அண்ணாமலைக்கு இந்த பவர்ஃபுல் போஸ்ட்டிங் தர்றாரா மோடி.. கோவை பிடிவாதம் உடைந்ததா? லாபமா? நஷ்டமா
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் களம் வேட்புமனுத் தாக்கலை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், தமிழக பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு என்பது மிகப்பெரிய பரபரப்பை தந்து கொண்டிருக்கிறது.. குறிப்பாக அண்ணாமலை பிடிவாதமாகத் தமக்கு வேண்டும் என்று கேட்ட அதே கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசனே மீண்டும் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று சென்னை வந்துள்ள பிரதமர் மோடியை, அண்ணாமலை சந்தித்து பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கோவை வடக்கு தொகுதியைக் கைப்பற்றுவதில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கும், வானதி சீனிவாசனுக்கும் இடையே நிலவி வந்த கடும் போட்டியால், வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் டெல்லி தலைமை பெரும் திணறலுக்கு உள்ளானது.

2 பேருக்கும் இடையே நிலவிய உள்குத்து அரசியலால் அதிருப்தியடைந்த மேலிடம், ஒருவழியாக வெளியிட்ட முதற்கட்டப் பட்டியலில் அண்ணாமலையின் பெயரை அதிரடியாக நீக்கியுள்ளது.
தான் கேட்ட தொகுதி கிடைக்காவிட்டால் போட்டியிடப் போவதில்லை என அண்ணாமலை ஏற்கனவே கூறியிருந்த நிலையில், இப்போது அவரது பெயர் விடுபட்டிருப்பது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அண்ணாமலை - பிரதமர் மோடி
டெல்லி தலைமை அவரை சமாதானம் செய்துவிட்டதா அல்லது திட்டமிட்டே அவரை ஓரம் கட்டியதா என்ற கேள்வி எழுந்துள்ளதோடு, தனது அதிரடி அரசியலால் கட்சியை வளர்த்ததாகக் கூறும் அண்ணாமலைக்கு சொந்தக் கட்சியிலேயே சீட் கிடைக்காதது அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் கோவையில் போட்டியிட்டபோது, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஒன்றிணைந்து தன்னைத் தோற்கடித்ததாக அண்ணாமலை கருதுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இப்போது கட்சியில் பெரிய பொறுப்புகள் இல்லாத நிலையில், மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினால் அது தனது அரசியல் எதிர்காலத்தைப் பாதிக்கும் என அவர் அஞ்சுவதாகவும், அதனால் தான் போட்டியிடத் தயங்குவதாகவும் ஒரு தகவல் நிலவுகிறது.
பவர்ஃபுல் போஸ்டிங்
ஆனால் எந்த தொகுதியில் நின்றாலும் 2 திராவிடக் கட்சிகளும் தமக்கு எதிராக செயல்படும் என்ற தயக்கமே அவரது இந்த முடிவுக்குக் காரணம் என்றும் சலசலக்கப்படுகிறது.
இப்படியான குழப்பங்களைத் தீர்க்கவும், வேட்பாளர் தேர்வில் உள்ள சிக்கல்களை ஆராயவும் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சமீபத்தில் சென்னை வந்து ஆலோசனைகளை மேற்கொண்டார். அவர் தயாரித்த உத்தேச பட்டியல் டெல்லி தலைமையால் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது.
தேசிய கட்சி அங்கீகாரம்?
இப்படிப்பட்ட சூழலில்தான் பிரதமர் மோடி சென்னைக்கு வருகை தந்துள்ளார். இன்று பிரதமர் தலைமையில் நடைபெறும் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டமும் நடைபெற உள்ளதால், அண்ணாமலைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.. இதனால் கேரளாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அண்ணாமலை உடனடியாக சென்னை திரும்பினார்.. அந்தவகையில் இன்று பிரதமரையும் சந்தித்து பேச உள்ளதாக தெரிகிறது.
அண்ணாமலை தேர்தலில் போட்டியிடாத பட்சத்தில், அவருக்குத் தேசிய அளவில் கட்சி அல்லது மத்திய அரசின் பதவி வழங்க பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒருவேளை அவருக்குத் தேசிய அளவில் முக்கியப் பதவியோ அல்லது மத்திய அமைச்சர் பதவியோ வழங்கப்பட்டால், அது அவருக்குப் பெரிய அளவில் லாபமாகவே அமையும். தேர்தலில் நின்று தோல்வியை சந்திப்பதை காட்டிலும், அதிகாரமிக்க பதவியில் அமர்வது அவரது அரசியல் எதிர்காலத்திற்குப் பாதுகாப்பானது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
திராவிட கட்சிகள்
இருந்தாலும், "அதிரடி அரசியல்" பேசும் அண்ணாமலை தேர்தல் களத்திலிருந்து பின்வாங்குவது, அவரை நம்பி இருக்கும் தொண்டர்களிடையே ஒருவித தொய்வை கண்டிப்பாக ஏற்படுத்தக்கூடும்.
அதுமட்டுமல்ல, திராவிடக் கட்சிகளின் வியூகங்களுக்கு அஞ்சி அவர் பின்வாங்கிவிட்டார் என்ற விமர்சனத்தையும் அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அண்ணாமலையின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை அறிய ஒட்டுமொத்த தமிழகமும் ஆவலுடன் காத்திருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்...!!
-
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை? மொடக்குறிச்சியை திணிக்கும் பாஜக மேலிடம்? Annamalai அப்செட் -
அண்ணாமலைக்கு 'கல்தா'.. எடப்பாடியின் செல்லப்பிள்ளைகளுக்கு 'சீட்' .. பாஜகவின் திடீர் முடிவு.. ஏன்? -
அண்ணாமலை மிஸ்ஸிங்.. அமித் ஷா பிளான்.. அடுத்து என்ன? அண்ணாமலை எடுக்கும் முடிவு இதுதான்? -
ஆதரவாளர்களுக்கு சீட்.. அண்ணாமலை வைத்த டிமாண்ட்.. பாஜக வேட்பாளர் பட்டியல் தாமதமாவதன் பின்னணி! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்காதது ஏன்? "அவருக்கு வேறு திட்டம் இருக்கு.." பியூஷ் கோயல் கொடுத்த விளக்கம்! -
அண்ணாமலையை "ஓவர்லுக்" செய்ததா டெல்லி? பாஜக வேட்பாளர் பட்டியலில் மிஸ்ஸான பெயர்! ஆட்டம் குளோஸா? -
மூணு தோல்வி அண்ணாமலை பெயரை தவிர்க்கவே போட்டியில்லை.. வாசகர் அங்கமுத்து ஆதங்கம் -
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
கோவை வடக்கில் வானதி சீனிவாசன் களம்: யார் இவர்? 2026 தேர்தலில் மீண்டும் கவனம் ஈர்க்கும் பாஜக முகம் -
பீகார் தேர்தலின் போது மோடி சொன்ன வார்த்தைகள்.. முடிந்தால் தமிழ்நாட்டிலும் பேசுங்க.. ஸ்டாலின் சவால்!











Click it and Unblock the Notifications