காஞ்சிபுரத்தில் உனக்கு 35..எனக்கு 27.. மைக் செட் போட போன கணவன்.. எல்லை மீறிய எக்குத்தப்பான காதல்
காஞ்சிபுரம்: திருமணத்தை மீறி உறவு சில குடும்பங்களில் நடக்கும் பிரச்சனைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. பந்தல் அமைப்பது, மைக் செட், அலங்கார விளக்குகள் அமைப்பதற்காக கணவர் வெளியூருக்கு அடிக்கடி போய் வந்த நிலையில், மனைவிக்கு திருமணத்தை மீறிய காதல் வந்துள்ளது. இது எல்லை மீறியதால் இப்போது எக்குத்தப்பாக மாறி உள்ளத. காஞ்சிபுரத்தை அடுத்த உத்திரமேரூர் அருகே நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்துள்ள ராவத்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பாலா என்கிற பலராமன் வசித்து வருகிறார் அவரது மனைவிக்கு 35 வயது ஆகிறது.ந்தத் தம்பதிகளுக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். பலராமன் சுப நிகழ்ச்சிகள் மற்றும் கோவில் திருவிழாக்களுக்கு பந்தல் அமைப்பது, மைக் செட், அலங்கார விளக்குகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளை உத்திரமேரூர் சுற்றுவட்டாரத்தில் செய்து வருகிறார். இதனால் பலராமன் இரவு பகல் என்று குடும்பத்தைக் காப்பாற்ற ஓடிக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் 35 வயதாகும் பலராமனின் மனைவிக்கு அதே ஊரைச் சேர்ந்த 27 வயதான வசந்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வசந்த் அந்தப் பெண்ணை விட எட்டு வயது சிறியவர் ஆவார். இதனால் ஊர் மக்கள் யாரும் அதை தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. வசந்துக்கும் திருமணமாகி மனைவியும், இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கும், வசந்துக்கும் இருந்த நட்பு நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.இருவரும் ஒருகட்டத்தில் எல்லை மீறி உள்ளனர். பெண்ணின் கணவர் மற்றும் குழந்தைகள் இல்லாத நேரங்களில் இருவரும் தனிமையில் இருக்க ஆரம்பித்துள்ளனர். இந்தத் திருமணத்தை மீறிய பழக்கம் ஊர் மக்களுக்கும், கணவர் பலராமனுக்கும், வசந்தின் மனைவிக்கும் ஒரு கட்டத்தில் தெரிய வந்துள்ளது.
இதனால் இருவரையும் அழைத்து ஊர் மக்கள் மற்றும் உறவினர்கள் கண்டித்திருக்கிறார்கள். ஆனாலும் இருவரும் தங்களது பழக்கத்தை கைவிடாததால் பெண்ணின் கணவர் பலராமன் அவரது குழந்தைகளோடு தனியாக சென்றிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் காதலர்கள் இருவரும் யாருக்கும் தெரியாமல் வெளியூர்களுக்குச் சென்று தனிமையில் இருக்க ஆரம்பித்துள்ளனர்.
அதேபோல கடந்த மார்ச் 5ம் தேதி இருவரும் சென்னை கொளத்தூர் பகுதிக்குச் சென்று அறை எடுத்து தங்கியிருக்கின்றனர். அப்போது அந்தப் பெண் வசந்திடம் உன்னால்தான் நான் என் குழந்தைகளையும், கணவனையும் விட்டுப் பிரிந்து வாழ்ந்து வருகிறேன். ஆனால் நீ மட்டும் உன் மனைவி குழந்தைகளோடு சந்தோஷமாக இருக்கிறாய். அதனால் நீ உன் மனைவி குழந்தைகளை விட்டு என்னோடு வந்துவிடு. நாம் எங்காவது சென்று வாழலாம். இல்லையென்றால் என்னை விட்டுவிடு. நான் இனி உன்னோடு எங்கும் வரமாட்டேன் என்று கூறியதாக சொல்லப்படுகிறது.
ஏற்கனவே பலமுறை இதேபோன்று அந்த பெண் வசந்திடம் சண்டை போட்டாராம். இதனால் அவர் கடும் ஆத்திரத்தில் இருந்து வசந்த், தற்போது மீண்டும் வற்புறுத்தவே ஆத்திரம் தலைக்கேறிய வசந்த் அவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். அதற்காக சம்பவத்தன்று தயாராக கத்தி ஒன்றையும் எடுத்து வந்தாராம். வழக்கம்போல அன்று ஏற்பட்ட வாக்குவாதம் சற்று அதிகரிக்கவே, ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுள்ளார்வசந்த்.
உடனே தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பெண்ணின் கழுத்து, முதுகு, கை போன்ற பல்வேறு பகுதிகளில் சரமாரியாக குத்தி உள்ளார். அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடிச் சென்று பார்த்திருக்கிறார்ள். அதற்குள் வசந்த் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் போராடிக் கொண்டிருந்த பெண்ணை மீட்டு கொளத்தூர் பெரியார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த அப்பகுதியினர் போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடயங்களை சேகரித்தனர். குற்றவாளியைப் பிடிக்க தனிப்படை அமைத்த போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications