இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தததின் சாதக பாதகங்கள்.. உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றம் ஏற்படும்?
சென்னை: இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு இடையே ஒரு மிக முக்கியமான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் உறுதியாகி இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் இணைந்து வரலாற்று சிறப்பு மிக் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த ஒப்பந்தத்தால் உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றம் ஏற்படும்? இதில் உள்ள சாதக பாதகங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தால் நமக்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன?
முதலில், $30 டிரில்லியன் சந்தை திறக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 2,700 லட்சம் கோடி மதிப்புள்ள அமெரிக்கச் சந்தை இப்போது இந்தியத் தயாரிப்புகளுக்குப் பெரிய அளவில் கதவைத் திறந்துவிட்டிருக்கிறது. இதுவரை அமெரிக்காவுக்குப் பொருட்களை அனுப்பும்போது இந்திய வியாபாரிகள் அதிக வரி செலுத்த வேண்டிய நிலை இருந்தது. 25 சதவீதம் பரஸ்பர வரி, அபராத வரியாக 25 சதவீதம் என 50 சதவீதம் வரியாக செலுத்த வேண்டியதிருந்தது. அதாவது ஒரு பொருளின் விலையில் 50 சதவீதம் வரை வரியாக செலுத்தி கூடுதல் விலைக்கு விற்றுத்தான் போட்டிப்போட வேண்டிய நிலை முன்பு இருந்தது.

ஆனால், இனிமேல் ஜவுளி, ஆயத்த ஆடைகள், தோல் காலணிகள், பிளாஸ்டிக் மற்றும் கைவினைப் பொருட்களுக்கான வரி 18 சதவீதம் மட்டுமே..எனவே வரி குறைவு காரணமாக வங்கதேசம், வியட்நாம், சீனா உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா போட்டி போட முடியும்.
அதேபோல் உயிர் காக்கும் மருந்துகள், வைரங்கள், ரத்தினங்கள் மற்றும் விமான உதிரிபாகங்களுக்கு வரியே கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரி குறையும்போது, அமெரிக்கச் சந்தையில் நம் நாட்டுப் பொருட்களின் விலை குறையும். விலை குறைந்தால் விற்பனை பல மடங்கு அதிகரிக்கும்.
யாருக்கு என்ன நன்மைகள் முழு விவரம்
இளைஞர்கள் மற்றும் பெண்கள்
இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவில் லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். ஏற்றுமதி செய்ய வேண்டிய பொருட்களைத் தயாரிக்க அதிக ஆட்கள் தேவைப்படுவார்கள் என்பதால், இது திருப்பூர், கோவை மாதிரியான நம்மூர் மக்களுக்கு மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பிற்குப் பெரும் உதவியாக இருக்கும்.
சிறு தொழில் நிறுவனங்கள்
பெரிய நிறுவனங்கள் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் சிறுகுறு தொழில் நிறுவனங்கள் நடத்துவோருக்கும் பெரிய அளவில் நன்மையாக இருக்க போகிறது இந்த வர்த்தக ஒப்பந்தம். சிறிய அளவில் தொழில் செய்பவர்களும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் இனி அமெரிக்காவிற்குத் தங்கள் பொருட்களைத் தடையின்றி அனுப்பலாம். ஏனெனில் இதனை ஊக்குவிக்க இருநாடுகளுமே ஆர்வமாக உள்ளன.
விவசாயிகள் மற்றும் மீனவர்கள்
நம் நாட்டு அரசு விவசாயிகளின் நலன் கருதி அமெரிக்கா உடனான ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் தயங்கி வந்தது. தற்போதைய ஒப்பந்தம் எப்படி என்றால், அரிசி, கோதுமை, சோளம், பால் பொருட்கள் மற்றும் இறைச்சி போன்ற இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு தொடர்புடைய பொருட்களுக்கு எந்தப் பாதிப்பும் வராத வகையில் இந்த ஒப்பந்தம் பாதுகாக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளின் நெருக்கமான உறவு
இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் ஆழமான நம்பிக்கையையும், வளர்ந்து வரும் நெருக்கமான உறவையும் காட்டுகிறது. இது 'மேக் இன் இந்தியா' திட்டத்திற்கு ஒரு பெரிய ஊக்கத்தைக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது வெளிநாட்டுத் தொழில்நுட்பங்கள் இந்தியாவுக்கு வரும், அதிக முதலீடுகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தங்களில் உள்ள பாதகங்கள் என்னென்ன
எந்தவொரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்திலும் நன்மைகள் இருப்பது போலவே, சில சவால்களும், பாதிப்புகளும் இருக்கும். இந்தியா - அமெரிக்கா இடையிலான இந்த ஒப்பந்தத்தில் ஏற்பட வாய்ப்புள்ள சில பாதிப்புகள் மற்றும் சவால்களும் நிச்சயம் இருக்கின்றன. அவற்றை பார்ப்போம்.
உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்குப் போட்டி
அமெரிக்காவுடன் வர்த்தகக் கதவுகளைத் திறக்கும்போது, அங்கிருந்து வரும் நவீன தொழில்நுட்பம் கொண்ட பொருட்கள் அல்லது தரமான பொருட்கள் இந்தியச் சந்தைக்குள் இனி எளிதாக நுழையும். இதனால் அதே பொருட்களை இந்தியாவில் தயாரிக்கும் சிறிய நிறுவனங்கள் விலையிலோ அல்லது தரத்திலோ அமெரிக்கப் பொருட்களுடன் போட்டி போட வேண்டிய கட்டாயம் இனி ஏற்படும். இது சில சிறு தொழில்களுக்குச் சவாலாகவும் அமைய வாய்ப்பு உள்ளது
தரக்கட்டுப்பாடுகள்
அமெரிக்காவில் சந்தை திறக்கப்பட்டுள்ளது என்றாலும், அமெரிக்கச் சந்தை மிகவும் கடுமையான தரக்கட்டுப்பாடுகளைக் கொண்டதாகவே உலக நாடுகளுக்கு இருக்கிறது. இப்போது வரி குறைந்தாலும், நம் நாட்டு ஏற்றுமதியாளர்கள் (குறிப்பாக சிறு தொழில்கள் மற்றும் விவசாயிகள்) அமெரிக்கா எதிர்பார்க்கும் மிக உயரிய தரத்திற்குத் தங்கள் பொருட்களை மிக உயர்ந்த தரத்திற்கு உயர்த்த வேண்டியிருக்கும். இதற்கு கூடுதல் முதலீடு கண்டிப்பாக தேவைப்படும் . மிக உயர்ந்த தரம் இல்லை என்றால் பொருட்கள் திருப்பி அனுப்பப்படும் அபாயம் உள்ளது.
அறிவுசார் சொத்துரிமை
மருந்துப் பொருட்கள் துறையில் அமெரிக்கா எப்போதும் கடுமையான காப்புரிமை விதிகளை விதிப்பது வாடிக்கையாக உள்ளது. இந்தியா குறைந்த விலையில் மருந்துகளைத் தயாரிப்பதில் முன்னணியில் உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்க நிறுவனங்களின் காப்புரிமை விதிகளுக்கு இந்தியா அதிகம் இணங்க வேண்டியிதிருக்கும். எனவே எதிர்காலத்தில் சில மருந்துகளின் விலை உயரும் வாய்ப்பு உள்ளது
சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர் விதிகள்
அமெரிக்கா போன்ற நாடுகள் வர்த்தக ஒப்பந்தங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலன் குறித்த கடுமையான நிபந்தனைகளைச் சேர்க்கும். இந்திய நிறுவனங்கள் இந்தச் சர்வதேச விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டியிருந்தால், உற்பத்திச் செலவு அதிகரிக்க வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது
விவசாயத் துறை மீதான அழுத்தம்
அரசு இப்போதைக்கு அரிசி, கோதுமை போன்ற முக்கியமான பயிர்களைப் பாதுகாத்துள்ளதாகக் கூறியிருக்கிறது. ஆனால் எதிர்காலத்தில் அமெரிக்காவின் பால் பொருட்கள் அல்லது கோழி இறைச்சி போன்றவற்றை இந்தியா அனுமதிக்க வேண்டும் என்ற அழுத்தம் கண்டிப்பாக கொடுக்கும். அப்படி அனுமதித்தால், நம் நாட்டுப் விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது.
-
ஒரு வழியாக டிரம்ப் எடுத்த முடிவு.. ஈரான் போரில் மாபெரும் ட்விஸ்ட்.. சஸ்பென்ஸ் வைக்கும் அமெரிக்கா! -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
துபாய்க்கு இப்போ தான் உசுரே வந்துருக்கு..ஈரானை முடக்கிய அமெரிக்கா? டிரம்ப் சொன்ன வார்த்தை.. அடுத்து? -
வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா? -
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ஈரான்! -
வளைகுடாவில் அமெரிக்காவுக்கு இன்னொரு தலைவலி.. ஈராக்கில் சர்வதேச செய்தியாளர் கடத்தல்.. ஷாக் வீடியோ -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங்












Click it and Unblock the Notifications