நான் இன்னும் சாகலை..! சமாதி, லெட்டர் ரிப்பீட்டு..’மீண்டு’ம் வந்த நித்யானந்தா! அவரே எழுதிய கடிதம்..!
சென்னை : பல்வேறு புகார்களில் சிக்கி தற்போது தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வரும் நித்தியானந்தா உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில் மீண்டும் அவரே கைப்பட எழுதிய கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் உலா வருகிறது.
Recommended Video
பலாத்கார வழக்கு, கடத்தல், மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் சாமியார் நித்யானந்தா, அவ்வப்போது பக்தர்களுக்கு சத்சங்கம் என்ற பெயரில் ஆன்மிக சொற்பொழிவுகளை சமூக வலைதளங்களின் வாயிலாக ஆற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் நித்யானந்தாவின் உடல்நிலை குறித்த குழப்பமான தகவல் உலா வருகின்றன. கல்லீரல் அழற்சி, நுரையீரல் பிரச்சினை, சிறுநீரக பிரச்சினை ஆகியவற்றால் அவர் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

சாமியார் நித்யானந்தா
நித்யானந்தாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து கோமா நிலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அவர் சிகிச்சைக்காக இந்தியா திரும்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது அதே நேரத்தில் நித்தியானந்தா குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என அவரது சிஷ்யர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். அவர் சமாதி நிலையில் இருப்பதால் விளக்கேற்றி வழிபடுமாறு கூறினர்.

மோசமான உடல்நிலை
ஆனால் இதுவரை நித்தியானந்தா முதன் முறை கடிதம் எழுதியதற்கு பிறகு வெளிப்படையாக எதுவும் பேசவில்லை. ஆனால் அவ்வப்போது ஃபேஸ்புக்கில் கடிதங்கள் எழுதி வருகிறார். இந்நிலையில் தான் கைப்பட எழுதிய ஒரு கடிதத்தின் புகைப்படத்தோடு நித்யானந்தா அனுப்பியுள்ள செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதன் மூலம் அவர் இன்னும் நல்ல நிலையில் இருப்பது உறுதியாகியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்

மீண்டும் கடிதம்
அந்த கடிதத்தில் " என்னுடைய பக்தர்கள் மற்றும் சீடர்கள் அனைவருக்கும் - சமாதி நிலையிலிருந்து நேரடியாக அருள் வெளிப்பாடுகளும் நேரடி ஒளிபரப்பும் .. உங்களின் எண்ணங்களின் மூலத்தை... அதாவது உண்மையான உங்களை ( உங்கள் ஆன்மாவை) ஆழ்ந்து ஊடுருவி கவனிக்க உங்கள் மனம் பயப்படுகிறது. இந்த பயமே அனைத்து மனித ஜீவன்களின் பிரச்சனையாகும். விண்வெளிக்குச் சென்று திரும்பியவர்களின் மரபணு அமைப்பே, அது மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப முடியா அளவுக்கு மாற்றமடைய தொடங்குவதை, அவர்கள் மீது நடத்தப்பட்ட பல அறிவியல் ஆராய்ச்சிகளும் ஆய்வுகளும் காட்டுகின்றன.

மரபணு அமைப்பு
அதே போன்றே, உங்களுடைய உயிர், வெளி / இணைப் பிரபஞ்சங்களுக்கு பயணித்துவிட்டு திரும்பும்போது, உங்களுடைய மரபணு அமைப்பே மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப முடியாத அளவுக்கு உயர்நிலை ( பரமசிவ நிலை) சடுதிமாற்றத்திற்கு உள்ளாகிறது என்று பிரபஞ்ச விஞ்ஞானிகளான ஹிந்து ரிஷிகள் கண்டுபிடித்துள்ளனர். இதையே நான் இன்று கண்டு உணர்ந்து கொண்டிருக்கிறேன், எனக்காக இது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

என்ன ஆச்சு நித்யானந்தாவுக்கு?
மரபணுவில் நிகழும் இந்த பரமசிவநிலை சடுதிமாற்ற செயல்முறையின்போது உடல் மிக மிருதுவாகவும், அசைக்க முடியாததாகவும், வெளி உலக நடவடிக்கைகளுக்கு லாயக்கற்றதாகவும் மாறிவிடுகிறது. நான் சிறிது வெதுவெதுப்பான நீரை கூட அதிக சூடு மிக்கதாக உணர்கிறேன். குளித்த பிறகு என்னுடைய உடலை துணியால் துடைக்கும் போது, அந்தத் துணி என்னுடைய உடலுக்குள் நுழைவதாக உணர்கிறேன், ஆகவே துணி கொண்டு துடைக்காமல் மின்விசிறியின் காற்றில் என் உடலை உலர விடுகின்றேன்.

உடல் ஒத்துழைக்கவில்லை
என்னுடைய நித்ய சிவபூஜை கைங்கரியங்களை தவிர வேறு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியவில்லை. உடல் பத்மாசனத்தில் மணிக்கணக்காக, மணிக்கணக்காக, மணிக்கணக்காக எந்தவித சோர்வும் சலிப்பும் இன்றி அமர முடிகிறது, ஆனால் வேறு எந்த நடவடிக்கையும் செய்ய முடியவில்லை, சில அடிகள் எடுத்து வைக்கக் கூட ஒத்துழைக்கவில்லை. இது மிக விசித்திரமானதாகவும் முரண்பாடானதாகவும் இருப்பதாக நானே உணர்கிறேன்

அடிக்கடி வாந்தி
பூஜையின்போது அபிஷேகத்திற்காக நான் நீரைத் தொடும்போது அது எனக்கு குளிராக தோன்றவில்லை, ஆனால் அதே நீரை அதே வெப்பநிலை கொண்ட நீரை நான் குடிக்க முயற்சிக்கும்போது, அதை குளிர்மிக்கதாக உணர்கிறேன், ஒரு மில்லி லிட்டர் நீர் கூட மிச்சம் இல்லாமல் குடித்த அனைத்து நீரையும் வாந்தி எடுத்து விடுகிறேன். என்னை அருகில் இருந்து கவனித்துக் கொள்ளும் மருத்துவ சீடர்களுக்கு கூட இது விசித்திரமானதாகத் தோன்றுகிறது, இதை அவர்களால் மருத்துவரீதியாக புரிந்து கொள்ள முடியவில்லை.

விரல்களில் எலும்பு முறிவு
அதனால் ஒரு நாள் அவர்கள் அனைவரும் மதிய உணவு உண்பதற்காக சென்றிருந்தபோது, நான் தனியாக இருந்த போது, சில அடிகள் நம்மால் எடுத்து வைக்க முயற்சி செய்ய முடியும் என்று நம்பினேன், ஏனென்றால் மருத்துவர்கள் என்னுடைய அருகாமையில் இருந்தால்... என்னுடைய உடல்நிலையைக் கருதி, என்னை அவ்வாறு செய்ய அனுமதிக்க மாட்டார்கள். அதனால் நான் ரகசியமாக சில அடிகளை எடுத்து வைக்க முயற்சி செய்தேன், ஆனால் இந்த உடல் அவரை மூட்டை போன்று அல்லது மரத்திலிருந்து விழும் பூ போன்று நிலத்தில் விழுந்து விட்டது. அதிர்ஷ்டவசமாக கவசம் போன்று என்னுடைய ஜடாமுடி இருந்ததால் என் தலையில் காயம் எதுவும் படவில்லை, ஆனால் எனது இடது காலில் கடைசி மூன்று விரல்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

கையெழுத்துடன் கடிதம்
ஆங்கில மருத்துவ முறைப்படி அனைத்தும் சரியாக இருக்கிறது என்ற பின்பும், நித்திய சிவ பூஜை செய்வது, பத்மாசனத்தில் அமர்வது, அல்லும் பகலும் சமாதியில் நிலைப்பது என்பதைத் தவிர வேறு நடவடிக்கைகளை உடலால் மேற்கொள்ள முடியவில்லை. இந்தப் பதிவுகள் அனைத்தும் என்னால் நேரடியாக பதிவு செய்யப்படுகிறதா அல்லது வேறு எவராலோ பதிவு செய்யப்படுகிறதா என்று என்னுடைய எதிரிகளும் என்னை வெறுப்பவர்களும் சந்தேகத்தை கிளப்ப முயற்சி செய்கிறார்கள். இந்த சந்தேகங்கள் அனைத்தையும் தீர்க்கும் வகையில், இந்த பதிவில்... இன்றைய தேதி இடப்பட்ட என்னுடைய கையெழுத்து புகைப்படங்களை இணைத்துள்ளேன். வளப்படுத்துங்கள் & ஆனந்தமாக இருங்கள், பகிருங்கள் & கொண்டாடுங்கள் !" என அந்த கடித்தத்தில் கூறப்பட்டுள்ளது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications