சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

க்ளெனீகல்ஸ் மருத்துவமனையில் ஓமன் நாட்டு ஆசிரியருக்கு 4ஆவது திறந்த இதய வால்வு அறுவை சிகிச்சை!

Google Oneindia Tamil News

சென்னை: க்ளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியில் ஓமன் நாட்டைச் சேர்ந்த ஆசிரியர் தனது நான்காவது திறந்த இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு புதிய வாழ்க்கையைப் பெற்றார்.

க்ளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியில் உள்ள மருத்துவர்கள் தொடர்ச்சியாக இதய வால்வில் நோய்த்தொற்று உள்ள நோயாளிக்கு மனித இதய வால்வைப் பயன்படுத்தி அதிக ஆபத்துள்ள இதய அறுவை சிகிச்சை செய்கிறார்கள்.

An Omani teacher successfully replaced an infected heart valve at gleneagles

சென்னையில் உள்ள ஒரு முன்னணி மல்டி ஸ்பெஷாலிட்டி மையமான க்ளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி (GGHC), ஓமன் நாட்டைச் சேர்ந்த 39 வயது நோயாளியின் பாதிக்கப்பட்ட இதய வால்வை, மூளைச் சாவு நோயாளிகளிடமிருந்து எடுத்து ஒரு ஹோமோகிராஃப்ட் பெருந்தமணி இதய வால்வைக் கொண்டு வெற்றிகரமாக பதிலீடு செய்தது.

ஓமன் நாட்டைச் சேர்ந்த அரபிக் ஆசிரியர் ஹிலால், அவரது இதய வால்வில் உள்ள நோய்த்தொற்றை துப்புரவாக்குவதற்கு மூன்று சிக்கலான இதய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். ஒரு விளக்க முடியாத காய்ச்சல் மற்றும் பல் சிகிச்சையின் போது இது அடையாளம் காணப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைகளுக்கு பிறகும் , அவர் இதயத்தின் உட்பகுதியில் இயந்திர வால்வைச் சுற்றி தொடர்ச்சியாக தொற்று ஏற்பட்டது.

இத்துடன் கூடுதல் சிக்கலாக, அவர் பெருந்தமனியின் போலி இரத்த நாளப்புடைப்பு (சுயூடோ ஆன்யிரிஸம்) எனப்படும் தொற்று காரணமாக தனது பெருந்தமனி உப்பலாகுதல் உருவானது. இந்த சிக்கல்களை எதிர்கொண்டபோது, திரு ஹிலால் இதய வால்வு தொற்று சிகிச்சைக்காக GGHC க்கு பரிந்துரைக்கப்பட்டார். நோயாளிக்கு சிறந்த சிகிச்சையை வழங்குவதற்காக பலதுறை மருத்துவர்கள் குழு அவரது நிலையை மதிப்பீடு செய்தது.

உலோகத்தால் செய்யப்பட்டடு இழைமானத்தால் மூடப்பட்ட இயந்திர இதய வால்வில் தொடர்ச்சியாக நோய்த்தொற்று ஏற்பட்டதன் காரணமாக தொற்றினால் பாதிக்கப்பட்ட அவரது இதய வால்வை எடுத்துவிட்டு ஹோமோகிராஃப்ட் பெருந்தமனி வால்வை பதிலீடுசெய்ய குழு முடிவு செய்தது. ஹோமோகிராஃப்ட் என்பது தானம் செய்யப்பட்ட மனித இதயத்திலிருந்து அகற்றப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, ஆண்டிபயாடிக் சிகிச்சை அளிக்கப்பட்டு,
தொற்றுநீக்கிய நிலைமைகளின் கீழ் உறைந்திருக்கும் ஒரு பெருந்தமனி அல்லது நுரையீரல் சார்ந்த வால்வு ஆகும்.

இந்த ஹோமோகிராஃப்ட் பெருந்தமனி வால்வு ஆனது மூளைச்சாவு அடைந்த நோயாளிகள் நன்கொடையளித்த இதயங்களிலிருந்து எடுக்கப்பட்டு, திரவ நைட்ரஜனில் -70 டிகிரியில் சேமிக்கப்படுகின்றன. செப்டம்பர் முதல் வாரத்தில், 4 வது முறையாக திரு. ஹிலால் மிகவும் கவனமாக திட்டமிடப்பட்ட ஒரு சிக்கலான இதய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த செயல்முறையில் நோயாளியின் உடல் 18 ° C வெப்பநிலைக்கு குளிரவைக்கப்பட்டு அவரது இரத்த ஓட்டம் 8 நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்படுகிறது, இது அவரது போலி பெருந்தமனி ஆன்யிரிஸத்தை திறக்க மற்றும் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது. அவரது உடலில் இரத்த ஓட்டம் இல்லாத இந்த காலகட்டத்தில், அவரது மூளைக்கு கழுத்துத் தமனியில் வைக்கப்பட்ட ஒரு சிறப்பு குழாய் மூலம் இரத்த உள்ளோட்டம் செய்யப்பட்டது (தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னோக்கிய பெருமூளை இரத்த உள்ளோட்டம் - selective antegrade cerebral perfusion).

முன்பு பாதிக்கப்பட்ட இதய வால்வு அகற்றப்பட்டு அதைச் சுற்றியுள்ள தொற்று முழுமையாக துப்புரவு செய்யப்பட்டது. பெருந்தமனியின் மையத்தில் ஒரு புதிய பெருந்தமனி வால்வு (க்ரையோப்ரிசர்வ்ட் ஹோமோகிராஃப்ட்) உட்பதிக்கப்பட்டது. க்ளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி, சென்னையில் உள்ள நெஞ்சுக்கூடு சார்ந்த மற்றும் இரத்தநாள அறுவைச் சிகிச்சை நிபுணரும் மூத்த ஆலோசகருமான டாக்டர் ஆர். ஆன்டோ சகாயராஜ், கூறுகையில் "மருத்துவமனைக்கு வந்தவுடன், நோயாளி தனது இதய வால்வில் கடுமையான நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தவுடன் அவசரசிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். முக்கிய சவாலானது, இதற்கு முன்னர் செய்யப்பட்ட பல இருதய அறுவை சிகிச்சைகளால் அடர்த்தியான வடுக்கள் கொண்ட மார்பினுள் மார்பக எலும்பின் கீழ் வெடிக்கத் தயாராக இருக்கும் ஒரு போலி ஆன்யிரிஸம் கொண்ட நோயாளியின் இதயத்தின் மையத்தை அணுகுவதாகும். ஒரு பாதுகாப்பான மற்றும் விரிவான சிகிச்சை உத்தியை முடிவு செய்வதற்கு ஒரு விரிவான விவாதம் தேவைப்பட்டது"என்று கூறினார்.

க்ளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி, சென்னையில் உள்ள தொற்று நோய்கள் துறை இயக்குனர் டாக்டர். சுப்பிரமணியன் சுவாமிநாதன் கூறுகையில், "மீண்டும் மீண்டும் ஏற்படும் இதய வால்வு தொற்று வழக்கமான சிகிச்சைக்கு நன்கு கட்டுப்படுவதில்லை. GGHC இல், நாங்கள் ஒரு புதிய சிகிச்சை முறையை வடிவமைத்துள்ளோம், இது அறுவை சிகிச்சையுடன் இணையும்போது மிகவும் சக்தி வாய்ந்தாகும். இந்தச் செயல்முறையின் போது, நோயாளி எங்கள் குழுவின் நெருக்கமான கண்காணிப்பில் இருந்தார்" என்று கூறினார்.

க்ளெனேகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி, சென்னையில் உள்ள இதயவியல் மூத்த ஆலோசகர் - டாக்டர். சூசன் ஜார்ஜ் கூறுகையில், எக்கோ கார்டியோகிராமின் மதிப்பீட்டில், நோயாளிக்கு பெருந்தமனியில் இருந்து இடது இதய அறைக்குள் இயந்திர செயற்கை வால்வின் பக்கத்தில் பாராவால்வார் கசிவு என மருத்துவ ரீதியாக அழைக்கப்படும் கடுமையான இரத்தக் கசிவு மற்றும் தொற்றுக்கு இரண்டாம் நிலையாக ஒரு குழிப்புண் இருப்பது கண்டறியப்பட்டது. ஏறுமுக பெருந்தமனியில் போலி ஆன்யிரிஸம் இருந்ததால், இது ஒரு அறுவை சிகிச்சை செய்வதில் மிகவும் சவாலான சூழ்நிலையை உருவாக்கியது. கடந்த காலத்தில் நோயாளி மூன்று அறுவை சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், நோயாளிக்கு மேலும் தொற்று அபாயம் ஏற்படாமல் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வது எங்களுக்கு மிகவும் முக்கியமானது.

2 வாரஅறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பாராமரிப்பிற்கு பின்னர் நோயாளி , பரந்த புன்னகையுடனும் இதயம் முழுக்க நன்றியறிதலுடனும், அரபு மொழி கற்பிக்க தாயகம் திரும்பினார். சென்னையில் உள்ள க்ளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியின் தலைமை நிர்வாக அதிகாரி, டாக்டர் அலோக் குல்லர், சிகிச்சையில் புரிந்த சாதனைக்காக குழுவினரைப் பாராட்டிகூறுகையில், "இந்த சிக்கலான சிகிச்சையின் விளைவுகளைக் கண்டு நாங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறோம்" என்று கூறினார். மிகவும் சவாலான நோய்களுக்கு தரமான பராமரிப்பு மற்றும் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய எங்கள் நிபுணர்கள் குழு எடுத்த முயற்சி பாராட்டுக்குரியது.

English summary
An Omani teacher successfully replaced an infected heart valve from brain dead patients at Gleneagles Global Health city.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X