அதிமுகவின் தலைமையைக் கைப்பற்றுவாரா சசிகலா - குரு பெயர்ச்சி சாதகமா? பாதகமா?
சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா தனது அதிரடி அரசியலை ஆரம்பித்து விட்டார். அவருக்கு தலைமை ஏற்கும் தகுதி இருக்கிறதா? சசிகலாவிற்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
சென்னை: ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை சசிகலாவிற்கு எல்லாமே சாதகமாக நடந்தது. ஜெயலலிதா இறந்த பின்னர் அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை அடைந்தாலும் அவருக்கு நிலைக்கவில்லை. மீண்டும் அதிரடி அரசியலை ஆரம்பித்து விட்டார். அதிமுகவில் சசிகலாவிற்கு தலைமையேற்கும் தகுதியும் யோகமும் இருக்கிறதா நிகழப்போகும் குருப்பெயர்ச்சி சசிகலாவிற்கு சாதகமாக இருக்குமா? பாதகமாக இருக்குமா என்று பார்க்கலாம்.
சசிகலா பிறந்தது 18/08/1954. கடக லக்கினம் மீனம் ராசி ரேவதி நட்சத்திரம். அவரது ஜாதகப்படி இப்போது ராகு கேது பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, குரு பெயர்ச்சி என கிரகங்கள் எல்லாமே சாதகமாக உள்ளன. லாப ஸ்தானத்தில் கிரகங்கள் கூடியிருந்தாலும் அவருக்கு தற்போது தசா புத்தியை பார்த்தால் ராகு திசை நடைபெறுகிறது.
ராகு திசை 18 ஆண்டுகள் உள்ளன. அவருக்கு செவ்வாய் திசை முடியும் தருணத்தில் சிறைக்கு போனார். ராகு திசையில் சிறை செல்லும் அளவிற்கு அவமானங்களை பட்ட சசிகலாவிற்கு இப்போது உடல்நல பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் செவ்வாயும் ராகுவும் இணைந்துள்ளதுதான். இதன் காரணமாக செவ்வாய் திசையில் படாத பாடு பட்டு சிறைக்கு சென்று ராகு திசையில் வீடு திரும்பினார்.

சசிகலா ஜாதகத்தில் யோகங்கள்
பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பாவ கிரகங்கள் இருந்தாலே அந்த தசாபுத்தி நடைபெறும் போது பல அவமானங்களை பட வேண்டும் என்பது விதி. அதன் பலனைத்தான் சசிகலா இப்போது அனுபவிக்கிறார் என்கின்றனர் ஜோதிடர்கள். சசிகலா ஜாதகத்தில் கஜ கேசரி யோகம், முசல யோகம், உச்சம் பெற்ற சனி,குரு சண்டாள யோகம் என பல யோகங்கள் இருந்தாலும் அவருக்கு ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகே சிரமத்திசைதான். அதனால்தான் முதல்வராக வேண்டும் என்று நினைத்த சசிகலாவினால் வெற்றி பெற முடியாமல் போனது என்பது ஜோதிடர்களின் கருத்தாகும்.

விஐபிக்கள் நட்பு
சசிகலா ஜாதகத்தில் 10ஆம் இடத்தை லக்கினாதிபதி சூரியன் பார்த்ததால் உலகம் அறிந்த நபராக ஆனார். பொதுவாக ஒருவர் நாடறிய வேண்டும் என்றால், மக்கள் மத்தியில் புகழ் பெற்றவராக இருக்க வேண்டும் என்றால் 10ஆம் இடத்தில் ஒரு பாப கிரகம் அல்லது பார்வை இருக்க வேண்டும். பொதுவாக திரிகோணாதிபதி திரிகோணம் ஏறினால் அரசர்களின் தொடர்பு, பெரும் பதவியில் இருப்பவர்களின் நட்பு நிச்சயம் கிடைக்கும். மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் நட்பும் கிடைத்தது. ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரியாக உயர்ந்தார்.

சிறை சென்ற சசிகலா
ஜெயலலிதாவின் பின்னாடியே இருந்தவர் சசிகலா. அவர் உயிரோடு இருக்கும் வரை எல்லாமே சாதகமாக நடந்தது. கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் கட்சியில் முக்கிய பொறுப்புக்கு வந்தார். முதல்வராக நினைத்தால் அது முடியவில்லை. மாறாக சிறை சென்றார். பதவிகள் இழந்து புகழ் செல்வாக்கு இழந்து சிறையில் வாடினார்.

மீன ராசிக்காரர்களுக்கு எப்படி
இந்த ஆண்டு துவக்கத்தில் அவர் சிறையில் இருந்து விடுதலையானலும் சில காலங்கள் அமைதியாகவே இருந்தார். குரு அதிசாரமாக கும்ப ராசிக்கு போன போது அமைதியாக இருந்த சசிகலா, குரு மீண்டும் மகர ராசிக்கு திரும்பி பின்னர் தனது அதிரடி அரசியலை ஆரம்பித்து விட்டார். இது லேசான சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நிகழப்போகும குரு பெயர்ச்சி மீன ராசியில் பிறந்த சசிகலாவிற்கு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
Recommended Video

குரு பார்வை எப்படி
குரு பகவான் மீன ராசிக்கு 12ம் வீட்டில் அமர்ந்து 5ஆம் பார்வையால் தங்களின் ராசியின் 4ஆம் இடமான வித்யா ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் 6ம் இடமான ருணம், ரோகம், சத்ரு ஸ்தானத்தையும் , 9ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு 8ம் இடமான ஆயுள் ஸ்தானத்தையும் பார்க்கிறார். ராசிநாதன் குரு நீசம் பெற்று கஷ்டங்கள் கொடுத்து வந்த நிலையில் தற்பொழுது பன்னிரண்டில் மறைந்தாலும் இடம் கொடுத்த சனி பகவான் லாப ஸ்தானத்தில் ஆட்சி பெறுவது சிறப்பாகும்.

நிதானம் தேவை
குரு மீன ராசிக்கு தனம் மற்றும் பாக்கிய அதிபதியாக விளங்கும் செவ்வாய் சாரத்தில் கும்பத்தில் நுழைவது உடன் குருவின் பார்வை செவ்வாய்க்கு கிடைப்பது நன்மையைத் தருகிறது. வெற்றியைத் தரக்கூடிய 11ஆம் இடத்தில் அமர்ந்திருந்த குரு தற்போது அங்கிருந்து இடம் பெயன்று 12ம் இடத்திற்கு வந்து அமர்வது சற்று சிரமத்தினைத் தரக் கூடும். நினைப்பது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும் என்பதால் எதையும் திட்டமிட்டு செய்ய முடியாது. ஓய்வற்ற நிலையின் காரணமாக உடலில் சுகவீனம் தோன்றும். உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

பயம் பதற்றம் தேடி வரும்
மீன ராசியின் மீது சனியின் பார்வை பதிவதால் எந்த ஒரு முடிவும் தீர்க்க ஆலோசனை செய்யாமல் அவசரமாக செயல்பட வேண்டாம். குருவே தங்களுக்கு பத்தாம் அதிபதியாக வந்து தொழிலை நிர்ணயம் செய்வது உடன் 12ஆம் வீட்டில் மறைவதால் தொழில் சார்ந்த பிரச்சினைகளில் அதிக கவனம் இருக்க வேண்டும். ஆன்மிகம் சார்ந்த பணிகளுக்காக அதிகம் செலவழிப்பீர்கள். ஆன்மிக ரீதியாக தொலைதுாரப் பிரயாணங்கள் செல்ல நேரிடும். தத்துவ சிந்தனைகள் மனதினை அதிகம் ஆக்கிரமிக்கும். ஆலோசனை கேட்காமல் எடுக்கும் எந்த ஒரு முடிவும் தோல்வியையே தரும், வீணான கற்பனைகளால் தேவையற்ற பயமும் இருந்து வரும்.

சாதகமற்ற குரு பெயர்ச்சி
சசிகலாவிற்கு இது லாப சனி காலமாக இருந்தாலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்வது சாதகமாக இருக்காது. அதிமுகவிற்கு எதிராக அவர் எதுவும் செய்ய மாட்டார். நிறைய சட்ட சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. ஜெயலலிதாவின் தோழியாக இருந்தார் என்ற ஒரே காரணத்திற்காக அவரை தலைவியாக ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. சசிகலாவின் ஜாதகப்படி அரசியலில் பெரிய அளவில் சாதிக்க வாய்ப்பு இல்லை. இந்த குரு பெயர்ச்சியும் சுமாரான பலனைத் தருவதால் எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்யாமல் அமைதியாக இருப்பதே அவருக்கு நல்லது.
-
Iran-US war LIVE: போர் நிறுத்தம் அறிவித்தாலும் தொடரும் தாக்குதல் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
Edappadi: "எடப்பாடியால்" வந்த வினை! தகர்ந்த "234" கனவு! Form கூட fillup செய்ய தெரியாதா? விஜய் கோபம்? -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்! -
லோன் எடுத்து இருக்கீங்களா? வருகிறது செம சலுகை.. மத்திய அரசு போடும் முக்கிய திட்டம்.. யாருக்கு பயன்? -
கோவையில் தோட்டம்.. சென்னையில் பிளாட்.. வானதி சீனிவாசன் சொத்து பட்டியல் -
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications