ஸ்பாவில் அந்த 35 நிமிடம்! எங்களையா எதிர்த்து பேசுற? கத்தி முனையில் கதறிய பெண்! அடுத்து நடந்த சம்பவம்
சென்னை: கேரளா பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லாவில் உள்ள ஒரு ஆயுர்வேத ஸ்பாவில், 6 பேர் கொண்ட கும்பல் பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கடந்த பிப்ரவரி 1ம் தேதி நடந்த இந்த சம்பவம் தற்போதுதான் வெளிச்சத்துக்கு வந்து, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை கேள்விப்பட்டு கேரளாவே கொந்தளித்து கிடக்கிறது... என்ன நடந்தது அன்று??
கேரள மாநிலம் கொச்சியில் அந்த பிரபலமான ஆயுர்வேத ஸ்பா செயல்பட்டு வருகிறது.. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர், தனது வாழ்வாதாரத்திற்காக அந்த ஸ்பாவில் வேலை பார்த்து வருகிறார்..

ஆயுர்வேத ஸ்பா
குடும்ப சூழலுக்காக பணிபுரியும் இடத்தில் எவ்வளவு பெரிய அச்சுறுத்தலை சந்திக்க நேரிடும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு கசப்பான உதாரணமாக மாறியுள்ளது... அதிலும், அந்த பெண் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம், அவர் சந்தித்த அந்த 35 நிமிட நரகத்தை நம் கண்முன்னே நிறுத்துகிறது. அந்த 35 நிமிடம் என்ன நடந்தது?
சம்பவம் நடந்த அன்று, 6 பேர் கொண்ட கும்பல் ஸ்பாவிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளது.. அப்போது அங்கிருந்த இந்த பெண் ஊழியரிடம் 'கூண்டா வரி' வேண்டும் என்று கேட்டுள்ளது.
இங்கே பிசினஸ்
அதாவது "இங்கே பிசினஸ் செய்ய வேண்டும் என்றால் எங்களுக்கு பணம் தர வேண்டும், இல்லையென்றால் யாரையும் நிம்மதியாக இருக்க விடமாட்டோம்" என்று கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அங்கிருந்த பெண் ஊழியர், அந்த கும்பலை பார்த்து பயப்படாமல் தைரியமாக பேசியிருக்கிறார். "நாங்கள் நேர்மையாக உழைத்து சாப்பிடுபவர்கள், எங்களிடம் கொடுப்பதற்கு அவ்வளவு பணம் கிடையாது. இப்படி அராஜகம் செய்யாதீர்கள்" என்று பதிலடி தந்துள்ளார்.
தனி ரூமுக்குள் 35 நிமிடம்
இந்த பதில் அந்தக் கும்பலுக்கு பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. எங்களையா எதிர்த்து பேசுகிறாய்? என்று கேட்ட அந்த கும்பல், அந்த பெண்ணை ஒரு தனி ரூமுக்குள் வலுக்கட்டாயமாக இழுத்து சென்றது.
அந்த சிறிய ரூமுக்குள் அந்த பெண்ணின் கழுத்தில் கூர்மையான கத்தியை வைத்து, "இப்போது சத்தம் போடு பார்ப்போம், உன் கழுத்தை அறுத்துவிடுவோம்" என்று மிரட்டியுள்ளனர். பிறகு அந்தக் கும்பலில் இருந்த 4 பேர் அடுத்தடுத்து அந்த பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
கத்தியின் நுனி கழுத்து சதையை அழுத்தி கொண்டிருந்ததால், அந்த பெண்ணால் உதவிக்குக் கூட யாரையும் அழைக்க முடியவில்லை... இறுதியில் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது.
கழுத்து சதையை அழுத்தி
மேற்கண்ட கொடுமைகள் 35 நிமிடங்கள் நடந்துள்ளன.. 35 நிமிடங்களும் அந்த கும்பலின் பிடியில் சிக்கி தவித்துள்ளார் பாதிக்கப்பட்ட பெண்.. ஆனாலும் அந்தப் பெண் உடைந்து போய்விடவில்லை. தனக்கு நேர்ந்த அநீதிக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றுள்ளார்..
ஸ்பாவுக்கு வந்த 6 பேரின் துல்லியமான அடையாளங்களை தந்தார்.. அந்த 35 நிமிடங்கள், தன் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத பயங்கர தருணங்கள் என்றும், அந்த பயத்தில், 35 நிமிடங்கள் சொல்ல முடியாத அளவுக்கு வேதனையை அனுபவித்ததாகவும், உயிர் போய் விடுமோ என்ற பயம் ஒவ்வொரு நொடியும் தனக்கு இருந்ததாகவும் அப்பெண் பதட்டம் விலகாமல் போலீசில் தெரிவித்துள்ளார்
இதையடுத்து அவர் அந்த அடையாளங்களை கொண்டு, போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். இதில் முக்கியக் குற்றவாளியான அஜய் மற்றும் அவனது கூட்டாளிகள் ஐந்து பேரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
கேரளா ஸ்பா
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இப்போது தீவிர மருத்துவ சிகிச்சையும், மனநல ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. உழைக்கும் பெண்ணின் தைரியமான பதிலுக்கு அந்தக் கும்பல் கொடுத்த இந்தத் தண்டனை, கேரளா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே இப்போது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
அத்துடன் வேலை பார்க்கும் இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது எவ்வளவு அவசியமான ஒன்று என்பதை இந்த சம்பவம் நமக்கு மீண்டும் ஒருமுறை நினைவூட்டி உள்ளது..
-
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications