ஏபிஜெ அப்துல்கலாம் 6ஆம் ஆண்டு நினைவு தினம் - மரக்கன்றுகள் கொடுத்த மதுரை இயற்கை குழுவினர்
குடியரசு முன்னாள் தலைவர் மறைந்த டாக்டர் ஏபிஜெ அப்துல்கலாம் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரையில் மரக்கன்றுகள் இலவசமாக கொடுக்கப்பட்டது.
சென்னை: இயற்கை தொண்டு மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில் டாக்டர் ஏபிஜெ அப்துல்கலாம் ஐயா அவர்களின் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மற்றும் உலக இயற்கை பாதுகாப்பு தினத்திற்கு மதுரை இயற்கை குழுவின் சார்பாக இலவச மரக்கன்றுகள் மற்றும் உணவு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. பொது மக்கள் மரக்கன்றுகளை ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர். மக்களுக்கு மர நடவு பற்றிய விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் எபிஜெ அப்துல் கலாம் கடந்த 2015ஆம் ஆண்டு மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது மயங்கி விழுந்து மரணமடைந்தார். கலாம் மறைந்து இன்றுடன் ஆறாண்டுகள் நிறைவடைந்து விட்டன.

அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம் அருகில் உள்ள பேய்க்கரும்பு எனும் இடத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று 6ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அப்துல்கலாமின் நினைவிடம் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அப்துல்கலாம் அவர்களின் உறவினர்கள், மாவட்ட நிர்வாகம் சார்பில் மலர்கள் தூவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழகத்தில் பல ஊர்களில் அப்துல் கலாம் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பல ஊர்களில் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.
மதுரை இயற்கை குழுவின் சார்பாக இலவச மரக்கன்றுகள் மற்றும் உணவு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
சிறப்பு விருந்தினராக கார்த்திக், காவல் ஆய்வாளர், போக்குவரத்து மற்றும் திரு.அதியமான், காவல் உதவி ஆய்வாளர், கரிமேடு போக்குவரத்து காவல் நிலையம், மதுரை பங்கேற்று பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்கள். பொது மக்கள் மரக்கன்றுகளை ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர். மக்களுக்கு மர நடவு பற்றிய விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
இயற்கை அறக்கட்டளையின் எல்.கார்த்திக்சிவா நிறுவனர், திரு.எம்.பாலவேலாயுதம், மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் அஷ்லின் , குரு , பாண்டியராஜா , விக்னேஷ் , செல்லப்பாண்டி, ஆனந்த் கலந்து கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு அளித்தனர்.












Click it and Unblock the Notifications