காயம்பட்ட கர்நாடக சிங்கத்தோட மூச்சு.. நயினார் மேல் ஏகக் கோபத்தில் அண்ணாமலை! பாஜகவில் பெரும் பூகம்பம்
சென்னை: தமிழ்நாடு அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் நிலையில், பாஜகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளர் பணியில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது, கட்சிக்குள் மட்டும் அல்லாமல் அரசியல் வட்டாரங்கள் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த முடிவுக்குப் பின்னால் பல காரணங்கள் பேசப்பட்டாலும், தற்போதைய மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுடன் ஏற்பட்ட கடும் முரண்பாடே முக்கிய காரணம் என பாஜக நிர்வாகிகள் பலர் கூறுகின்றனர். மேலும், வரும் தேர்தலில் நயினாருக்கு எதிராக அண்ணாமலை திரும்ப வாய்ப்பிருப்பதாகவும் சொல்கின்றனர்.
20226 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை தக்கவைக்க திமுக கூட்டணி முழுவீச்சில் செயல்பட்டு வரும் நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் வெற்றியை இலக்காக வைத்து பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது.

அண்ணாமலை விலகல்
ஆனால் அந்த கூட்டணிக்குள் முக்கிய கட்சியான பாஜகவில் ஏற்பட்டுள்ள இந்த குழப்பம், தேர்தல் வியூகங்களில் சிக்கலை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, பாஜகவுக்கு தேர்தலில் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது தொடர்பான உத்தேச பட்டியல் கூட வெளியாகாத நிலையில், 234 தொகுதிகளுக்கான தேர்தல் பணிகளுக்காக 72 பொறுப்பாளர்களை மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்தார்.
இந்த பட்டியலில், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு வெறும் 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன.
2026 தேர்தல்
சிங்காநல்லூர், மதுரை தெற்கு, ஸ்ரீவைகுண்டம், விருகம்பாக்கம், பத்மநாபபுரம், காரைக்குடி ஆகிய தொகுதிகளின் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஒருவர் இவ்வளவு குறைந்த அளவில் கட்டுப்படுத்தப்பட்டதாக உணர்ந்ததே, அவரின் அதிருப்தியை உச்சத்திற்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அதிமுகவுடனான கூட்டணி, கட்சி மேலிடத்தின் சில முடிவுகள் உள்ளிட்ட விஷயங்களில் அண்ணாமலை தொடர்ச்சியாக அதிருப்தியில் இருந்ததாக தகவல்கள் வெளியாகி வந்தன.
நயினார் நாகேந்திரன்
அண்ணாமலை மற்றும் நயினார் நாகேந்திரன் இடையே தொடக்கம் முதலே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகவும் பாஜக வட்டாரத்தில் பேசப்படுகிறது. மாநிலத் தலைவராக இருந்த தன்னை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடக்க முயற்சி செய்யப்படுவதாக அண்ணாமலை உணர்ந்ததாகவும், அதனால் தான் தேர்தல் பொறுப்பாளர் பணியில் இருந்து விலகும் முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
அதிமுக கூட்டணி
இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததும், நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்து, அண்ணாமலையின் தந்தையின் உடல்நிலை சரியில்லாததால் அவரே பணியில் இருந்து விலக விரும்பினார் என்று தெரிவித்தார். ஆனால் இந்த விளக்கம் அனைவரையும் திருப்திப்படுத்தவில்லை. அதே நேரத்தில் தேர்தல் நெருங்கும் வேளையில் அண்ணாமலையின் முடிவு மாற வாய்ப்புள்ளது என்றும், அவர் மீண்டும் அரசியல் களத்தில் தீவிரமாக செயல்படக்கூடும் என்றும் கூறுகின்றனர்.
ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன்
குறிப்பாக, நயினார் நாகேந்திரன் அதிமுகவை தூக்கிப் பிடிப்பதிலேயே அதிக கவனம் செலுத்துவதாகவும், அண்ணாமலை உருவாக்கிய ஓபிஎஸ் உள்ளிட்ட என்டிஏ கூட்டணி வியூகத்தை அவர் புறக்கணித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் கூட்டணியை விட்டு வெளியேற நயினார் தான் காரணம் என்ற விமர்சனமும் எழுந்தது.
பாஜக குழப்பம்
மேலும், அதிமுக தலைவர்களை அண்ணாமலை கடுமையாக விமர்சித்ததன் விளைவாக, எடப்பாடி பழனிச்சாமி பாஜக மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்து அவரை மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கச் செய்ததாகவும் பேசப்படுகிறது. அதிமுகவின் விருப்பத்திற்கேற்ப தான் நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார் என்ற கருத்தும் நிலவுகிறது. இதனால் அண்ணாமலையின் கோபம் தற்போது நயினார் நாகேந்திரன் மட்டுமல்லாமல் எடப்பாடி பழனிச்சாமிக்கும் எதிராக திரும்பியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
தமிழக அரசியல்
அண்ணாமலை தனது அதிருப்தியை வெளிப்படையாக காட்டியுள்ள நிலையில், அவரை சமாதானப்படுத்துவதா அல்லது அரசியலில் ஓரம்கட்டுவதா என்பதை டெல்லி பாஜக தலைமை விரைவில் முடிவு செய்யும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். தேர்தல் நெருங்கி வரும் இந்த சூழலில், நிச்சயம் ஏதேனும் உள்ளடி வேலைகள் அரங்கேறும் என்கின்றனர் தமிழக அரசியல் பார்வையாளர்கள்.
-
2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை? மொடக்குறிச்சியை திணிக்கும் பாஜக மேலிடம்? Annamalai அப்செட் -
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
இறுதியான பாஜக வேட்பாளர்கள் பட்டியல்.. பியூஷ் கோயல் ஆலோசனையில் நடந்தது என்ன? அண்ணாமலைக்கு வாய்ப்பு? -
பியூஸ் கோயல் சொன்ன வார்த்தை.. இறங்கி வந்த அண்ணாமலை.. பாஜக வேட்பாளராக சம்மதம்? என்ன நடந்தது? -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு











Click it and Unblock the Notifications