அடடே இவருமா..பாஜகவில் ஜேஜே நடிகர் சசிகுமார்! மாநில பதவி தந்த அண்ணாமலை -கேசவ விநாயகத்துக்கு நன்றியாம்
சென்னை: ஏராளமான தமிழ் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்த சசிகுமார் சுப்ரமணிக்கு பாஜகவில் மாநில பொறுப்பை வழங்கி இருக்கிறார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.
பாரதிய ஜனதா கட்சியை தமிழ்நாடில் வளர்ப்பதற்கு பல்வேறு திட்டங்களை கையில் எடுத்து செயல்படுத்து வருகிறது அதன் மாநில தலைமை. அதன் படி பிரபலமான நபர்களை கட்சியில் இணைத்து பதவி வழங்கப்பட்டு வருகிறது.
பிற கட்சியினர் மட்டுமின்றி திரைத்துறை, சின்னத்திரை நடிகர்கள், விளையாட்டுத் துறையினர், சமூக வலைதள பிரபலங்கள் என பலரை பாஜகவில் இணைத்து முக்கிய பதவி வழங்கப்பட்டு வருகிறது.

பாஜகவும் திரைத்துறையும்
தமிழ்நாடு பாஜகவில் குறிப்பாக சினிமா துறையை சேர்ந்த ராதாரவி, கவுதமி, காயத்ரி ரகுராம், எஸ்.வி.சேகர், ஆர்.கே.சுரேஷ், பொன்னம்பலம், மதுவந்தி, நமிதா, இயக்குநர் பேரரசு என பலர் சேர்ந்து இருக்கின்றனர். இவர்களில் ஒரு சிலரே தற்போது தீவிரமாக கட்சியில் செயல்பட்டு வருகின்றனர். கடந்த மாதம் சூர்யா சிவா - டெய்சி ஆடியோ விவகாரம் காரணமாக காயத்ரி ரகுராம் கட்சியிலிருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்பட்டார்.

வெளிநாடு தமிழ் வளர்ச்சி பிரிவு
காயத்ரி ரகுராம் மீதான நடவடிக்கையை தொடர்ந்து அவர் வகித்த வெளிநாடு - அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது. இந்த நிலையில் அதன் புதிய தலைவராக இசையமைப்பாளர் தினாவை நியமித்தார் அண்ணாமலை. "தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இசையமைப்பாளர் தினா அவர்களும் மாநில துணை தலைவர் ஆனந்த் அய்யாச்சாமி அவர்களும் நியமனம் செய்யப்படுகிறார்கள்" என்று அவர் அறிக்கை வெளியிட்டார்.

இயக்குநர் பேரரசு
இந்த நிலையில் கடந்த 16 ஆம் தேதி அண்ணாமலை வெளிநாடு - அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் புதிய மாநில துணை தலைவர்கள், மாநில செயலாளர்களின் முதற்கட்ட பட்டியலை வெளியிட்டார். தலைவராக இயக்குநர் பேரரசு நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவருடன் எஸ்.வி.வெங்கடேஸ்வரன், சுகு பூப்பாண்டியன், சுறா.என்.முரளிதரன் ஆகியோரும் மாநில நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.

நடிகர் சசிகுமார்
அதேபோல் மாநில துணை செயலாளர் துணை நடிகர் சசிகுமார் சுப்ரமணியை அண்ணாமலை நியமித்து உள்ளார். கோவையில் பிறந்த சுப்ரமணியின் தாய் கேரளாவை சேர்ந்தவர். இதனை தொடர்ந்து தொலைக்காட்சி சீரியல், திரைப்படங்களில் இவர் நடித்து உள்ளார். லிங்குசாமி இயக்கிய ஆனந்தம், மாதவன் நடித்த ஜேஜே, விஜய் நடித்த ஷாஜகான், திருப்பாச்சி, மணிரத்ணம் இயக்கிய கண்ணத்தில் முத்தமிட்டால், கமல்ஹாசன் நடித்த நல தமயந்தி உள்ளிட்ட பட்டங்களில் இவர் நடித்து உள்ளார்.

அண்ணாமலை, கேசவ விநாயகத்துக்கு நன்றி
தனக்கு பாஜகவில் மாநில பொறுப்பு வழங்கப்பட்டது குறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள சசிகுமார், "பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலச் செயலாளராக நான் நியமிக்கப்பட்டது எனக்கு கிடைத்த பெருமை. என் மீது நம்பிக்கை வைத்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நெஞ்சார்ந்த நன்றி. அதேபோல் பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகத்துக்கு நன்றியை தெரிவிக்கிறேன்." என்று பதிவிட்டு இருக்கிறார்.
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!












Click it and Unblock the Notifications