படுக்கை அறையில் எமனாக மாறிய வார்த்தை.. கணவன் மனதை அரித்த சந்தேகம்.. ஒரே இரவில் ஜெயிலுக்கு போன மனைவி
சென்னை: ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தில் நடந்த சம்பவம், இன்று பலரை கலங்கடிக்க செய்துள்ளது... மது பழக்கம், சந்தேகம், குடும்ப வன்முறை இவை எல்லாம் ஒன்று சேரும்போது, அந்த முடிவு எவ்வளவு கொடூரமாக மாறுகிறது என்பதற்கு இந்த சம்பவம் மற்றொரு உதாரணமாகும்.. அப்படி என்ன நடந்தது ஆந்திராவில்?
ஏலூரு மாவட்டத்தில் வசித்து வருபவர் சுதீர் ரெட்டி.. 44 வயதாகிறது.. ஒரு தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார்..

இவரது மனைவி பெயர் ஞான பிரசன்னா.. இவர்கள் இருவரும் ஐதராபாத் குகட் பள்ளி விவேகானந்தா நகரில் வசித்து வந்தார்... நல்ல வேலை, கை நிறைய சம்பளம், நகர வாழ்க்கை, வசதிகள் எல்லாம் இருந்தும், அந்த வீட்டில் நிம்மதி மட்டும் இல்லை.
இரவெல்லாம் அழுத மனைவி
காரணம், கணவன், மனைவி இடையே நாளுக்கு நாள் நம்பிக்கை குறைந்து கொண்டே போனது... ஒருவரை ஒருவர் சந்தேகிக்க ஆரம்பித்தனர்... இந்த சந்தேகம் கணவனுக்கு சற்று அதிகமாகவே போய்விட்டது.. இதனால் சுதீர் ரெட்டி மது பழக்கத்துக்கும் ஆளானார்.. .. தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதை தவிர, எந்நேரமும் வீட்டிற்குள் கூச்சல், வாதம், அடிதடி போன்றவையும் காணப்பட்டுள்ளது.. மோசமான வார்த்தைகள், கொடூரமான தாக்குதல்களால் நிலைகுலைந்து போனார் மனைவி ஞான பிரசன்னா... ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் மனம் தாங்காமல் போனது.
படுக்கையறையில் கொடுமை
சம்பவத்தன்று இரவு, மது போதையில் வீட்டிற்கு வந்த சுதீர் ரெட்டி, மனைவியுடன் மீண்டும் வழக்கமான சண்டையில் ஈடுபட்டுள்ளார்.. நீ பத்தினியா? என்று கேட்டு மீண்டம் மனைவியை வார்த்தைகளால் குத்தி கிழித்துள்ளார்கள்.. பிறகு சுதீர் ரெட்டி படுக்கையறையில் தூங்க போய் விட்டார்..
ஆனால் ஞான பிரசன்னா அழுதுகொண்டே இருந்தார்.. நீண்ட நாட்களாக மனதில் தேங்கிய கோபமும், பயமும், தாங்க முடியாத மன அழுத்தத்தை அந்த நைட் நேரத்தில் அவருக்கு தந்துவிட்டது. இப்படி தினம் தினம் கணவனிடம் சந்தேகத்தால் அடிபட்டு சாவதைவிட ஒரேடியாக போய் சேர்ந்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்தார்.. பிறகு தான் எதற்காக சாக வேண்டும்? என்ன தப்பு செய்தோம்? என்றும் மனதிற்குள் கேட்டுக்கொண்டார்.
அடுத்த நாள் காலை..
சுதீர் ரெட்டி உயிரிழந்ததாக சொந்தக்காரர்களுக்கு போனை போட்டு சொல்லி கதறி அழுதார் ஞான பிரசன்னா.. மது போதையில் படுக்கையில் இருந்து கீழே விழுந்து மண்டை உடைந்து இறந்துவிட்டதார் என்று சொல்லி கண்ணீர் விட்டார்..
ஆரம்பத்தில் யாருக்கும் இதில் எந்த சந்தேகமும் ஏற்படவில்லை. ஆனால் சுதுர் ரெட்டியின் தங்கைக்கு மட்டும் லேசாக சந்தேகம் வந்தது.. படுக்கையில் இருந்து கீழே விழுந்து எப்படி இறக்க முடியும்? இது இயல்பான மரணம் போல் இல்லையே? என்று நினைத்தார்.. உடனே போலீசுக்கும் சென்று புகார் தந்தார்..
கண்ணீர் வாக்குமூலம்
இந்த புகாரின்பேரில் விசாரணை தொடங்கியது.. சுதீர் ரெட்டி உடலை போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர்.. அந்த ரிப்போர்ட் வந்ததுமே போலீசாரே அதிர்ச்சியடைந்துவிட்டனர். சுதீர் ரெட்டியின் கழுத்து நரம்புகள் உடைந்திருந்ததாம்.. அதாவது கழுத்தை இறுக்கி அவரை கொலை செய்திருப்பதாக மருத்துவ அறிக்கை உறுதி செய்தது.
இதையடுத்து, போலீசார் ஞான பிரசன்னாவை கைது செய்து விசாரித்தனர்.. அப்போது மொத்த உண்மையையும் வாக்குமூலமாக சொன்னார்.. கணவரிரன் மது பழக்கமும், சந்தேக புத்தியும்தான் என்னை இப்படி கொலைகாரியாக மாற்றிவிட்டது என்று கண்ணீருடன் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.. இப்போது ஞான பிரசன்னா ஜெயிலில் உள்ளார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications