"மோடி தேநீர் விற்றதை நம்புகிறார்கள்.. நாட்டை விற்பதை நம்ப மறுக்கிறார்கள்!" தடதடக்கும் பிரகாஷ் ராஜ்
சென்னை: நடிகர் பிரகாஷ் ராஜ் பிரதமர் மோடியை விமர்சித்துப் பதிவிட்டுள்ள ட்வீட் இணையத்தில் இப்போது வைரலாகி உள்ளது.
Recommended Video
பிரபல திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்குக் கடந்த சில ஆண்டுகளாகக் குரல் கொடுத்து வருகிறார். பல விஷயங்களில் தனது நிலைப்பாட்டையும் வெளிப்படையாகக் குறிப்பிட்டு வருகிறார்.
மேலும், பிரகாஷ் ராஜ் தொடர்ச்சியாகப் பிரதமர் நரேந்திர மோடியையும் ஆளும் மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளை விமர்சித்தே வருகிறார்.

பிரகாஷ் ராஜ்
கடந்த 2017 செப். மாதம் பிரபல எழுத்தாளர் கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்ட பின்னர், நடிகர் பிரகாஷ் ராஜ் சமூக ஊடகங்களில் அரசியல் ரீதியாகத் தொடர்ச்சியாகத் தனது கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். கடந்த 2019இல் பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியில் கூட அவர் சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்கினார். அந்தத் தேர்தலில் அவரால் பெற்ற பெற முடியவில்லை என்றாலும் கூட 3ஆம் இடம் பிடித்தார்.

தேநீர் விற்றவர்
அதன் பின்னரும் கூட அவர் ஆளும் பாஜகவை அவ்வப்போது விமர்சித்தே வருகிறார். அவர் தற்போது பிரதமர் மோடியை நேரடியாக விமர்சித்துப் பதிவிட்ட ட்வீட்டை இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர் மோடி தேநீர் விற்றதை நம்பியவர்கள். அவர் நாட்டையும் விற்றுக் கொண்டிருப்பதை நம்ப மறுக்கிறார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

முதல்முறை இல்லை
ஆளும் பாஜக அரசை அவர் விமர்சிப்பது இது முதல்முறை இல்லை. டெல்லி ஜஹாங்கிர்புரியில் இஸ்லாமியர்களின் வீடுகள் ஆக்கிரமிப்பு நிலங்களில் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி அவற்றை இடிக்க மாநகராட்சி உத்தரவிட்டது. இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கட்டிடங்களை இடிக்க இடைக்காலத் தடை விதித்தது. ஆனால், நீதிமன்ற ஆணை தங்களுக்குக் கிடைக்கவில்லை எனக்கூறி அதிகாரிகள் ஏராளமான வீடுகளை இடித்துத் தள்ளினர்.

நாட்டை அழித்துவிடுவார்
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில், இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர். இதுகுறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டரில், "சிலைகள் கட்டப்படுகின்றன.. வீடுகள் இடிக்கப்படுகின்றன.. மக்கள் பேசாவிட்டால் கூடிய விரைவில் நாட்டையும் அவர்கள் அழித்துவிடுவார்கள்" என்று பதிவிட்டு இருந்தார்.

தேர்தல் ஆலோசகர் பிகே
பிரகாஷ் ராஜ் கடந்த சில மாதங்களாகவே நேரடி அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் பிரபல தேர்தல் ஆலோசகர் தெலங்கானா முதல்வர் கேசிஆரை சந்தித்து, தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தி இருந்தார். அப்போது பிரகாந்த் கிஷோர் உடன் பிரகாஷ் ராஜும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications