத்திரிகையாளர்களையும் அவர்கள் சார்ந்த நிறுவனங்களையும் தரக்குறைவாக பேசி வரும் அண்ணாமலையை, பத்திரிகை மற்றும் ஊடக நிறுவனங்கள் புறக்கணிக்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது." என்று குறிப்பிட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+