சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடச்சே.. தூக்கி வளர்த்த அதிமுகவை பார்த்து என்ன வார்த்தை சொல்லிவிட்டார் இந்த செந்தில்!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவின் 'பிரச்சார பீரங்கியாக' விளங்கிய நடிகர் செந்தில் இப்போது அமமுகவிற்காக களமாடி வருகிறார்.

ஜெயலலிதா தலைமையில் அதிமுக செயல்பட்டபோது, வீதி பிரச்சாரங்களுக்கு குண்டு கல்யாணம், செந்தில், ராமராஜன், சி.ஆர்.சரஸ்வதி என திரைப்பட காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர், நடிகைகளை நம்பியே இருந்தார்.

ஆனால், இப்போது ஓபிஎஸ்-எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியில், இவர்களை சீண்டுவார் இல்லை. அரசியல் பேச்சாளர்களே போதும் என்ற நிலையில் உள்ளது அதிமுக.

தன் வினை தன்னை சுடும் ராஜா.. மு.க.ஸ்டாலினை போட்டு தாக்கிய சீமான்தன் வினை தன்னை சுடும் ராஜா.. மு.க.ஸ்டாலினை போட்டு தாக்கிய சீமான்

தீவிர பிரச்சாரம்

தீவிர பிரச்சாரம்

இந்த நிலையில்தான், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பக்கம் தாவிவிட்டனர் பெரும்பாலான காமெடி நடிகர்கள். அதில் முக்கியமானவர் செந்தில். அவர் அமமுகவிற்காக தீவிரமாக களமாடி வருகிறார். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், அமமுக மாரியப்பன் கென்னடியை ஆதரித்து, நடிகர் செந்தில் தீவிர பிரச்சாரம் நடத்தி வந்தார்.

கரகாட்டக்காரன் வசனம்

கரகாட்டக்காரன் வசனம்

செந்தில் நேற்றைய பிரச்சாரத்தில் பேசுகையில், கரகாட்டக்காரன் திரைப்படத்தில் வரும் பிரபல வசனத்தை நினைவு கூர்ந்தார். நான் மறைந்தாலும், அதிமுக அதன்பிறகும், 100 ஆண்டுகள் இருக்கும் என்றார் ஜெயலலிதா. ஆனால், இப்போது அதிமுக யாரிடம் இருக்கிறது என்பதே தெரியவில்லை.

சொப்பன சுந்தரி அதிமுக

சொப்பன சுந்தரி அதிமுக

கரகாட்டக்காரன் திரைப்படத்தில், "காரை வைத்திருந்த சொப்பன சுந்தரியை, இப்போ யார் வைச்சிருக்கா" என்று கேட்கும் டயலாக் இடம் பெற்றிருக்கும். அது மிகவும் பேமசான டயலாக். இப்போது சொப்பன சுந்தரிபோல அதிமுகவை வைத்திருப்பது பன்னீர் செல்வமா அல்லது பழனிசாமியா, அல்லது மோடியிடமா என்று தெரியவில்லை.

சலசலப்பு

சலசலப்பு

ஜெயலலிதா யாரிடம் கூட்டணி வைக்காமல் இருந்தாரோ, அவர்களிடம் இப்போது, அதிமுக கூட்டணி வைத்துள்ளது. இது துரோகம். இவ்வாறு செந்தில் பேசினார். சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தவரை போற்றி வளர்த்த அதிமுகவை பார்த்து சொப்பன சுந்தரி கதாப்பாத்திரத்தோடு செந்தில் ஒப்பிடலாமா என்ற சலசலப்பும் ஒரு பக்கம் எழுந்துள்ளது.

English summary
Actor Senthil slams AIADMK for AMMK and compare it with Soppana Sundari Character.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X