நடிகர் விஜய் வருமான வரி வழக்கில் வைத்த வாதம்.. இதுவும் ஊழல் தானே.. பாயிண்டை பிடித்த நெட்டிசன்கள்
சென்னை: தமிழக அரசியல் களத்தில் முதல் முறையாக இறங்கியுள்ள நடிகர் விஜய்க்கு, சட்ட ரீதியாகப் பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக சென்னை உயர் நீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. வருமானத்தை மறைத்ததாக, வருமான வரித்துறை விதித்த ரூ.1.50 கோடி அபராதத்தை எதிர்த்து நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்தத் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் விஜய்க்கு எதிராகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கடந்த 2015-16ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்தார். அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக கூறியிருந்தார். இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்தது வருமான வரித்துறை. அதில் 'புலி' படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என வருமான வரித்துறை கண்டறிந்தது.

விஜய்க்கு 1.50 கோடி அபராதம்
மேலும் வருமானத்தை மறைத்ததற்காக நடிகர் விஜய்க்கு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கடந்த 2022ஆம் ஆண்டு வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து வருமான வரித்துறையின் உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்திருந்தது
அபராதம் செல்லும்
இந்த வழக்கில் விஜய் தரப்பு வாதிடுகையில், சட்டப்படி அபராத உத்தரவை 2019 ஜூன் 30ஆம் தேதிக்கு முன்பே பிறப்பித்திருக்க வேண்டும், ஆனால் காலதாமதமாக 2022ம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அதனை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் வருமான வரிச்சட்டப்படி விஜய்-க்கு அபராதம் விதித்தது சரிதான் என வருமான வரித்துறை வாதிட்டது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்திந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார ராமமூர்த்தி, விஜய் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து அவருக்கு வருமான வரித்துறை விதித்த ரூ.1.50 கோடி அபராதம் செல்லும் என்றும் உத்தரவிட்டார்.
இது ஊழல் இல்லையா
விஜய் தரப்பு வாதிட்டதை வைத்து விமர்சிக்கும் நெட்டிசன்கள், வருமானத்தை விஜய் மறைத்தது உண்மை தானே என்று கேள்வி எழுப்பினார்கள். இப்போது இந்தத் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் விஜய்க்கு எதிராகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. "மக்களுக்கு நல்லது செய்யப் போகிறேன் என்று அரசியலுக்கு வந்திருக்கும் ஒருவர், தனது சொந்த வருமானத்தையே முறையாகக் காட்டாமல் வரியை மறைத்தது ஏன்?" என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். வரியைச் சரியாகச் செலுத்தாதது ஒரு வகை நிதி முறைகேடு அல்லது ஊழல் இல்லையா? என்ற விவாதங்களை கிளப்பி வருகின்றனர்.
டிக்கெட் விலை சர்ச்சை
இதற்கிடையே, விஜய்யின் திரைப்படங்கள் வெளியாகும் போது தியேட்டர்களில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே உள்ளது. அதேபோல் படம் வெளியாகும் அன்று 2000 வரை டிக்கெட் கட்டணம் விற்கப்படும் நிலையில, அது குறித்து விஜய் எந்தக் குரலும் கொடுப்பதில்லை என்பதும் அவர் மீதான மற்றொரு புகாராக இருந்து வருகிறது.
நடிகர் விஜய்க்கு பின்னடைவு
"சாதாரண ரசிகர்களின் பாக்கெட்டைப் பாதிக்கும் டிக்கெட் விலை உயர்வைக் கண்டிக்காத விஜய், இப்போது வருமான வரிச் சிக்கலிலும் மாட்டிக்கொண்டிருப்பது அவரது அரசியல் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும்" என அரசியல் விமர்சகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், வருமானத்தை மறைத்ததற்காக விதிக்கப்பட்ட அபராதம் செல்லும் என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு நடிகர் விஜய்க்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
-
ஷாக்! விஜய் வேட்புமனுவிலேயே செய்த பெரிய பிழை! திருச்சி கிழக்கு, பெரம்பூரில் நிராகரிக்கப்பட வாய்ப்பு? -
போகிற இடமெல்லாம்.. அஜித் போட்டோவை தூக்கிட்டு போகும் எடப்பாடி.. விஜய்க்கு கவுண்டரா? ஆனால்...! -
10 சீட்டுகளை வெல்லும் தவெக.. 23.9 சதவிகித வாக்குகளை கைப்பற்றும் விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு -
Vijay: உங்கள் விஜய்.. நா வரேன்.. விசிலடிக்க ரெடியா? தவெகவின் தேர்தல் பிரச்சார பாடல் வெளியீடு! -
முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக் -
நல்ல நேரத்திற்காக அரை மணி நேரம் காத்திருந்த விஜய்.. திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்கல் செய்தார் -
தேர்தலுக்கு பின்.. விஜயுடன் கூட்டணி.. பாஜக போடும் மாஸ்டர் பிளான்.. முக்கோண பிரம்மாஸ்திரம்! -
கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு! -
விஜய் பற்றி என்னால் தப்பா பேச முடியாது.. ஏனென்றால்? ஓபனாக பேசிய சுந்தர் சி.. பாராட்டும் தவெக ரசிகர்கள் -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன் -
ஆதவ் அர்ஜுனா கார் மோதி போலீஸ்காரர் கால் முறிந்தது.. திருச்சி விஜய் பிரச்சாரத்தில் அதிர்ச்சி -
Seeman: என்னாது 150 கட்சிகளுடன் விஜய் கூட்டணியா? சீமான் சொன்ன அந்த வார்த்தை!











Click it and Unblock the Notifications