Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ட்விஸ்ட்! தேனிக்கு படையெடுக்கும் ”முக்கிய தலைகள்” சேலத்தில் மையம் கொண்ட சசிகலா.. தடதடக்கும் அதிமுக!

Subscribe to Oneindia Tamil

சென்னை : தேனியில் பண்ணை வீட்டில் தங்கியுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்திக்க தினமும் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் அணிவகுக்கும் நிலையில், சேலத்திற்கு சசிகலா பயணம் மேற்கொள்ளவுள்ளது அதிமுக பரபரப்பை கூட்டியுள்ளது.

சட்டமன்ற தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என அடுத்தடுத்த பலத்த அடியை அதிமுக சந்தித்துள்ள நிலையில் அடுத்ததாக இரு ஆண்டுகளில் நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

தற்போது உட்கட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், மாவட்ட செயலாளர்களை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை சில மூத்த நிர்வாகிகள் கட்சி தலைமையிடம் கூறியதாகவும், இதற்கு " முக்கிய மாவட்ட செயலாளர்கள்" கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்


கடந்த சில மாதங்களாகவே சென்னையில் தங்குவதை விரும்பாத அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி பண்ணை வீட்டில் தங்கியிருக்கிறார். தற்போது தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக ஓ பன்னீர்செல்வம் அங்கு தங்கி இருப்பதற்கு முக்கிய காரணம் உண்டு என கூறுகின்றனர் அதிமுக மூத்த நிர்வாகிகள். சென்னையில் இருக்கும் போது அதிமுக முக்கிய பிரமுகர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்பது, எதிர் தரப்பினருக்கு உடனடியாக தெரிவதாகவும், இதனால் அவரை சந்திக்க முடியாமல் நிர்வாகிகள் சங்கடத்தில் இருந்தனர்.

பண்ணை வீட்டில் முகாம்

பண்ணை வீட்டில் முகாம்

இதன் காரணமாகவே பெரியகுளத்தில் தனது சொந்த வீட்டில் இருப்பதை விட கைலாசபட்டி பண்ணை வீட்டில் இருப்பதை ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுத்துள்ளார். இதன் காரணமாக தென் மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், அதிமுக நிர்வாகிகள் கடந்த சில நாட்களாக அவரது பண்ணை வீட்டிற்கு வருகை தருவது அதிகரித்துள்ளது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் அவரை சந்திப்பதாகவும், அவரது பண்ணை வீட்டில் ஏராளமான கார்கள் அணிவகுத்து நிற்பதாகவும் கூறப்படுகிறது.

முக்கிய ஆலோசனை

முக்கிய ஆலோசனை

தினமும் ஆலோசனை, ஆதாரவாளர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை, ரகசிய சந்திப்பு என பிசியாகவே இருக்கிறார் ஓபிஎஸ். இந்த நடவடிக்கைகளுக்கு பின்னணியில் அவரது மகன்களான ரவீந்திரநாத், ஜெயபிரதீப் ஆகியோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தற்போது அங்கிருந்து வெளியாகியிருக்கும் தகவல்படி சசிகலாவை அதிமுகவில் சேர்ககலாமா? வேண்டாமா? என்பது தான் முக்கிய கருப்பொருளாக விவாதிக்கப்படுகிறது. கட்சியில் தனக்கு தொடர்ந்து முக்கியத்துவம் குறைந்து வருவதாக அவர் கருதுவதும் சசிகலா கட்சிக்குள் வந்தால் தனக்கு பழைய செல்வாக்கு மீண்டும் கிடைக்கும் என கருதுவதாக கூறப்படுகிறது.

சசிகலா ஆதரவு

சசிகலா ஆதரவு

அதே நேரத்தில் கடந்த காலங்களில் கட்சிக்குள் தனக்கு ஏற்பட்ட மனக் கசப்புக்கு மருந்து போடும் வகையில் சில முக்கிய முடிவுகளை பன்னீர்செல்வம் தற்போது வைத்துள்ளதாகவும் நேரம் வரும்போது அந்தத் திட்டங்களை செயல்படுத்த இருப்பதாகவும் நம்மிடம் பேசிய மூத்த அதிமுக நிர்வாகிகள் கூறினர். தற்போதைய சூழ்நிலையில் திருச்சிக்கு அடுத்ததாக உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த சில முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தர தயாராக இருக்கும் நிலையில் கொங்கு மண்டலங்களில் அவருக்கு செல்வாக்கு எப்படி இருக்கும் என்பது கேள்விக்குறி.

சேலம் செல்லும் சசிகலா

சேலம் செல்லும் சசிகலா

அதே நேரத்தில் தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆதரவாளர்களை திரட்டும் முயற்சியும் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் சேலத்திற்கு சசிகலா வருகை புரிய உள்ள நிலையில் அவரது ஆதரவாளர்கள் அடித்துள்ள போஸ்டர்கள் தான் ஹாட் டாபிக். முன்னாள் முதல்வரின் சொந்த மாவட்டத்தில் சசிகலாவுக்கு இத்தனை ஆதரவாளர்களா? என மற்ற கட்சியினரே வியந்து பார்க்கும் அளவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. தமிழகத்தின் மூன்றாவது பெண் முதல்வரே வருக! இரட்டை தலைமைக்கு விரைவில் முற்றுப்புள்ளி! போன்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை வைத்து அதகளப்படுத்தியுள்ளனர் சசிகலாவின் ஆதரவாளர்கள்.

எதிர் தரப்பு அதிர்ச்சி

எதிர் தரப்பு அதிர்ச்சி

சட்டமன்ற தேர்தல் தோல்வி எதிரொலியாக அதிமுகவில் இரட்டை தலைமை வேண்டாம் , சசிகலா தலைமையில் அதிமுகவை மீட்டு எடுப்போம் என கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் தீர்மானங்களை நிறைவேற்றி வரும் நிலையில், வருகிற ஏப்ரல் 11ஆம் தேதி சேலம் மாவட்டத்திற்கு சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் . இதனால் உற்சாகமடைந்த சசிகலாவின் ஆதரவாளர்கள் மாநகர மாவட்ட பகுதிகளில் தொண்டர்கள் விரும்பும் ஒற்றை தலைமையின் ஆளுமையே , அம்மாவின் மறு உருவமே , வருக வருக என போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இது குறிப்பிட்ட சிலருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக முக்கிய நிர்வாகிகள் கூறினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+