என் பாடி வெயிட்டால் தூக்கு கயிற்றிலிருந்து என் சடலத்தை கஷ்டப்பட்டு இறங்குனாங்களாம்.. நடிகை அஞ்சு
சென்னை: என் சடலத்தை உடல் எடை காரணமாக கஷ்டப்பட்டு இறக்குனாங்க என என்னை பற்றிய வதந்திகள் வரும் போது மனம் வேதனை அடைகிறது.
உதிரிப்பூக்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் பேபி அஞ்சு. இவர் மீண்டும் கோகிலா, கேளடி கண்மணி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். கேளடி கண்மணியில் கதாநாயகி இவர்தான்.
பின்னர் பட வாய்ப்புகள் குறைந்ததால் சில படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்திருந்தேன். எனினும் அந்த வாய்ப்புகள் அஞ்சுவுக்கு தொடர்ந்து கிடைக்கவில்லை. இதனால் அவர் 1996 ஆம் ஆண்டு கன்னட திரையுலகிற்கு சென்றார்.

நடிகர் டைகர் பிரபாகர்
அப்போது அங்கு நடிகர் டைகர் பிரபாகரனுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலானது. தன்னை விட 31 வயது அதிகமான நடிகரை அஞ்சு திருமணம் செய்து கொண்டார். அந்த நடிகர் மூலம் அஞ்சுக்கு ஒரு குழந்தை பிறந்தது. இந்த நிலையில் அஞ்சு, பிரபாகரனுக்கு 4ஆவது மனைவி என்பது தெரிந்தவுடன் அஞ்சுவின் மனம் வேதனையடைந்தது.

31 வயது வித்தியாசம்
இதுகுறித்து பிரபாகரனுடன் வாக்குவாதம் செய்தார். அவருடன் இருந்த போது அஞ்சுக்கு 17 , 18 வயது இருக்கும். இளம் வயதில் ஒரு மனைவி இருக்கிறார் என்ற போதிலும் பிரபாகரனுக்கு இன்னொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதை அறிந்த அஞ்சு, பிரபாகரனை விவாகரத்து செய்துவிட்டார்.

வளசரவாக்கம் வீட்டில்
தன் மகனுடன் வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் அஞ்சு வசித்து வருகிறார். இந்த நிலையில் அண்மையில் ஒரு டிவி சேனலுக்கு அஞ்சு ஒரு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் நான் தற்கொலை செய்து கொண்டதாகவும் என் உடல் எடை காரணமாக எனது சடலத்தை கஷ்டப்பட்டு இறக்கியதாகவும் செய்திகள் வெளியாகின.

வேதனை
அதை அறிந்து நான் மிகவும் வேதனையடைந்தேன். நடிகையாக இருந்து திடீரென திரையில் காணாமல் இருந்தால் இப்படியெல்லாம் நடக்கும். என்னை இயக்குநர் வசந்த் துரத்தி துரத்தி காதலித்ததாகவும் ஒரு வதந்தி வந்தது. இதனால் நான் அழுது கொண்டே இருந்தேன். பிறகு இயக்குநர் மகேந்திரன் சார்தான் எனக்கு சினிமா பிரபலங்கள் மீது இப்படியெல்லாம் வதந்தியை கிளப்புவார்கள் என்பதை புரிய வைத்தார்.












Click it and Unblock the Notifications