தொடர் விடுமுறை..ஆயுதபூஜையை சொந்த ஊரில் கொண்டாட ஸ்பெஷல் பஸ்.. எங்கிருந்து எங்கே முழு விபரம்
சென்னை: தொடர்விடுமுறை வருவதை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்காமல் இருக்கும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துறை அறிவித்துள்ளது. கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி பைபாசில் உள்ள பணிமனை ஆகிய 3 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பயணிக்க முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதனை தொடர்ந்து 4, 5 ஆகிய தேதிகளில் ஆயுத பூஜை, மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அக்டோபர் 1ஆம்தேதி முதல் 10ஆம் தேதி வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையும் விடப்பட்டுள்ளது. அனைத்து கல்லூரிகளும் விடுமுறை அளித்துள்ளது. சனிக்கிழமை 1ஆம் தேதி அரசு விடுமுறை நாளாகும். 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிற நிலையில் அக்டோபர் 3ஆம்தேதி மட்டும் வேலை நாளாக உள்ளது. அன்று ஒரு நாள் விடுப்பு அனுமதிக்கப்பட்டால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது.

கூட்ட நெரிசலை தவிர்க்க
இதனால் வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் விடப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார். 30 மற்றும் 1ஆம் தேதி ஆகிய 2 நாட்கள் சென்னையில் இருந்து 2050 சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

2100 கூடுதல் பேருந்துகள்
தினசரி இயக்கப்படும் 2100 பஸ்களோடு கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய முடியும். கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி பைபாசில் உள்ள பணிமனை ஆகிய 3 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பயணிக்க முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

எங்கிருந்து எங்கே பயணம்
வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து வெளியூர் செல்லக்கூடியவர்கள் பயணத்தை தொடங்குவதால் பல்வேறு போக்குவரத்து கழகங்களை சேர்ந்த பேருந்துகள் சென்னையில் இருந்து கூடுதலாக இயக்கப்படுகிறது. "நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர், திருவனந்தபுரம், தென்காசி, கன்னியாகுமரி, மதுரை போன்ற தென் மாவட்ட பகுதிகளுக்கு கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் புறப்படுகிறது.

கூடுதல் பேருந்துகள்
வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் சிறப்பு பேருந்துகள் 2050 சேர்ந்து மொத்தம் 4150 பேருந்துகள் இயக்க திட்டமிட்டு உள்ளோம் என்று போக்குவரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். பொதுமக்களின் தேவையை கருதி கூடுதலாகவும் இயக்க தயாராக உள்ளோம். கூட்ட நெரிசல் இல்லாமல் பயணிக்க பகுதி வாரியாக பிரித்து பஸ்கள் இயக்கப்படுகிறது. மழை பெய்யாவிட்டால் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், தற்போது பல இடங்களில் மழை பெய்து வருவது வெளியூர் பயணத்தை முடக்கவும் வாய்ப்பு உள்ளது என்றனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications