Aadhav Arjuna: விஜய்யுடன் வந்த ஆதவ் அர்ஜுனா பையில் மது பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டதா? தவெக நிர்வாகி விளக்கம்
சென்னை: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லிக்கு தனி விமானத்தில் விஜய் புறப்பட்டார். அவருடைய பையில் கத்திரிக்கோல் இருந்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆதவ் அர்ஜுனாவின் (Aadhav Arjuna) பையில் மது பாட்டில் இருந்தததாகவும், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் இதனை தவெக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் மறுத்துள்ளார்.
கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக டெல்லி அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு விஜய்க்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர். இதற்காக இன்று விஜய் தனி விமானம் மூலம் புறப்பட்ட போது விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா பைகளில் இருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

சிபிஐ அதிகாரிகள் விசாரணை
தமிழக வெற்றிக் கழகம் என்ற புது கட்சியை தொடங்கியுள்ள விஜய் பல்வேறு மக்கள் சந்திப்புகளை நடத்தி வந்தார். அதன்படி கரூரில் மக்கள் சந்திப்பு கூட்டத்தின் போது நெரிசல் ஏற்பட்டதில் குழந்தைகள், பெண்கள் என 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுக்க பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது.
உச்ச நீதிமன்றம் ஆணைப்படி சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், ஆதவ் அர்ஜுனா, புஸ்சி ஆனந்த், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்ட பலரிடம் விசாரணை செய்யப்பட்டது. குறிப்பாக விஜய்யை டெல்லி தலைமை அலுவலகத்திற்கு அழைத்து இரண்டு நாட்கள் சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர்.
விமானத்தில் இருந்து இறக்கப்பட்ட விஜய்
இந்த நிலையில் தான் மீண்டும் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது. கடந்த 10 ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் விஜய் நேர்காணல் இருப்பதாக கூறி விலக்கு கேட்டார். இதையடுத்து நாளை நேரில் ஆஜராக விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. இதன்படி இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்ல விஜய் திட்டமிட்டார்.
வழக்கமாக விஜய் தன் கையில் ஒரு கருப்பு நிற பேக் கொண்டு செல்வது வழக்கம். அந்த வகையில் இன்று மதியம் 3 மணியளவில் அதே பேக்குடன் சென்னை விமான நிலையம் சென்றார். அப்போது அவரது பையில் கத்தரிக்கோல் இருந்தது தெரியவந்தது. இதனால் விமானத்தின் உள்ளே சென்றிருந்த விஜய்யை மீண்டும் கீழே இறங்குமாறு வெளியே அழைத்து வந்தனனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
ஆதவ் அர்ஜுனா பையில் மதுபாட்டில்?
விஜய் விமானத்திற்கு உள்ளே சென்ற நிலையில் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் அவரை விமானத்தில் இருந்து வெளியே அழைத்து வந்து சோதனை நடத்தினர். அவரது சொந்த உடைமை என்பதால் விஜய் முன்பு ஆய்வு செய்யப்பட்டது. இதையடுத்து வேறு ஏதேனும் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருக்கிறதான் என்பதை சோதனை செய்வதற்காக மீண்டும் மறு ஆய்வு செய்ய விஜய்யை அழைத்து சென்றனர். சுமார் 30 நிமிடம் இந்த சோதனை நடத்தப்பட்டு இருந்தது.
இதையடுத்து விஜய்யுடன் வந்த ஆதவ் அர்ஜுனா, ஜெகதீஷ், நிர்மல் குமார், விஜய்யின் தனி பாதுகாவலர் நயீம் உள்ளிட்டோரது உடைமைகளையும் ஆய்வு செய்தனர். அப்போது ஆதவ் அர்ஜுனா வைத்திருந்த பையில், உயர் ரக மதுபாட்டில்கள் இருந்ததாக செய்திகள் வெளியாகின. சமூக வலைத்தளங்களில் அதிகம் இது குறித்த தகவல் பரவியது. எனினும், இதனை தவெக தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
நிர்மல் குமார் விளக்கம்
இது குறித்து தவெக இணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் தனது எக்ஸ் பதிவில், குறிப்பிட்ட அந்த செய்தியை மேற்கோள் காட்டி, ஆதவ் அர்ஜுனா பையில் மதுபாட்டில் இருந்ததாக கூறப்படும் தகவல் முற்றிலும் வதந்தி என்றும், இப்படியொரு சம்பவம் நடக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
-
விஜய் பற்றி.. டெல்லிக்கு பறந்த உளவுத்துறை ரிப்போர்ட்.. ஆட்டத்தை கலைத்து ஆடப்போகும் அமித் ஷா? -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா? -
‘ஜனநாயகன்’ டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று மோசடி செய்தவர் தவெக வேட்பாளரா? சொந்த கட்சியினரே எதிர்ப்பு -
ஆம்புலன்ஸுக்கு வழி விடாதது.. சட்டவிரோதம் என தெரிந்தும் விஜய் செய்த செயல்! பாய்ந்த வழக்கு -
புதுச்சேரி ரங்கசாமி டபுள் சென்டிமென்ட் சக்ஸஸ்?விஜய்யும் அந்த எலுமிச்சை பழமும்.. அப்ப தான் CM யோகமா? -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
போகிற இடமெல்லாம்.. அஜித் போட்டோவை தூக்கிட்டு போகும் எடப்பாடி.. விஜய்க்கு கவுண்டரா? ஆனால்...! -
விஜய்க்கு அதிகாலையே சிம்ம சொப்பனமாக வந்த ஸ்டாலின்.. திருச்சியில் 'டீ' பிரேக் பாலிடிக்ஸ்.. செம மூவ்! -
சங்கீதா சொன்னது தான் உண்மையா? விஜயின் சொத்து பட்டியலை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள்! அடுத்த பஞ்சாயத்து -
வேட்பாளரை கூட சரியா பார்த்து நிறுத்த தெரியாத விஜய்! வழக்கு, சர்ச்சைகளில் சிக்கியவர்களுக்கு சீட் -
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு பின் விஜய் ஆதரவை கோருவோம்.. என்டிஏ கூட்டணி ஆட்சி உறுதி.. ராம்தாஸ் அத்வாலே! -
தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு சிக்கல்.. பெண் அளித்த புகாரின் பேரில் பாலியல் வழக்கு பதிவு












Click it and Unblock the Notifications