AIIMS: மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் முடியவில்லை.. ஒரே போடாக போட்ட மத்திய அரசு.. அப்போ திறப்பு ?
சென்னை: பிரதமர் மோடி வருகிற மார்ச் 1 ஆம் தேதி மதுரைக்கு வருகை தர உள்ளார். மோடியின் இந்த பயணத்தின் போது எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் கட்டுமான பணிகளில்தான் இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெளியிட்ட தகவலில் தெரியவந்துள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோப்பூர் ஊராட்சி கோ.புதுப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை
ரூ.2,021 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த மருத்துவமனையின் 5 ஆண்டுகளுக்கு பின், 2024ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதில் முதற்கட்டமாக மருத்துவக்கல்லூரி, நர்சிங் கல்லூரி, நிர்வாக அலுவலகம், மருத்துவமனை, புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு உள்பட 13 லட்சம் சதுர அடியில் 13 கட்டிடங்களும்,
2-வது கட்டமாக 10 லட்சம் சதுர அடியில் கலையரங்கம், குடியிருப்புகள், மருத்துவமனை இயக்குனர் பங்களா, ஆயுஷ் மருத்துவ பிரிவு உள்பட 16 கட்டிடங்கள் என மொத்தம் 29 கட்டிடங்களுடன் இந்த வளாகம் அமைகிறது.
மோடி திறந்து வைக்கிறாரா?
2019 ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டினாலும் 2024 ஆம் ஆண்டுதான் இதன் கட்டுமான பணிகள் தொடங்கின. 5 ஆண்டுகளாக கட்டுமான பணிகள் கூட தொடங்காமல் இருந்த நிலையில், இந்த விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசை விமர்சித்தன.
அதாவது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் தொடங்கப்படவில்லை என்பதை வைத்து மிகப்பெரிய பிரச்சாரத்தையும், போராட்டத்தையும் மேற்கொண்டனர். இதற்கிடையே வருகிற மார்ச் 1 ஆம்தேதி மதுரையில் நடைபெற உள்ள தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு வரும்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை அவர் திறந்து வைப்பார் என்று தகவல் பரவியது.
கட்டுமான பணிகளில்தான் உள்ளது
7 ஆண்டுகளாக பணிகள் மந்தமாக நடைபெற்று வரும் சூழலில் விரைவில் திறந்து வைக்க உள்ளதாக வெளியான தகவல் முக்கியத்துவம் பெற்று இருந்தது. கடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஒற்றை செங்கல் ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் தாமதம் ஆகிவருவதை விமர்சித்தார்.
இந்த சூழலில் தான் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக இந்த மருத்துவமனை திறக்கப்படலாம் என்று வெளியான தகவல் அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றது. ஆனால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தற்போது வரை கட்டுமான பணிகளில்தான் உள்ளது என்ற தகவல் வெளிவந்துள்ளது. நாடாளுமன்றத்தில் இந்த தகவலினை மத்திய அரசு கூறியுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை விளக்கம்
நாட்டில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளில் செயல்பாடுகள் மற்றும் அதன் நிலை குறித்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பகிர்ந்துள்ளது. அதில் தமிழகத்தில் உள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணியில் உள்ளதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் அவந்திப்போரா, ஹரியானாவில் உள்ள ரேவரியில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையும் கட்டுமான பணியில்தான் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரதமர் மோடியின் மதுரை பயணத்தின் போது எய்ம்ஸ் மருத்துவமனை திறந்து வைக்கப்படும் என்று பரவிய தகவலில் உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளது.
முன்னதாக, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் அனுமந்த ராவ் வெளியிட்ட அறிக்கையிலும், இதை உறுதிப்படுத்தியிருந்தார். அனுமந்த ராவ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது:- மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி தனது மதுரை பயணத்தின் போது திறந்து வைப்பதாக வெளியாகி உள்ள தகவல் உண்மை இல்லை.
ஜூன் மாதம்
திட்டமிட்டபடி பணி நடைபெற்று வருகிறது. முதற்கட்ட கட்டிடங்களுக்கான பாதாள சாக்கடை மற்றும் தீயணைப்பு பாதுகாப்பு போன்றவற்றுக்கு தமிழக அரசிடம் அனுமதி கேட்கப்பட்டு உள்ளது.
ராமநாதபுரத்தில் படித்து வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் 4-ம் ஆண்டு மாணவர்களை மதுரைக்கு மாற்ற திட்டமிட்டு உள்ளோம். அவர்களுக்கு வகுப்பறைகள், விடுதிகள் தயாராகி வருகின்றன. ஜூன் மாதம் புறநோயாளிகள் பிரிவு தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்று கூறியிருந்தார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications