காயமடைந்த பும்ரா.. ரீப்ளேஸ்மெண்ட் வீரர் யார்? பிசிசிஐ முன் இருக்கும் இரண்டு ஆப்ஷன்கள்!
சென்னை: டி20 உலகக்கோப்பைத் தொடரில் இருந்து காயம் காரணமாக பும்ரா விலக உள்ள நிலையில், அவருக்கு மாற்றாக தேர்வு செய்யப்படப் போவது ஷமியா அல்லது பிரசித் கிருஷ்ணா என்ற விவாதம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன் பும்ரா, ஜடேஜா இல்லாமல் டி20 உலகக்கோப்பையை பார்க்க தயாரா என்று ரசிகர்களை கேட்டிருந்தால், கொஞ்சம் மிரண்டிருப்பார்கள். ஏனென்றால் சர்வதேச கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத வீரர்களாக வலம் வரும் இருவரும், இந்திய அணிக்காக கோப்பையை வெல்ல காரணமாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் முதுகில் ஏற்பட்டிருக்கும் காயம் காரணமாக அந்தக் காயத்தை மேலும் பெரிதுபடுத்த விரும்பாததால் பும்ராவை உலகக்கோப்பையில் ஆடவைக்க வேண்டாம் என பிசிசிஐ முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

பும்ரா விலகல்
வேகப்பந்துவீச்சாளர்களையும், காயத்தையும் எப்போதும் பிரித்துப்பார்க்க முடியாது. ஆனாம் பும்ராவின் தவறான நேரத்தில் காயமடைந்தது தான் இந்திய அணிக்கு பெரும் பலவீனமாக மாறியுள்ளது. சில வாரங்களில் டி20 உலகக்கோப்பைத் தொடர் தொடங்கவுள்ள நிலையில், ஜடேஜா மற்றும் பும்ரா ஆகியோர் அடுத்தடுத்து காயமடைந்து வெளியேறியுள்ளனர். ஜடேஜாவை ரீப்ளேஸ் செய்வதே பெரும் சிக்கலாக இருக்கும் சூழலில், டெத் ஓவர்களுக்கு என நேந்துவிடப்பட்ட பும்ராவை ரீப்ளேஸ் செய்யப்போகும் வீரர் யார் என்பதே பெரும் சிக்கலாக அமைந்துள்ளது.

ஷமியை தேர்வு செய்யுமா பிசிசிஐ?
ஏனென்றால் இந்தியாவில் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என்று பார்த்தால் ஷமி மட்டுமே அனுபவ வீரராக இருக்கிறார். ஆனால் அவரையும் இந்திய அணி நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளாக டி20 தொடர்களில் பயன்படுத்துவதை தவிர்த்து வந்தது. ஆனால் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி கடந்த தொடரில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

சிராஜ், தீப்க் சஹர்-க்கு வாய்ப்பு?
இதனால் பெரும்பாலும் பும்ராவின் இடத்திற்கு ஷமியையே இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் தீபக் சஹர், சிராஜ், உமேஷ் யாதவ் ஆகியோர் பவர் ப்ளே ஓவர்களில் மட்டுமே சிறப்பாக வீசக் கூடியவர்கள். புதிய பந்தில் இரு பக்கமும் எளிதாக ஸ்விங் செய்யும் இவர்கள், டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கக் கூடியவர்கள்.

பிரசித் கிருஷ்ணா
அதேபோல் இளம் வீரரான பிரசித் கிருஷ்ணாவை இந்திய அணி தேர்வு செய்யவும் வாய்ப்புகள் உருவாகியுள்ளது. ஏனென்றால் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய பிரசித் கிருஷ்ணா, கடைசி ஓவர்களில் வொய்டு யார்க்கர் வீசுவதால் கில்லாடியாக இருந்தார். இதனால் இவரை ரீப்ளேஸ் செய்யவும் சில யோசனைகள் முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications