மானியம் பெற கட்டாயம்.. ஆதார் நம்பரை இணைக்க இணையதளத்தில் ‘லிங்க்’ வெளியிட்டது தமிழக மின்சார வாரியம்
சென்னை: 100 யூனிட் மின்சாரத்தை கட்டணம் இன்றி பெற விரும்புவோர் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று தமிழக மின்சார வாரியம் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், தற்போது மின் கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ள லிங்க் ஒன்றை தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.
அரசின் நலத்திட்டங்கள், மானியங்கள் பெற என அனைத்திற்கும் தற்போது ஆதார் எண் கேட்கப்படுகிறது.
செல்போன் சிம் கார்டு வாங்க வேண்டும் என்றால் கூட தற்போது ஆதார் கார்டு இருந்தால் தான் எளிதாக வாங்க முடியும் என்ற நிலை வந்துவிட்டது.

போலிகளை களைந்து
அரசின் எந்த திட்டங்கள் என்றாலும் முதலில் ஆதார் எண்கள் தான் கேட்கப்படுகின்றன. 12 இலக்கங்களை கொண்ட ஆதார் எண்களின் ஒருவரின் அனைத்து விவரங்களும் அடங்கியிருப்பதால் இதன் மூலம் மோசடிகளை தடுக்க முடியும் என்றும் போலிகளை களைந்து உண்மையான பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் சேரும் என்ற அடிப்படையிலும் ஆதார் அட்டைகள் நல்லத்திட்டங்களுக்கு அவசியம் கேட்கப்படுகிறது.

மானியங்களை தொடர்ந்து பெற
அந்த வகையில், தமிழக மின்சார வாரியம் மானியங்களை தொடர்ந்து பெற மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது. தமிழகத்தில் உள்ள 2.36 கோடி மின் நுகர்வோர்கள், 21 லட்சம் விவசாய இணைப்புகள், கைத்தறி விசைத்தறி தொழிளார்கள் மற்றும் 100 யூனிட்கள் இலவசமாக பெறும் மக்கள் தங்கள் மானியங்களை தொடர்ந்து பெற ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்சார வாரியம் அறிவுறுத்தியது.

ஆதார் எண்ணை இணைக்க லிங்க்
விரைவில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான 'லிங்' ttps://www.tnebltd.gov.in/adharupload/ மின்சார வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தமிழக மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி தெரிவித்து இருந்தார். அந்த வகையில், ஆதார் எண்ணை இணைப்பதற்கான லிங் ஒன்றை தமிழக மின்சார வாரியம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தற்காலிகமாக சோதனை அடிப்படையில் இந்த லிங் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு..
மின் மோசடிகளை தவிர்க்க மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை சேர்க்க வேண்டும் என்றும் இதன் மூலம் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு கொண்ட நுகர்வோர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கான மானிய மின்சாரம், இலவச மின்சார விநியோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட இருப்பதாகவும் மின்சார வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொழிற்சாலைகளுக்கு கட்டாயம் இல்லை
முதல் 100 யூனிட் இலவச மின்சாரம் பெறுபவர்கள், குடிசை வீட்டில் வசிப்பர்கள், கைத்தறி நுகர்வோர்கள் என மானியம் பெறும் அனைவரும் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் போன்ற மானியம் பெறாத நிறுவனங்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

100 யூனிட் இலவச சலுகை நிறுத்தமா?
மின்சார வாரிய அலுவலகத்தில் நேரடியாக மின்சார கட்டணத்தை செலுத்தும் நுகர்வோர்கள் தங்கள் ஆதார் அட்டையின் நகலை சமர்பித்து மின் கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 100 யூனிட் மின்சாரத்தை கட்டணம் இன்றி பெற விரும்புவோர் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று தமிழக மின்சார வாரியம் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்து இருந்தது. எனினும் ஆதார் எண்ணை இணைக்காவிட்டாலும் 100 யூனிட் இலவச சலுகை நிறுத்தப்படாது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications