Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனோ, கருவாடு வந்திருக்கு! ராமநாதபுரம் பார்சலில் என்னதான் ரகசியம்? அரசு அதிகாரிகளே ஆசையாக கேட்டாங்களா

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: தமிழகத்தில் தேர்தல் நெருங்கி விட்டது.. அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி நடைமுறைக்கு வந்துள்ள கட்டுப்பாடுகள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் திரைக்கு பின்னால் நடக்கும் சில சுவாரசியமான நகர்வுகள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளன., விதிகளுக்கு உட்பட்டு நடப்பதாகக் காட்டிக்கொண்டாலும், சில குறிப்பிட்ட இடங்களிலிருந்து வரும் "பார்சல்கள்" அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. அது என்ன?

இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் நடத்தை விதிகள் தற்போது மாநிலம் முழுவதும் மிகத் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, வாக்காளர்களுக்குப் பணமோ அல்லது பரிசுப் பொருட்களோ வழங்குவது தடையை மீறிய செயலாகக் கருதப்படுகிறது.

Ramanathapuram

தேர்தல் நடத்தை விதிகள்

அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டங்கள் நடத்தவும், பிரச்சார வாகனங்களைப் பயன்படுத்தவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கணக்கில் வராத பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைக் கொண்டு செல்வதைத் தடுக்க மாநில எல்லைகளிலும், முக்கியச் சாலைகளிலும் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விதிகள் அரசியல்வாதிகளுக்கு மட்டுமன்றி, அரசு அதிகாரிகளுக்கும் பொதுவானவை என்பதால் நிர்வாக ரீதியாகக் கடும் கெடுபிடிகள் நிலவி வருகின்றன.

இத்தகைய பரபரப்பான சூழலுக்கு மத்தியில்தான், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையின் பாரம்பரியத் தின்பண்டங்கள் தமிழக அரசியல் களத்தில் திடீர் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

கீழக்கரை கருவாடு

கீழக்கரை என்றாலே அதன் தொன்மையான கலாச்சாரம், நாவூறும் உணவுகளுக்கு ரொம்பவே ஃபேமஸ்.. அங்கு தயாரிக்கப்படும் தொதல், முந்திரி பருப்பு அல்வா, கலகலா, தம்மடை, வெள்ளரியாரம், எள்ளு கொழுக்கட்டை, புல்லு கொழுக்கட்டை போன்ற தின்பண்டங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. இவை தவிர, கருப்பட்டி மற்றும் சீனி ஓட்டு மாவு, சீபாபணியாரம், நெய் மைசூர்பாகு, சோன்பப்டி எனப் பலவகை இனிப்புகள் இன்றும் பழமை மாறாமல் அங்கு தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த பலகார பொருட்கள், மதுரை, திருச்சி, கோவை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். ஆனால், இப்போது தேர்தல் காலம் என்பதால் இந்த பார்சல் கலாச்சாரம் ஒரு படி மேலே சென்றுள்ளதாம்.

அதாவது ராமநாதபுரம் பகுதிக்கு ஆய்விற்காக வரும் தேர்தல் உயர் அலுவலர்கள், முக்கிய அதிகாரிகள் மற்றும் வெளி மாவட்ட அரசியல் பிரமுகர்கள் பலரும், இந்தத் உணவுப்பொருட்களுக்கு சுவைக்கு அடிமையாகி விட்டார்களாம்.. அங்கு வரும் அதிகாரிகள், "கீழக்கரையில் என்னப்பா விசேஷம்? அதை முதலில் பேக்கிங் செய்து அனுப்புங்கள்" என்று அன்பு கட்டளையிடும் நிகழ்வுகள் அப்போது அதிகரித்து விட்டதாம்.

ராமநாதபுரம் பார்சல்

இந்த ஸ்வீட் இனிப்பு வகைகளுடன் சேர்த்து, கீழக்கரையின் இன்னொரு ஸ்பெஷாலிட்டி, சீலா கருவாடு தான்.. ராமநாதபுரம் சீஷா கருவாட்டின் டேஸ்ட்டுக்கு முன்னால், வேறு கருவாடுகள் நிற்க முடியாது என்பார்கள்..

மற்ற ஊர்களில் கிடைக்கும் கருவாட்டை விட இதன் தரம் அதிகம் என்பதால், இனிப்புகளுடன் சீலா கருவாட்டையும் சேர்த்துச் சிறப்புப் பேக்கிங் செய்யப்பட்டுப் பிரமுகர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறதாம்..

தேர்தல் கட்டுப்பாடுகள் ஒருபுறம் இருந்தாலும், கீழக்கரையில் இருந்து இப்படியொரு பார்சல்கள், ஆபீஸர்களுக்கு அனுப்பப்படுகிறதாம்.. அன்பளிப்பாக கொடுக்கப்படும் இந்த உணவுகளைத் தட்டிப்பறிக்க யாருக்கும் மனமில்லாததால், தேர்தல் நேரத்தில் கீழக்கரைத் தின்பண்டங்களுக்கு இப்போது பயங்கரமான கிராக்கி ஏற்பட்டுள்ளதாம்...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+