சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரு தீவையே காணோம் நாயர்! அத்திப்பட்டி போல கூகுள் மேப்பில் காணாமல் போன தீவு! கடைசியில் செம ட்விஸ்ட்

Google Oneindia Tamil News

சென்னை: தீவு ஒன்று காணாமல் போய்விட்டதாக இணையத்தில் பலர் புகார் கொடுக்க தொடங்கி உள்ளனர். அது என்ன தீவு.. எப்படி மாயமானது என்று பார்க்கலாம்!

நடிகர் அஜித் நடித்த மெகாஹிட் திரைப்பட சிட்டிசன். காணாமல் போன அத்திப்பட்டி கிராமத்திற்காக போராடும் ஹீரோவின் கதைதான் படம்.

படத்தின் கிளைமேக்சில்.. வில்லன்களுக்கும்.. வில்லன்களின் மாமா, மச்சான், அப்பா, அண்ணன், பெண் கொடுத்தோர், பெண் எடுத்தோர் என்று எல்லோருக்கும் அஜித் தண்டனை வாங்கி தருவது போல படம் முடியும்.

காணாமல் போன தீவு

காணாமல் போன தீவு

இதில் போலீசாக வரும் நக்மா சக போலீஸ் அதிகாரியிடம்.. நாயர் இந்திய வரைபடத்தில் இருந்து ஒரு கிராமமே காணாமல் போய்விட்டது என்று கூறும் டயலாக் மிக பிரபலம். அதேபோல்தான் தற்போது நிஜத்திலும் ஒரு தீவு காணாமல் போனாதாக புகார் எழுந்துள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு அருகில் இருக்கும் தீவு ஒன்றுதான் காணாமல் போனதாக புகார் எழுந்தது. ஆஸ்திரேலியாவிற்கும் நியூ கலிடோனியாவிற்கும் இடையில் இருக்கும் நிலப்பகுதிதான் காணாமல் போனதாக புகார் எழுந்துள்ளது.

சாண்டி தீவு

சாண்டி தீவு

இதை சாண்டி தீவு என்பார்கள். 1776ல்தான் முதல் முதலாக தென் பசிபிக் கடலில் இருக்கும் இந்த தீவு பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த கேப்டன் ஜேம்ஸ் கூக் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு மேப்பில் சேர்க்கப்பட்டது. இதை மிக அழகான தீவு என்று அவர் வர்ணித்தார். அதன்பின் 1876ல் மீண்டும் மீனவர்கள் சிலர் இங்கு அந்த தீவு இருப்பதை கண்டுபிடித்தனர். அதன்பின் பலர் இந்த தீவை பார்த்ததாக பல வரலாற்று பக்கங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

தீவு இருந்தது

தீவு இருந்தது

இதையடுத்து 19ம் நூற்றாண்டில் வெளியான இங்கிலாந்து, ஜெர்மனி மேப்களில் இந்த தீவு ஆஸ்திரேலியா அருகே குறிப்பிடப்பட்டு இருந்தது. இது மொத்தம் 24 கிலோ மீட்டர் நீளம் மற்றும் 5 கிலோ மீட்டர் அகலம் கொண்ட பகுதி ஆகும். ஆனால் இந்த தீவு காணாமல் போய்விட்டதாக தற்போது புகார் எழுந்துள்ளது. ஆம் இங்கே தீவு இருக்கிறது என்று ஆசையாக பார்க்க போன பலர் ஏமாற்றத்தோடு திரும்பி வந்துள்ளனர். ஆசையாக கப்பலில் போனார்கள் எல்லாம் கடல்லயே இல்லையாம் என்று கடைசியில் கைவிரித்து உள்ளனர்.

தீவு காணவில்லை

தீவு காணவில்லை

அதாவது 1979ல் இப்படி ஒரு தீவே இல்லை என்று கூறி அதை தங்கள் வரைபடத்தில் இருந்து அந்த தீவை நீக்கியது பிரான்ஸ். அவர்களின் கடற்படை புள்ளி விவரங்களில் இருந்தும் இந்த தீவு நீக்கப்பட்டது. ஒரே குழப்பம். வேறு வழியே இல்லை.. நேரில் சென்று பார்க்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. 2012 ஆஸ்திரேலியாவை சேர்ந்த கடலியல் ஆராய்ச்சியாளர்கள் இங்கே சாண்டி தீவு இருப்பதாக சொல்லப்படும் இடத்திற்கு சென்று பார்த்தனர். ஆனால் இங்கே இருந்த கிணத்தை காணும் என்பது போல அங்கே தீவே இல்லை என்று கூறிவிட்டு திரும்பி வந்துள்ளனர்.

மூழ்கிவிட்டதா?'

மூழ்கிவிட்டதா?'

சரி கடலில் மூழ்கி இருக்கும் என்று பார்த்தால் அதுவும் இல்லை. அங்கு சோனார் டெஸ்ட் செய்து பார்த்ததில் 4300 அடி ஆழம் வரை ஒன்னுமே இல்லை என்று தெரிந்துள்ளது. அதாவது தீவு மூழ்கி இருந்தாலும் இவ்வளவு ஆழத்திற்கு சென்று இருக்க வாய்ப்பே இல்லை. 2012ல் இந்த கண்டுபிடிப்பை தொடர்ந்து மொத்தமாக கூகுள் மேப்பில் இருந்து 2012ல் இந்த தீவு நீக்கப்பட்டது.

குழப்பம்

குழப்பம்


ஆனால் இதில் என்ன சிக்கல் என்றால் ஆஸ்திரேலியா அருகே நீங்களே கூகுள் மேப்பில் அந்த பகுதியை மேனுவலாக தேடி பார்த்தால் அங்கு ஒரு மொட்டு போன்ற பகுதி தெரிகிறது. அங்கு முன்பு தீவு இருந்ததை தற்போது கூகுள் தூக்கி உள்ளது. சாட்டிலைட் இமேஜில் இல்லாமல் இப்படி ஒரு மேடான இடத்தை பார்க்க முடியாது. அப்படி என்றால் சாட்டிலைட்டில் தெரிவது என்ன? அந்த பகுதியில் தீவு இருந்தா.. இல்லை உண்மையிலேயே தீவு இல்லையா.. அப்படி என்றால் அந்த மொட்டு போன்ற பகுதி என்னது என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

English summary
An Island is missing near Australia: Even google removed it from Map! Why? தீவு ஒன்று காணாமல் போய்விட்டதாக இணையத்தில் பலர் புகார் கொடுக்க தொடங்கி உள்ளனர். அது என்ன தீவு.. எப்படி மாயமானது என்று பார்க்கலாம்!
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X