2கே கிட்ஸை வறுத்து எடுத்த எதிர்நீச்சல் நடிகர் மாரிமுத்து.. எழுந்த சர்ச்சை.. மன்னிப்பு கேட்டார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2கே கிட்ஸ்கள் ஒழுக்கமின்றி நடந்துகொள்வதாகவும், ஆண்கள் மீசை வளர்க்க வேண்டும் பெண்கள்தான் நகம் வளர்க்க வேண்டும் என்றும் நடிகர் மாரிமுத்து தெரிவித்து இருக்கிறார். பைல் ரைடர்களின் ஓட்டுநர் உரிமத்தை பறித்து அவர்களின் 2 கைகளையும் வெட்டிவிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர், "இப்போது 2கே கிட்ஸ் என்று சொல்கிறார்கள். அவர்களுக்கு அடிப்படை ஒழுக்கம் இல்லை. ஒரு இடத்துக்கு சென்றால் செருப்பை கழட்டி விட தெரியவில்லை.

ஒழுக்கக்கேடான விசயங்கள் நிறைய இருக்கிறது. அவர்கள் பைக்கில் இண்டிகேட்டர் உடைந்த 6 மாதமாக தொங்குகிறது. அதை சரி செய்வதில்லை. பார்க்கிங் செய்ய தெரியவில்லை.

ஆண்களுக்கு மீசை.. பெண்களுக்கு நகம்

ஆண்களுக்கு மீசை.. பெண்களுக்கு நகம்

ஒரு இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளவில்லை. நகத்தை அதிகம் வளர்க்கிறார்கள். பெண்கள்தான் நகம் வளர்க்க வேண்டும். ஆண்கள் மீசைதான் அதிகம் வளர்க்க வேண்டும். நகம் வளர்ப்பது எவ்வளவு ஆரோக்கிய கேடு. ஒரு பேங்க் மேனேஜர் உன் நகத்தை பார்த்தால் லோன் கொடுக்க மாட்டான்.

முடி வெட்டுவது இல்லை

முடி வெட்டுவது இல்லை

முடிவெட்டும் கலாச்சாரம் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. இப்போது ஏதோ பக்கெட் கட்டிங் என்று வெட்டுகிறார்கள். முழுக்க வெட்டிவிட்டு மேலே மட்டும் முடி வைத்துள்ளார்கள். சேவிங் பண்ண தெரியவில்லை. அழகாக இருக்க தெரியவில்லை. ஒழுங்காக ஆடை அணிய தெரியவில்லை. இதை சொன்னால் என்னை கிழவன் என்பார்கள்.

பெண்களின் ஆடை

பெண்களின் ஆடை

கிழிந்த உடை அணிகிறார்கள். ஆண்கள் அணிந்தாலும் பரவாயில்லை, பெண்கள் அணிகிறார்கள். தன் அங்கங்களை காட்டும் உடையை லட்சணத்தோடு காட்ட வேண்டும். அதுதான் எல்லை. நிறைவாக எதையும் செய்வதில்லை. ஏன் 2கே கிட்ஸ் இப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. எப்போது மாறுவார்கள் என்று தெரியவில்லை. 4கே கிட்ஸ் காலத்தில் மாறுவார்களா?

50 வயதில் எப்படி இருப்பார்கள்?

50 வயதில் எப்படி இருப்பார்கள்?

இவர்கள் இன்னும் வயது ஆக ஆக, அவர்களுக்கும் 40 வயது ஆகும். அவர்களுக்கு 50 வயதாகும். அப்போது இவர்கள் எப்படி இருப்பார்கள் என்று பார்க்க எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதை பார்க்க நாம் உயிரோடு இருப்போமா என்று தெரியவில்லை. பார்ப்போம். கொஞ்சம் நீட்டாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

2கே கிட்ஸ் தவறாக உள்ளார்கள்

2கே கிட்ஸ் தவறாக உள்ளார்கள்

நாங்கள் எல்லாம் அப்படி இல்லை. 80களில் நாங்கள் இளைஞர்களாக இருந்தோம். அப்போதெல்லாம் ஆடைகளை நன்றாக துவைத்து, சலவை செய்து அழகாக இருப்போம். கடிகாரம் கட்ட ஆசை இருக்கும். ஆனால், வெறும் கையையும் அழகாக வைத்துக்கொள்வோம். இன்று 2கே கிட்ஸ் தவறாக இருக்கிறார்கள். அதை மாத்த வேண்டும்.

என்னை மன்னித்துவிடுங்கள்

என்னை மன்னித்துவிடுங்கள்

2கே கிட்ஸ்களே அண்ணன் தப்பா பேசி இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள். அண்ணன் இல்ல, அப்பா மாதிரி. என் மனதில் இருக்கும் ஆதங்கத்தைதான் சொன்னேன். கொஞ்சம் திருந்துங்கப்பா. பைக் ரைடர்ஸ் ரோட்டில் ஏன் அப்படி ஓட்டி செல்கிறார்கள் என்றே தெரியவில்லை. பெண்கள், ஆண்கள், கர்ப்பிணிகள் பயப்படுகிறார்கள்.

 கைகளை வெட்ட வேண்டும்

கைகளை வெட்ட வேண்டும்

அவர்களின் லைசன்ஸை வாங்கிக்கொண்டு 2 கைகளையும் வெட்டி எடுத்துவிட வேண்டும். சின்ன வயதிலிருந்தே எனக்கு கோபம் உள்ளது. ஆசிரியரையே நான் எதிர்த்து பேசி இருக்கிறேன். இந்த அறைக்குள் வந்திருக்கிறேன். இங்கு தவறாக இருப்பது மட்டும்தான் என் கண்ணுக்கு தெரியும். சும்மா பார்த்துவிட்டு கண்டுகொள்ளாமல் போகமாட்டேன்.

நான் சரியாக இருப்பேன்

நான் சரியாக இருப்பேன்

இப்படி பண்ணி இருக்கலாம். அப்படி பண்ணி இருக்கலாம் என்று சொல்லிக்கொண்டே இருப்பேன். இன்னொரு அலுவலகத்துக்கு செல்வேன். அங்கு கால் மிதி கோணலாக இருந்தால் அதை எடுத்து நேராக போட்டு செல்வேன். யாரோ செருப்பை அசிங்கமாக கழற்றிவிட்டு சென்றாலும் நான் குணிந்து கையில் எடுத்து சரியாக போட்டு செல்வேன். நான் அழகாக செருப்பை கழற்றிவிடுவேன்." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+