கர்நாடகத்தில் திடுக் திருப்பம்.. காங்கிரஸை கழற்றி விட முடிவு.! பாஜக-வுடன் கைகோர்க்கும் குமாரசாமி
பெங்களூரு: கர்நாடக அரசியலில் யாருமே எதிர்பார்க்காத திருப்பம் ஒன்று நிகழ போவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய தகவலின் படி கர்நாடகத்தில் காங்கிரஸை கழற்றி விட்டு, பாஜக-வுடன் கூட்டணி சேர மஜத கட்சி திட்டமிட்டுள்ளதாக ஒரு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் அடுத்தடுத்து பல்வேறு அரசியல் திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. அங்கு காங்கிரஸ் - மஜத தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடைசியாக நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக தனித்து 105 இடங்களை கைப்பற்றியிருந்தது. காங்கிரஸ் குறைவான இடங்களைய பெற்றது.

இதனால் எந்த கட்சியும் ஆட்சியமைக்க முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனால் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு, எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். ஆனால் குறிப்பிட்ட கெடுவிற்குள் அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனதால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதன் பின்னர் காங்கிரஸ் - மஜத கூட்டு சேர்ந்து ஆட்சியமைத்தன. முதல்வர் பதவியும் குமாரசமிக்கு விட்டு தரப்பட்டது. இந்நிலையில் அப்போது முதலே ஆபரேஷன் தாமரை திட்டத்தை கையில் எடுத்து, குமாரசாமி அரசை கவிழ்க்க முயற்சித்தது பாஜக. ஆனால் மூன்று முறை முயற்சித்தும் முடியவில்லை.
இந்நிலையில் மத்தியில் மீண்டும் வலுவான ஆட்சியை அமைத்த காரணத்தால், பாஜக ஆபரேஷன் தாமரை திட்டத்தை கையில் எடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்குள் கூட்டணி அரசு மீதான அதிருப்தி காரணமாக காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏ-க்கள் சுமார் 16 பேர் ராஜினாமா செய்துள்ளனர். இதில் காங்கிரஸ் உறுப்பினர்கள் தான் அதிகம் ராஜினாமா செய்துள்ளனர்.
இங்கு தான் குமாரசாமிக்கு பெருத்த சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் அவரது தந்தை தேவகவுடாவிற்கும், காங்கிரஸ் தலைவர் சித்தராமையாவிற்கும் ஏழாம் பொருத்தம் எனவே குமாரசாமி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படுத்தவே தன் கட்சி எம்எல்ஏக்களை அதிகளவில் தூண்டிவிட்டு ராஜினாமா செய்ய வைத்திருப்பதாக கருதுகிறார் குமாரசாமி
இந்நிலையில் குமாரசாமிக்கு வலது கரமாக திகழும் கர்நாடக சுற்றுலாதுறை அமைச்சர் சா.ரா.மகேஷ் மற்றும் 3 முக்கிய பாஜக பிரதிநிதிகள் சந்தித்து ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் மகேஷ் உடன் பாஜக நிர்வாகிகள் பூட்டிய அறைக்குள் பேச்சு நடத்தியுள்ளனர்.
அதன்படி தற்போது அமைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை கைவிட்டு, பாஜக-வுடன் மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. முதல்வர் பதவியை எடியூரப்பாவிற்கு வழங்கிவிட்டு, மஜத அமைச்சரவையில் இடம்பெறுவது என்கிற ரீதியில் பேச்சு நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனால் திருப்பங்களுக்கு மேல் திருப்பங்கள் நிகழ்ந்து கர்நாடக அரசியல் களம், இன்னும் பயங்கரமாக சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே












Click it and Unblock the Notifications