அடி, உதை, எலெக்ட்ரிக் ஷாக்.. கம்போடியாவில் கலங்கிய தமிழர்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர் - 6 பேர் மீட்பு
சென்னை: கம்போடியா நாட்டில் தகவல் தொழில் நுட்ப துறையில் வேலை வாங்கி தருவதாக அழைத்து சென்று, இணைய மோசடி செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட 6 தமிழர்கள் முதற்கட்டமாக மீட்கப்பட்டு நாடு திரும்பி இருக்கிறார்கள்.
தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி கம்போடியா நாட்டிற்கு தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அழைத்து செல்லப்பட்டு இருக்கின்றனர். ஆனால், அங்கு சென்ற தமிழர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
உறுதியளித்தபடி ஐடி வேலை வாங்கித் தராமல் இணையதள மோசடியில் ஈடுபடுமாறு தமிழர்களை கட்டாயப்படுத்தி இருக்கின்றனர். செய்ய முடியாது என மறுத்தவர்களை அடித்து உதைத்து எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

6 தமிழர்கள்
தஞ்சாவூரை சேர்ந்த பந்தலகுமரன், சதிஷ் குமார், கடலூரை சேர்ந்த அருள் பாண்டியன், நாமக்கலை சேர்ந்த பரணிதரன், கன்னியாகுமரியை சேர்ந்த புனித் ராகுல், திருப்பத்தூரை சேர்ந்த அரவிந்தன் ஆகிய ஆறு பேர் கம்போடியா நாட்டில் தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை என்று நம்பி அங்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளனர்.

ஆன்லைன் மோசடி
ஆனால் அவர்களுக்கு ஐடி வேலை வழங்காமல் இணையதளம் மோசடியில் ஈடுபட வைத்து கட்டாயப்படுத்தி உள்ளது ஒரு கும்பல். வேலைக்கு உரிய சம்பளம் வழங்காமலும், மோசடி வேலை செய்ய மறுத்ததற்காக தாக்குதலையும் அந்த கும்பல் நடத்தி இருக்கிறது. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினரிடம் கூறி அழுதுள்ளனர்.

முதலமைச்சர் உத்தரவு
இதனை அடுத்து உறவினர்கள் தமிழ்நாடு அரசிடம் புகாரளித்து இருக்கின்றனர். அதன் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அயல்நாடு வாழ் தமிழர் நலன் துறைக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து 6 பேரையும் தமிழ்நாட்டுக்கு மீட்டு வருமாறு அரசு நடவடிக்கை எடுத்தது.

தமிழர்கள் மீட்பு
இந்த நிலையில் கம்போடியா நாட்டில் இருந்து அரசின் முழு செலவில் தாயகம் திரும்பிய பந்தலகுமரன், சதிஷ்குமார், பரணிதரன், அருள்பாண்டியன், புனித் ராகுல், அரவிந்தன் ஆகியோரை சிறுபான்மை நலன் மற்றும் அயல்நாடு வாழ் தமிழர்கள் நலன் துறை அமைச்சர் செஞ்சி.மஸ்தான் பொன்னாடை போற்றி வரவேற்பு அளித்தார்.

அமைச்சர் வரவேற்பு
அவர்களை விமான நிலையத்திலிருந்து சொந்த ஊர் செல்ல அரசு செலவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனத்தில் அமைச்சர் செஞ்சி.மஸ்தான், மற்றும் துறை அதிகாரிகள் ஏற்றி வழி அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கம்போடியாவில் இருந்து மீட்கப்பட்ட நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பரணிதாரன் கூறியதாவது, "வங்கியில் கடன் பெற்றவர்களை விவரங்களை பதிவு செய்வது தொடர்பான வேலை என அழைத்து சென்றனர்.

தாக்குதல்
இணைய வழியாக மோசடி செய்து பணம் பறிக்கும் வேலையில் ஈடுபடுத்த வற்புறுத்தினர். எங்களுக்கு உறுதி அளித்த சம்பளத் தொகுதியினை வழங்காமல், மிகக் குறைவான சம்பளத்தினை வழங்கினர். வேலை செய்ய மறுத்ததால் தங்களை தாக்கியதாகவும், முறையான அத்தியாவசிய வசதிகள் எதுவும் செய்து தராமல் சித்திரவதை செய்தனர். எங்களை போன்று ஏராளமானோர் அங்கு பணியில் உள்ளனர்.

முதலமைச்சருக்கு நன்றி
புகார் அளித்த 20 நாட்களிலேயே அரசு எங்களை தாயகம் அழைத்து வந்துள்ளனர். மேலும் இங்கிருந்து சொந்த ஊர் செல்வதற்கு வாகன வசதியும் ஏற்பாடு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களுக்கும், துறை அதிகாரிகளுக்கும் 6 பேரின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்." என தெரிவித்தார்.
-
18 தொகுதிகளில் திமுக VS பாஜக மோதல்.. 5 இடங்களில் அமைச்சர்களுடன் மல்லுகட்டும் ‘தாமரை'.. லிஸ்ட் இதோ -
அதிமுக மாஜிகளுக்கு கட் அவுட்..திமுக உ.பி.களுக்கு கெட் அவுட்டா? 19 சீட்டுகளை அள்ளிய ’அம்மா’ பிள்ளைகள் -
ரூ.2000 ஆக உயர்த்தப்படும் மகளிர் உரிமைத் தொகை.. மாணவிகளுக்கு இனி ரூ.1500! ஸ்டாலின் வாக்குறுதி! -
செம ஷார்ப்..வேட்பாளர் பட்டியலை பார்த்து பார்த்து செதுக்கிய ஸ்டாலின்! திமுகவில் ஓங்கிய உதயநிதியின் கை -
"ரூ.30 லட்சம் வரை கடனுதவி".. சிறுபான்மையினரை கவர திமுக தேர்தல் அறிக்கையில் டாப் 10 அறிவிப்பு -
ரூ.8000 கூப்பன் முதல் 2 மடங்கு உயரும் உரிமை தொகை வரை.. திமுகவின் 7 முக்கிய வாக்குறுதிகள்! ஸ்டாலின் அறிவிப்பு -
விவசாயிகளுக்கு திமுகவின் ‘ஜாக்பாட்’! மீட்டர் பொருத்தப்படாத நவீன பம்ப்செட் வழங்கப்படும் என வாக்குறுதி -
DMK Manifesto: முதியோர் உதவித்தொகை இனி ரூ. 2 ஆயிரமாக உயர்வு.. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு -
நாங்க 10000..அவங்க 8000 தான்! அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா மாதிரி இருக்கு! திண்டுக்கல்லார் ராக்ஸ்! -
4 மேயர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்.. திமுக வேட்பாளர்கள் பட்டியலில் இருக்கும் மெகா ட்விஸ்ட்! -
முட்டி மோதியும் கண்டுகொள்ளாத திமுக, அதிமுக.. 4 தொகுதிகளில் மன்சூர் அலிகான் தனித்துப் போட்டி! -
திவ்யா சத்யராஜ், வைஷ்ணவி, ராஜீவ் காந்தி, கனிமொழி, போஸ் வெங்கட்டுக்கு சீட் ஏன் கிடைக்கவில்லை?












Click it and Unblock the Notifications