பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆகிறார்?... சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி. ரூபா பதில்

Google Oneindia Tamil News

Recommended Video

    நன்னடத்தை விதியின் கீழ் சசிகலாவை விடுவிக்க கர்நாடக சிறைத்துறை பரிந்தரை

    பெங்களூரூ: பெங்களூரூ சிறையில் உள்ள சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவதற்கான வாய்ப்பே இல்லை என சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி. ரூபா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மரணம் அடைந்த நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என்று உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. 4 ஆண்டுகள் சிறை தண்டனையையும் உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.

    இதைத்தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந்தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.

    பாஜகவுக்கு எதிராக அதிமுகவில் தொடரும் கலகக் குரல்.. செய்யாறு எம்.எல்.ஏ.வும் ஆவேசம்!பாஜகவுக்கு எதிராக அதிமுகவில் தொடரும் கலகக் குரல்.. செய்யாறு எம்.எல்.ஏ.வும் ஆவேசம்!

    முன்கூட்டியே விடுதலை?

    முன்கூட்டியே விடுதலை?

    சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. அதற்கு முன்பும் அவர்கள் 3 மாதம் வரை சிறையில் இருந்தனர். அதன்படி அவர்கள் அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் விடுதலையாகி வெளியே வர வேண்டும். இந்த நிலையில் சிறையில் இருந்து சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

    நன்னடத்தை

    நன்னடத்தை

    கர்நாடக மாநில சிறைத்துறை விதிகளின்படி நீண்ட கால மற்றும் குறுகிய கால தண்டனை பெற்றவர்கள் மூன்றில் 2 பங்கு காலத்தை சிறையில் கழித்துவிட்டால், அவரை முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்ற விதி உள்ளது. மேலும் சிறையில் தண்டனையை அனுபவிக்கும் காலக்கட்டத்தில் வேறு எந்த தவறும் செய்யாமல், நன்னடத்தையுடன் நடந்து கொண்டால், அந்த அடிப்படையிலும் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய சட்ட விதிகளில் இடம் உள்ளது.

    சட்ட விதி

    சட்ட விதி

    இந்த சட்ட விதிகளை பயன்படுத்தி சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு உள்ளது. எனவே சசிகலா சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலையாகிறார். பெங்களூரூ பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா, முன்கூட்டியே விடுதலை ஆவார் என தகவல்கள் வெளியாகின.

    முன்னாள் டி.ஐ.ஜி ரூபா திட்டவட்டம்

    முன்னாள் டி.ஐ.ஜி ரூபா திட்டவட்டம்

    இந்நிலையில் இது குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி ரூபா, நல்லெண்ண அடிப்படையில் சிறைக்கைதிகளை விடுவிப்பதற்கு பல்வேறு விதிகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த வழக்கை பொறுத்தவரை, அந்த விதிகளுக்குள் இது வராது என்றும், எனவே, முன் கூட்டியே சசிகலா விடுதலை என்பது குறித்த கேள்வியே எழவில்லை என்றும் ரூபா கூறியுள்ளார். சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதி ஏற்படுத்தி தருவதற்கு, ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டியதோடு, பல்வேறு சிறை முறைகேடுகளையும் வெளிக்கொண்டு வந்தவர் அப்போதைய சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Disproportionate assets Case: Will Sasikala release in advance? Prisons Former DIG Roopa answer
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X