சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னதான் தேமுதிக திமுக கூட்டணிக்கு வந்தாலும் கூட.. 3 சீட்டுக்கு மேல் கிடைக்க வாய்ப்பில்லையாம்

விஜயகாந்த் திமுக கூட்டணிக்கு சென்றாலும் 3 சீட் மேல் ஒதுக்க முடியாது என கூறப்படுகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    விஜயகாந்த்தை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்

    சென்னை: தேமுதிக கூட்டணிக்கு உள்ளே வந்தாலும் கேட்டதை தர முடியாத நிலையில் திமுக இன்று உள்ளது.

    அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை முடிவுக்கு வராமல் இழுபறி ஏற்பட்டுள்ளது. பாமக போலவே தங்களுக்கும் 7 சீட் வேண்டும் என்று விஜயகாந்த் கேட்டு கொண்டிருக்கிறார்.

    இதற்கு ஆரம்பத்தில் அதிமுக ஒத்து கொள்ளவில்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அரசியல் கட்சிகள் தேமுதிகவை உள்ளே இழுத்து போடும் முயற்சியில் இறங்கி உள்ளன.

    தேமுதிக ஏற்காது

    தேமுதிக ஏற்காது

    இதை பார்த்த அதிமுக தரப்பு, விஜயகாந்துக்கு 5 தொகுதிகள் கொடுக்க முன்வந்திருப்பதாக தெரிகிறது. ஆனால் இதையும் தேமுதிக ஏற்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில்தான் திமுக தலைவர் ஸ்டாலின் விஜயகாந்த்தை சந்தித்துள்ளார். அதனால் கூட்டணி பேச்சுவார்த்தையாக இருக்குமோ என்ற சந்தேகம் வலுத்தது.

    காங்கிரஸ்

    காங்கிரஸ்

    தனிப்பட்ட முறையிலான சந்திப்பு தான் என்று ஸ்டாலின் சொல்லி உள்ளார். ஒருவேளை தேமுதிக திமுக கூட்டணிக்கே வந்தாலும் 3 சீட்டுக்கு மேல் தர வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது. காரணம், லம்ப்பாக 10 சீட்டு காங்கிரசுக்கு போய்விட்டது. இப்போது கூட்டணியில், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் ஆகியவை லிஸ்ட்டில் உள்ளன.

    பெரிய சிக்கல்

    பெரிய சிக்கல்

    இதில் தேமுதிக கூட்டணிக்குள் வந்துவிட்டால், அக்கட்சி கேட்கும் சீட்டை தர முடியாத சூழல் திமுகவில் உள்ளது. விஜயகாந்த் கேட்ட 7 சீட் கழித்தால் இருக்கும் 23 சீட்டுகளை தனக்கென்று பார்ப்பதா? கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்குவதா என்பதுதான் பெரிய சிக்கலே. அதனால் விஜயகாந்த் கூட்டணிக்கு வந்தாலும் 3 அல்லது 4 தான் தர முடியும்.

    தர்மசங்கடம்

    தர்மசங்கடம்

    4 சீட்கூட அதிகபட்சம்தானாம். 3 சீட், வேண்டுமானால் ஒரு ராஜ்யசபா.. அவ்வளவுதான்.. அதற்குமேல் திமுகவால் முடியாது என்றே கூறப்படுகிறது. அதேசமயம் பலமான கூட்டணி என்று சொல்லி கொள்ள முடியாத நிலையில் திமுக இப்போது உள்ளது.

    English summary
    MK Stalin has not been able to allot DMDK's MP Seat. Maximum 3 Seats can be given to DMDK
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X