"தமிழ்நாட்டை ஆட்சி செய்ய தகுதி உடைய ஒரே கட்சி பாமக தான்!" பளீச் என சொல்லும் அன்புமணி ராமதாஸ்
சென்னை: பாமகவின் 34ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி ராமதாஸ், பல்வேறு விஷயங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார்.
பாமகவின் தலைவராகக் கடந்த மே மாதம் அன்புமணி ராமதாஸ் எம்பி தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் கட்சியை வலுப்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
இதனிடையே பாமகவின் 34ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் பல விஷயங்கள் குறித்து முக்கிய தகவல்களைத் தெரிவித்தார்.

திமுக, அதிமுக
அந்த நிகழ்ச்சியில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "தமிழ்நாட்டில் இருக்கும் மற்ற கட்சிகளை யாரோ ஆரம்பித்து, யாரோ வழிநடத்தி வருகிறார்கள். ஆனால் மருத்துவர் ராமதாஸால் தொடங்கப்பட்ட பாமக இன்றும் கூட அவரால் வழிநடத்தப்பட்டு வருகிறது. திமுக மற்றும் அதிமுகவுக்கு மட்டும் தான் தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் திறமை இருக்கிறதா என்ன?

ஒரே கட்சி பாமக
தமிழ்நாட்டை ஆளும் தகுதி உடைய ஒரே கட்சி பாமக தான். தமிழ்நாட்டில் தான் நீட் தற்கொலை அதிகமாக உள்ளது. மாணவர்களின் மனநிலையைக் கூட புரிந்து கொள்ள முடியாதவர்கள் தான் ஆட்சியாளர்களா? டிவியை பார்த்தாலே நீட் தற்கொலை செய்திகளைப் பதற வைக்கிறது. நமது மாணவ-மாணவிகள் நீட் தேர்வில் போட்டிப் போட முடியாமல் போனதற்கு ஒரே காரணம் 50 ஆண்டுகளுக்கு மேலான திராவிட ஆட்சி தான்.

வெறும் 5 ஆண்டுகள்
வெறும் 5 ஆண்டுகள் மட்டும் எங்கள் கையில் ஆட்சியைக் கொடுங்கள். 5 ஆண்டுகளில் நாங்கள் என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வருகிறோம் என்று பார்த்தால் உங்களுக்கே புரியும். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், ஏகப்பட்ட தனியார் பள்ளிகள் தொடங்கப்பட்டன. கல்வியைத் தனியாருக்குத் தாரைவார்த்து உள்ளனர்.

பாட்டாளி மாடல்
இலவச, கட்டாய, தரமான கல்வியைக் கொடுப்பது தான் எங்கள் பாட்டாளி மாடல்! 5 ஆண்டு ஆட்சியை எங்களிடம் கொடுத்தால், நாங்கள் இலவச கல்வியைச் சாத்தியமாக்கிக் காட்டுகிறோம். பொறியியல், மருத்துவம் என எந்தவொரு படிப்பிற்கும் ஒரு பைசா கூட கட்டணமாகவோ அல்லது நன்கொடையாகவோ செலுத்த வேண்டாம். முற்றிலும் இலவசம் என்பதை நாங்கள் சாத்தியப்படுத்துகிறோம். உங்களுக்குப் பாட்டாளி மாடல் வேண்டுமா? இல்லை திராவிட மாடல் வேண்டுமா?

மத்திய அமைச்சர் பொறுப்பு
தற்போது இருக்கும் சூழலில் சுகாதாரம் என்று சொன்னாலே அனைவருக்கும் பாமக தான் தெரியும். 5 ஆண்டுகள் நான் டெல்லியில் இருந்தேன். டெல்லிக்கு சென்று கேட்டுப் பாருங்கள்.. மருத்துவத் துறை என்றாலே அன்புமணி பெயரை தான் கூறுவார்கள். மத்திய அமைச்சர்களின் தரவரிசையை எடுத்துப் பார்த்தால்.. நம்பர் 1 இடத்திலும் அன்புமணி ராமதாசும் நம்பர் 2 இடத்தில் ப.சிதம்பரம், நம்பர் 3 இடத்தில் பாமகவின் அரங்கவேலு என்றே அனைவரும் தெரிவித்தனர்.

பூஜை போடக் கூடாதா
இணையத்தில் வீடியோ ஒன்றைப் பார்த்தேன். அதில் தர்மபுரியில் பூஜை போட்டுக் கொண்டிருந்த சமயத்தில் "இது திராவிட மாடல், பூஜை போட கூடாது" என்கிறார். திராவிட மாடலில் பூஜை போடக் கூடாதா என்ன? தேர்தல் சமயத்தில் ஆர்த்தி எடுக்கும் போது மட்டும் வணக்கம் வைக்கிறீர்களே? அது திராவிட மாடல் இல்லையா? மற்ற கட்சிகள் தமிழ்நாட்டை மதம், இனம் ரீதியாகப் பிரித்துக் கொண்டு இருக்கிறது. ஆனால், பாமக மட்டுமே மக்களை இணைத்துக்கிறது" என்றார்
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications