சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"இவருமா".. ஆரம்பத்தில் சசிகலா விசுவாசி.. இப்போது "தூது விட்டு துண்டு போட்டு".. கலகலத்துபோன அமைச்சர்

முக ஸ்டாலினுக்கு அமைச்சர் தரப்பில் ஒரு மெசேஜ் வந்ததாம்

Google Oneindia Tamil News

சென்னை: அடுத்து திமுகதான் ஆட்சி அமைக்குமோ என்ற ரீதியில், களத்தில் பேச்சுகள் நடந்து வருகின்றன.. அதேசமயம், இத்தகைய பேச்சுக்கள் அதிமுக தரப்பில் ஒருசில மாற்றங்களையும் அதிர்வுகளையும் ஏற்படுத்த தொடங்கி உள்ளதாம்.

அந்த வகையில், அதிமுக அமைச்சர் ஒருவர், திமுக தரப்பை சமாதானம் செய்து, தன் மீதான அதிருப்திகளை களையும் முயற்சியை மேற்கொண்டு வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

இத்தனைக்கும் அந்த அமைச்சர் ஆரம்பத்தில் தீவிரமான சசிகலா ஆதரவாளர் ஆவார்.. சசிகலா குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர்.. ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது அம்பலமானதால்தான், இவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

ஆதரவு

ஆதரவு

மத்தபடி, இந்த 4 வருட காலம் சசிகலாவை எந்த ரூபத்திலும் இவர் விமர்சித்ததும் இல்லை. சசிகலாவுக்கு சில அமைச்சர்கள் ஏற்கனவே வெளிப்படையான ஆதரவை தெரிவித்த நிலையில், குழப்பத்தில் 2, 3 அமைச்சர்கள் உள்ளனர் என்று சொல்லப்பட்டது.. அப்போது, ஒருவேளை சசிகலா பக்கம் தாவுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இப்படிப்பட்ட சமயத்தில்தான், சசிகலா ரிலீஸை போஸ்டர்கள் இவரது சொந்த தொகுதியிலேயே ஒட்டப்பட்டது பெரும் பரபரப்பை கிளப்பியது.

 அழுது பிரச்சாரம்

அழுது பிரச்சாரம்

ஆனால், நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரத்தில் தொகுதிக்குள் அழுது அழுது, புலம்பி புலம்பி தொகுதிக்குள் வாக்குகள் கேட்டதையும் மக்கள் விக்கித்து பார்த்தனர். இவரை பற்றின செய்திதான் இப்போதும் பரபரத்து வருகிறது..திமுக தரப்பு முக்கியமாக நான்கைந்து அமைச்சர்களை குறி வைத்துதான் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியது.. 4 அமைச்சர்களை தோற்கடித்தால், அமைச்சர் பதவி என்ற வாய்மொழி உத்தரவு தரப்பட்டதாகவும் செய்திகள்கூட கசிந்தன..

 மேல்முறையீடு

மேல்முறையீடு

அதில் ஒரு அமைச்சர்தான் இவர்.. இவர் மீது திமுக ஆரம்பத்தில் இருந்தே கடும் அதிருப்தியில் உள்ளது.. இவரது வழக்குகள் குறித்து பலமுறை மேல்முறையீடு செய்தபோதெல்லாம், அதில் ஏமாற்றமே கண்டது. அமைச்சர் பதவி எப்படியாவது பறிக்கப்பட்டுவிடும் என்று கணக்குபோட்டு வந்தநிலையில் திடீரென கொரோனா தமிழ்நாட்டில் பரவவும், அமைச்சரின் மவுசு உச்சத்துக்கு கூடிவிட்டது.

வழக்குகள்

வழக்குகள்

ஒருவேளை இனி, திமுக தரப்புக்கு ஆதரவாக தேர்தல் ரிசல்ட் வந்தால், அமைச்சர் மீதான வழக்குகள் மீண்டும் தூசு தட்டி எடுக்கப்படுமா அல்லது விரைவுபடுத்தப்படுமா என்ற கலக்கம் வந்துள்ளதாம்.. அதனாலேயே அமைச்சர் தரப்பில் இருந்து முக்கிய புள்ளி ஒருவர், திமுக தரப்பு பிரமுகரிடம் பேசினாராம்..

 திமுக புள்ளி

திமுக புள்ளி

"ஆட்சிக்கு வந்தாலும், பழைய வழக்கு விசாரணை பற்றி அதிக அளவு நோண்ட வேண்டாம், உங்க தலைவர்கிட்ட சொல்லுங்க" என்ற ரீதியில் வேண்டுகோள் வைத்தாராம்.. இதற்கு அந்த திமுக புள்ளி எந்த பதிலையும் ஆதரவாக சொல்லவும் இல்லையாம்.. அமைதியாக கேட்டுக் கொண்டாராம்.. இப்படி ஒரு தகவல் கசிந்து வருகிறது.. இது உண்மையா என்று தெரியவில்லை.. ஒருவேளை உண்மையிலேயே சமாதான பேச்சு நடத்தப்படும் முயற்சியா அல்லது வேண்டுமென்றே கிளப்பிவிடப்படும் வதந்தியா என்று தெரியவில்லை.

 கொங்கு மண்டலம்

கொங்கு மண்டலம்

ஆட்சிக்கு வந்தால், பொள்ளாச்சி ஜெயராமன் மகன் முதல் கொங்கு மண்டல அமைச்சர் வரை உள்ள வழக்குகளை விரைவுபடுத்தி தண்டனை வாங்கியே தருவோம் என்று ஸ்டாலினும், உதயநிதியும் செல்லுமிடமெல்லாம் சீறி வந்த நிலையில், இந்த அமைச்சர் மீதான நடவடிக்கை பற்றி எதுவுமே தெரியவில்லை.. முதலில் ரிசல்ட் வரட்டும்.. பார்ப்போம்..!

English summary
ADMK Minister message to MK Stalin, sources say
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X