முதல்வர் பற்றி அப்படி பேசலாமா? அதிகாலை 2.30க்கு பாஜக புள்ளி வீட்டில் குவிந்த போலீஸ்! குமரியில் பரபர!
சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த முக்கியமான அதிமுக நிர்வாகி ஒருவர் இன்று அதிகாலை போலீசார் மூலம் கைது செய்யப்பட்டனர்.
பாஜக ஸ்தாபக தின நிகழ்ச்சி தமிழ்நாடு முழுக்க கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்றது. இதை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் கடந்த 6ஆம் தேதி பாஜக சார்பாக கூட்டம் நடைபெற்றது.
இதில் பல்வேறு பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

என்ன நடந்தது?
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிரச்சார அணி தலைவர் ஜெயபிரகாஷ் உரையாற்றினார். பாஜகவின் தேர்தல் வெற்றிகள், பாஜக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்த வரலாறு, பாஜக கடந்து வந்த பாதைகள் பற்றி அவர் பேசினார். அதோடு தமிழ்நாட்டில் ஏன் பாஜக வளர்ச்சி அடைய வேண்டும். தேர்தல்களில் எப்படி வெற்றிபெற வேண்டும் என்றும் இவர் பேசினார்.

முதல்வர் ஸ்டாலின்
இந்த நிலையில்தான் ஜெயபிரகாஷ் தனது உரையில் பாஜக பற்றி மட்டுமின்றி திமுக பற்றியும் கடுமையாக பேசி உள்ளார். இதில் முதல்வர் ஸ்டாலினை அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சில தகாத வார்த்தைகளை பயன்படுத்தி ஜெயபிரகாஷ் முதல்வர் ஸ்டாலினை விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஜெயபிரகாஷ் பேசியதை திமுகவினர் பலர் கண்டித்து இருந்தனர்.

விமர்சனம்
முதல்வரை பற்றி ஜெயபிரகாஷ் இப்படி பேசலாமா.. அவர் வேறு கட்சியாக இருந்தால்.. முதல்வர் என்பவர் மாநிலத்திற்கு பொதுவானவர். அவரை தகாத வார்த்தைகளில் அவதூறாக பேசுவது சரியா என்று திமுகவினர் கேள்வி எழுப்பி இருந்தனர். அதோடு திமுகவினர் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகாரும் அளித்தனர். இதையயடுத்து ஜெயப்பிரகாஷ் மீது பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது

கைது
இதையடுத்து இன்று அதிகாலை 2.30 மணிக்கு போலீசார் ஜெயபிரகாஷை கைது செய்ய அவரின் வீட்டிற்கு சென்றனர். இரணியில் அவர் வீடு இருக்கிறது. தகவல் அறிந்து அங்கு வந்த பாஜகவினர், ஜெயபிரகாஷை கைது செய்ய விடாமல் போலீசாரை முற்றுகை செய்தனர். 30 போலீசார் வந்திருந்த நிலையில் 55 பாஜகவினர் போலீசாரை சுற்றி வளைத்து முற்றுகையிட்டனர்.

என்ன நடந்தது
காலை 5..30 மணி வரை போலீசாரை கைது செய்ய விடாமல் அங்கு பாஜகவினர் பிரச்சனை செய்தனர். அவரின் வீடு முன் அமர்ந்து பாஜகவினர் கடுமையாக போராட்டம் செய்தனர். இதையடுத்து அங்கிருந்த பாஜகவினர் ஜெயபிரகாஷை நாங்களே காவல்நிலையத்திற்கு கொண்டு வருகிறோம் என்று உறுதி அளித்தனர். அதன்பின் ஒரு வழியாக பாஜகவினர் சமாதானம் அடைந்து ஜெயபிரகாஷை காவல் நிலையம் கொண்டு வந்தனர். இன்று கீழமை நீதிமன்றத்தில் ஜெயபிரகாஷ் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
-
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?












Click it and Unblock the Notifications