எல்லா பக்கமும் நெருக்கடி.. தஞ்சையில் 4ஆம் தேதி தவெக நிர்வாகிகள் சந்திப்பு.. என்ன பேசுவார் விஜய்?
சென்னை: தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் வரும் 4 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் நிர்வாகிகள் சந்திப்புக்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. விஜய் தனிப்பட்ட முறையிலும் அரசியல் ரீதியாகவும் அடுத்தடுத்து நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் நிலையில், தஞ்சை கூட்டத்தில் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யும் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில், தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் தீவிர தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, வரும் 4 ஆம் தேதி நாளை மறுநாள் தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி பகுதியில் அவர் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
கரூர் அசம்பாவித சம்பவத்திற்கு பிறகு தவெக தலைவர் விஜய், தனது மக்கள் சந்திப்பை நிர்வாகிகள் சந்திப்பாக மாற்றி ஒவ்வொரு கூட்டத்திற்கு 5,000 நிர்வாகிகளுக்கு பாஸ் கொடுத்து, பங்கேற்க வைத்து மாவட்ட வாரியாக கூட்டங்களை நடத்தி வருகிறார்.
சமீபத்தில் சேலத்தில் நடைபெற்ற திறந்தவெளி கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் வெயிலில் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததை கருத்தில் கொண்டு, வேலூர் மாவட்டத்தில் பந்தல் அமைக்கப்பட்டு கூட்டம் நடத்தப்பட்டது.
அடுத்த கட்டமாக தஞ்சை மாவட்டத்தில் நிர்வாகிகளை தவெக தலைவர் விஜய் சந்திக்க உள்ளார். இதற்காக வருகிற 4 ஆம் தேதி தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அய்யாசாமிப்பட்டியில் சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்ய தவெக நிர்வாகிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிக்குள் இந்த சந்திப்பு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்திற்கு அனுமதி கோரி அண்மையில் தஞ்சை மத்திய மாவட்ட தவெக செயலாளர் விஜய் சரவணன் தலைமையில் நிர்வாகிகள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். இந்த மனு குறித்து தவெக நிர்வாகிகளுடன் போலீசார் இருமுறை ஆலோசனை நடத்தினர். கூட்டம் நடைபெறும் இடத்தையும் ஆய்வு செய்தனர்.
அதனைத்தொடர்ந்து, தவெக கூட்டத்திற்கு காவல்துறை சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் தனிப்பட்ட முறையிலும் அரசியல் ரீதியாகவும் அடுத்தடுத்து நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் நிலையில், தஞ்சை கூட்டத்தில் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முன்னதாக வேலூர் கூட்டத்தில் பேசிய விஜய், "நான் நேரில் வந்து உங்களை சந்திக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. ஒரு எதிர்கட்சியாக இருந்து கேள்வி கேட்டுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், நமக்கு எதிராக என்ன சூழ்ச்சி நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். ஆகவே, நம் ஆட்சி அமைந்ததும், ஒவ்வொரு கிராமத்துக்கும் நேரடியாக வந்து என் சொந்தங்களாகிய உங்களை சந்திக்கிறேன்." எனப் பேசி இருந்தார்.
-
வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம் -
புற்றுநோய்க்கு ஜோதிடம்தான் தீர்வு! அரிய கருத்தை சொன்னவருக்கு சீட் கொடுத்த விஜய்! சரியா போச்சு போங்க -
திமுகனாலும்.. தவெகனாலும்.. சீட்டுகளை அள்ளும் மாஜி அதிமுக தலைகள்! விஜய் லிஸ்ட்டில் யார் யார் பாருங்க! -
விஜய் பெயரளவில் தான் கிறிஸ்தவர்.. சொந்த குடும்பத்தையே காப்பாற்ற முடியாதவர்.. அருட்தந்தை விமர்சனம்! -
எம்எல்ஏன்னா சும்மா இல்லை! 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் யார்? விஜய் டிக் அடித்த நிர்வாகிகள் -
"இன்னொரு கரூர் சம்பவம் நடக்கக்கூடாது! விஜய்யை பார்த்து திமுகவுக்கு பயம்!" ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு -
குழந்தையை விட்டு வந்துருக்கோம் எங்க வேதனை புரியுமா..வில்லிவாக்கத்தில் விஜய்யை திட்டி தீர்த்த பெண்கள் -
"அன்புதானே எல்லாம்" ராமதாஸுக்கே அறிவுரை கூறிய பெரம்பூர் பாமக வேட்பாளர்! யார் இந்த திலகபாமா? -
ஸ்டாலினுக்கு எதிராக கொளத்தூரில் விஜய் டிக் அடித்த அந்த பழைய முகம்! திமுக வளர்த்தெடுத்த புள்ளி! யார்? -
விஜய் 2 தொகுதிகளில் போட்டி ஏன்.. ஜெயலலிதா ஸ்டைலில் பக்கா பிளான்.. செங்கோட்டையன் விளக்கம் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
திருச்சி கிழக்கில் தேர்தல் அலுவலகம் கூட அமைக்காத தவெக.. 25 நாட்களில் விஜய்யால் மாற்றிவிட முடியுமா?












Click it and Unblock the Notifications