இதனால் தான் இல.கணேசன் வீட்டுக்கு போகல.. ‘பாஜகவினரை துன்புறுத்தியவர்’.. போட்டு உடைத்த அண்ணாமலை!
சென்னை : பாஜக தொண்டர்களை துன்புறுத்திய மாநிலத்தின் முதல்வர் மம்தா கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பம் இல்லாததால் இல.கணேசன் இல்ல நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் ஆளுநரும், மேற்கு வங்க பொறுப்பு ஆளுநருமான இல.கணேசனின் இல்ல விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த விழாவிற்கு அழைப்பு விடுத்தும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் கலந்து கொள்ளாதது விவாதங்களை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அதுகுறித்துப் பேசியுள்ள அண்ணாமலை, இல.கணேசன் இல்ல விழாவிற்கு சென்று இருப்பேன். ஆனால் அந்த விழாவிற்கு மம்தா பானர்ஜி வந்ததால் அங்கே செல்லக்கூடாது என்ற எண்ணமும் இருந்தது எனத் தெரிவித்துள்ளார் அண்ணாமலை.

இல.கணேசன்
பாஜக மூத்த தலைவராக இருந்த இல.கணேசன் ராஜ்யசபா எம்.பியாக பொறுப்பு வகித்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டார் இல.கணேசன். தொடர்ந்து மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜெகதீப் சிங் தன்கர், துணை குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பையும் கடந்த ஜூலை மாதம் முதல் கூடுதலாக நிர்வகித்து வருகிறார் இல.கணேசன்.

மம்தா + ஸ்டாலின்
இந்நிலையில், மணிப்பூர் மாநில ஆளுநரும், மேற்குவங்க மாநிலத்தின் பொறுப்பு ஆளுநருமான இல.கணேசனின் சகோதரர் இல.கோபாலனின் 80-வது பிறந்தநாள் விழா சென்னையில் கடந்த வியாழக்கிழமையன்று நடைபெற்றது. இல.கணேசன் இல்ல விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

பங்கேற்காத அண்ணாமலை
மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் இல்ல விழாவுக்கு வருகை தருமாறு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் இருவருமே இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. திட்டமிட்டே, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை இருவருமே புறக்கணித்தனரா என்ற கேள்வியும் அரசியல் அரங்கில் எழுந்தது. குறிப்பாக, அண்ணாமலை சென்னையில் இருந்தும் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை.

பின்னணி
பாஜக மூத்த நிர்வாகிகள் பெரும்பாலானோரை இல.கணேசன் இந்த நிகழ்வுக்கு அழைக்கவில்லை எனத் தகவல் வெளியானது. திமுக தலைவர் ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி என பாஜகவுக்கு எதிரான கட்சித் தலைவர்களை அழைத்த இல.கணேசன், தமிழக பாஜக மூத்த தலைவர்களையே அழைக்கவில்லை என்ற தமிழக பாஜக வட்டாரத்தில் புகைச்சல் எழுந்ததாக கூறப்பட்டது. அந்த அழுத்தம் காரணமாகவே அண்ணாமலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் அவர் கலந்துகொள்ளவில்லை என தகவல்கள் பரபரத்தன.

ஏன் செல்லவில்லை - அண்ணாமலை
இந்நிலையில், இல.கணேசன் இல்ல விழாவில் பங்கேற்காதது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, பாஜக மாநில தலைவராக இல.கணேசன் இருந்துள்ளார். முக்கியமான மூத்த தலைவர். மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் தனது இல்ல விழாவில் பங்கேற்கும்படி தொலைபேசி மூலம் அன்போடு அழைப்பு விடுத்தார். நானும் வருவதாக சொல்லி இருந்தேன். நான் மாலை நேரத்தில் அவர் வீட்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் அவர்கள் அங்கு இல்லை. இப்போது கோயிலுக்கு சென்றுவிட்டனர்.

எங்களை மோசமாக நடத்தியவர்
இல.கணேசன் இல்ல விழாவிற்கு சென்று இருப்பேன். ஆனால் அந்த விழாவிற்கு மம்தா பானர்ஜி வந்ததால் அங்கே செல்லக்கூடாது என்ற எண்ணமும் இருந்தது. காரணம், மேற்கு வங்கத்தில் பாஜகவினர் மம்தா பானர்ஜியால் மிகவும் மோசமாக துன்புறுத்தப்பட்டுள்ளனர். இல.கணேசன், தான் மேற்கு வங்க பொறுப்பு ஆளுநர் என்ற முறையில் அந்த மாநில முதல்வரை அழைத்துள்ளார். அதைப்பற்றி எனக்கு தனிப்பட்ட கருத்து இல்லை.

கண்டிப்பாக போவேன்
நான் இல.கணேசன் இல்லத்திற்கு செல்வேன். இன்றோ, நாளையோ இல.கணேசன் வீட்டிற்கு சென்று ஆசிர்வாதம் வாங்குவேன். இல.கணேசனின் அண்ணன் கோபாலன் என் மீது தனிப்பட்ட முறையில் பாசம் உடையவர். இருந்தபோதும் மம்தா பானர்ஜி வந்த நேரத்தில் செல்லக்கூடாது என்பது என் மனதில் தோன்றிய எண்ணம், அதனால் செல்லவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications