சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மக்களே உஷார்.. டிஜிபி சைலேந்திரபாபு பெயரில் போலி எஸ்எம்எஸ் .. ஏமாற வேண்டாம் என போலீஸ் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: 'அமேசான் கிப்ட் கார்டுகள்' என டிஜிபி சைலேந்திர பாபு பெயரில் போலி எஸ்எம்எஸ், வாட்ஸ்அப் செய்திகளை வருவதாகவும், இதனை யாரும் நம்ப வேண்டாம் என போலீசார் அறிவுரை வழங்கி உள்ளனர்.

Recommended Video

    சென்னை மெரினா கடலில் மூழ்கிய சிறுவன்.. முதலுதவி அளித்து காப்பாற்றிய டிஜிபி சைலேந்திர பாபு

    தற்போதைய காலக்கட்டத்தில் மோசடிக்காரர்கள் பல்வேறு வழிகளில் பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர். குறிப்பாக ஆன்லைன் முறையிலான மோசடி நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

    ஒவ்வொரு மோசடியையும் தனி ஸ்டைலில் மோசடிக்காரர்கள் அரங்கேற்றி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பணத்தை இழக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

    சென்னை மெரினா கடலில் மூழ்கிய சிறுவன்.. முதலுதவி அளித்து காப்பாற்றிய டிஜிபி சைலேந்திர பாபு சென்னை மெரினா கடலில் மூழ்கிய சிறுவன்.. முதலுதவி அளித்து காப்பாற்றிய டிஜிபி சைலேந்திர பாபு

    ஆன்லைன் மோசடி

    ஆன்லைன் மோசடி

    இதுதொடர்பாக தொடர்ந்து போலீசார் அறிவுரை வழங்கி வருகின்றனர். குறிப்பாக செல்போன் எஸ்எம்எஸ், வாட்ஸ்அப்பில் வரும் லிங்க்குகளை தேவையின்றி மக்கள் தொடக்கூடாது. மேலும் பரிசு வென்றுள்ளதாக வரும் எஸ்எஸ்எம்களை நம்பி ஏமாற வேண்டாம் என போலீசார் அட்வைஸ் செய்துள்ளனர். இவ்வாறு மோசடிகளை அரங்கேற்றும் நபர்களை கண்டுபிடிப்பது என்பது போலீசாருக்கு பெரும் சவாலாமாக உள்ளது. இதனால் ஒவ்வொருவரும் விழிப்பாக செயல்பட வேண்டும்.

    அமேசான் கிப்ட் கார்டு மோசடி

    அமேசான் கிப்ட் கார்டு மோசடி

    இந்நிலையில் தான் சமீபகாலமாக ‘அமேசான் கிப்ட் கார்டுகள்'என்ற பெயரில் பொதுமக்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்அப் செய்திகள் அனுப்பி மோசடி நடத்தப்பட்டு வருகிறது. அதாவது அமேசான் கிப்ட் கார்டுகள் மூலம் உங்களுக்கு பரிசு பொருட்கள் விழுந்துள்ளது. இதனை பெற 10 பேருக்கு அனுப்ப வேண்டும். அதன்பிறகு குறிப்பிட்ட எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என கூறப்படும். இதில் நைசாக பேசும் நபர் வங்கி கணக்கு எண்கள், ரகசிய எண்களை பெற்று பணம் பறித்து மோசடியில் ஈடுபடுவார்கள்.

    டிஜிபி பெயரில் எஸ்எம்எஸ்

    டிஜிபி பெயரில் எஸ்எம்எஸ்

    இந்நிலையில் தான் தற்போது தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு பெயரில் ‘அமேசான் கிப்ட் கார்டுகள்' பெயரில் எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்அப் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் போலீசார் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    பொருட்படுத்த வேண்டாம்

    பொருட்படுத்த வேண்டாம்

    அதில், ‛‛காவல்துறை தலைமை இயக்குநர் என்று தங்களை அறிமுகம் செய்து கொண்டு போலி நபர்கள் அமேசான் அன்பளிப்பு கூப்பன்கள் வாங்கி அனுப்பும்படி வாட்ஸ்அப், எஸ்எம்எஸ் மூலம் அனுப்புவதாக தெரியவருகிறது. இந்த போலியான குறுஞ்செய்தியை பொருட்படுத்த வேண்டாம். அந்த நபரை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என கூறப்பட்டுள்ளது.

    English summary
    The police have advised that no one should believe fake SMS and WhatsApp messages in the name of DGP Shailendra Babu as 'Amazon gift cards'.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X