இந்தா வந்துட்டாங்கல்ல.. லட்சுமி வெடியில் ‘அமலா ஷாஜி’! படபடவென ‘பவி டீச்சர்’! 2கே கிட்ஸ் ஹேப்பி தான்!
சென்னை : தீபாவளி வந்தாலே வேற என்ன வழக்கம் போல பட்டாசு, புத்தாடை, பலகாரம் தான் என இருந்தாலும் எத்தனை ஆண்டுகள் கொண்டாடி இருந்தாலும் தீபாவளி மீதான ஆசை மட்டும் பலருக்கும் இன்னும் நீர்த்துப் போயிருக்காது.
குறிப்பாக பட்டாசை பிடித்தாகதவர்களே இருக்க முடியாது. குறிப்பாக 90'ஸ் கிட்ஸ்கள் தான் பட்டாசுகள் மீது கொள்ளை பிரியமாக இருப்பாங்க.. அதுக்காக மத்தவங்க வெடிக்க மாட்டாங்ளான்னு கேக்கலாம்..
வெடிப்பாங்க.. பொதுவாக 90'ஸ் கிட்ஸ் பொறுத்தவரை புஸ்வானத்தில் இருந்து சற்றே அப்டேட் ஆகி, அணுகுண்டு, லட்சுமி வெடி, யானை வெடி என 'பிரம்மாண்ட வெடிகளை' பார்த்திருப்பார்கள். ஆனால் தற்போது பல வகையான வெடிகள் வந்து விட்டாலும் அணு குண்டு என்றாலே இன்னும் பலருக்கு பயம் தான்.

தீபாவளி
90'ஸ் கிட்ஸ்கள் தற்போது 30 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதைக் கடந்தவர்களாக ஆகிவிட்டதால் தற்போது ட்ரெஸ், பட்டாசு, மொபைல் என 2 கே கிட்ஸ்ஸை குறி வைத்தே பொருட்கள் விற்பனை துவங்கியிருக்கிறது. தீபாவளிக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் பலரும் ஆர்வத்துடன் பட்டாசு, புத்தாடை இனிப்புகள் உள்ளிட்டவற்றை வாங்கி வருகின்றனர்.

அமலா ஷாஜி
இந்நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது அமலா ஷாஜி , பவி டீச்சர் பட்டாசுகள். அமலா ஷாஜி , பவி டீச்சர் பட்டாசுகள். யார் இந்த அமலா ஷாஜி என நீங்கள் கேட்டால் நீங்கள் அப்டேட் ஆகாதவர் என அர்த்தம், தற்போது சினிமா நடிகைகளுக்கு 2கே கிட்ஸ்களின் ஆதரவோடு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார் அவர்தான் அமலா ஷாஜி. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சொந்த ஊராகக் கொண்ட இவர் டிக் டாக் தடை செய்யப்பட்ட பிறகு இன்ஸ்டாகிராமில் களமிறங்கினார்.

அமலா பட்டாசுகள்
ஆபாச நடனம் அல்லாமல் கொஞ்சமாக கவர்ச்சி காதல் என வீடியோக்களை போட ஆரம்பித்தவர் தற்போது வரை ட்ரெண்டிங்கில் எப்போதுமே நம்பர் ஒன் தான். சமையல் டிப்ஸ் முதல் க்யூட் வீடியோக்கள் என அடுத்தடுத்து பதிவிட்டு பிரபலமான அவரை கொண்டாடி வருகின்றனர் 2 கே கிட்ஸ்கள். இவரது படத்துடன் வந்திருக்கும் வெடிகளை 2 கே கிட்ஸ் பலரும் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனராம்.

'பவி டீச்சர்' பிரிகிடா
இது மட்டுமல்லாமல் பவி டீச்சர் பிரிகிடா பட்டாசும் விற்பனைக்கு வந்திருக்கிறது. பிரபல யூட்யூப் தளத்தில் வெளியான தொடரின் மூலம் பிரபலமான பிரிகிடாவை அந்த கதாபாத்திரத்தின் பெயராலேயே அழைக்கத் தொடங்கினர் ரசிகர்கள். பிறகு அவரே சொந்த பெயரை மறக்கும் அளவுக்கு ஆகிவிட்டது. இவர் பெயரிலும் பட்டாசு வந்துள்ளது. அப்போ இனி பட்டாசில் லட்சுமி போட்டோலாம் வராதா?
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications