Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உங்க பொண்ணு ஏமாத்திட்டாங்க… 7 லட்சம் குடுங்க..! வைரலாகும் இளைஞரின் கடிதம்..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: காதல் தோல்வி அடைந்த இளைஞர் ஒருவர் , காதலிக்கு ஏழரை லட்சம் செலவு செய்ததாகவும், அந்த பணத்தை நட்ட ஈடாகக் கேட்டு அவரது தந்தைக்கு எழுதியதாக ஒரு கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தற்கால இளைஞர்கள் தங்களது பெரும்பாலான நேரத்தை சமூக வலை தளங்களில் செலவிட்டு வருகின்றனர். அவர்களை கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை சமூகவலைத்தள நிறுவனங்கள் செயல்படுத்தி வருகின்றன. மீம் பேஜ்கள், வீடியோ, லைவ் என இஷ்டத்துக் புகுந்து விளையாடுகின்றனர். இவ்வாறாக பதிவுகள் எதற்காக வைரலாகிறது என்றே தெரியாமல் பரவிவரும் நிகழ்வுகளும் உண்டு. உதாரணத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் வடிவேலுவின் நேசமணி கேரக்டர் உலக அளவில் டிரெண்ட் ஆனது.#prayfornesamani ஒரு இளைஞரின் ஹேஸ்டேக் உலகம் முழுவதும் வடிவேலு அவர்களைக் கொண்டு சென்றது..

A letter written by a young man who failed in love to his girlfriends father has gone viral

அதே நேரத்தில் நல்ல காரியங்களுக்கும் முகநூல் பக்கம் பயன்பட்டு வருகிறது. காணாமல்போனவர்களை கண்டுபிடிப்பதற்கும் தொலைந்த சான்றிதழை பெறுவதற்கு பல்வேறு குழந்தைகளின் கல்வி உணவு தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் பயனுள்ள முறையை ஃபேஸ்புக் ட்விட்டர் உள்ளிட்ட இணையதள நிறுவனங்கள் பயன்படுகிறது..

இந்த நிலையில் காதல் தோல்வி அடைந்த இளைஞர் ஒருவர் காதலித்த பெண்ணின் தந்தைக்கு ஏழரை லட்சம் ரூபாய் நஷ்டஈடு கேட்டு எழுதியதாக ஒரு கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. காதலினால் பாதிக்கப்பட்டவன், எனது காதலியின் பெற்றோருக்கு.. என தொடங்கும் அந்த கடிதத்தில், நான் உங்களது மகளை கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை ஐந்து வருடங்களாக காதலித்து வந்தேன். இந்த நிலையில் எனது காதலை உங்களது மகள் தற்போது மறுத்து விட்டாள், இதன் காரணத்தால் உங்களது மகளிடம் இருந்து நான் செலவு செய்த பணத்தை நஷ்ட ஈடாகக் பெற்றுத் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது..

A letter written by a young man who failed in love to his girlfriends father has gone viral

செலவு விபரங்கள் என்ற கணக்கில் உடைகள், சிகை அலங்காரம், தொலைபேசி கட்டணங்கள், முகப்பூச்சு, வாசனைத்திரவியங்கள், பிரத்தியேக வகுப்புகள், காதல் பரிசுகள், நினைவுச் சின்னங்கள், எரிபொருள் செலவுகள், வாகன உதிரிபாகங்கள் என சுமார் 6 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ததாகவும், காதல் தோல்வியால் மதுவுக்கு அடிமையானதன் காரணமாக மது உள்ளிட்ட செலவுகளுக்கு ஒரு லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் செலவு செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது..

5 வருடத்திற்கான மொத்த செலவு 7,71,400 ரூபாய் என்றும், உங்களது மகளை காதலித்ததால் ஏற்பட்ட மொத்த செலவினை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்கி எனது மன அழுத்தத்தை குறைக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என உள்ளது. மேலும் நோ லவ் என்று முடிந்திருக்கும் இந்த கடிதத்தை எழுதியது யார் ? யாருக்கு எழுதப்பட்டது ? என்ற தகவல்கள் இல்லை என்றாலும் தற்போது பல இளைஞர்கள் தங்களது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸிலும், முகநூல் பக்கத்திலும் இந்த கடிதத்தை அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+