ஜால்ரா அடித்து பதவியில் இருக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை! தவெகவுக்கு அண்ணாமலை பதிலடி
சென்னை: அண்ணாமலை கம்முனு இருக்க வேண்டிய இடத்தில் கம்முனு இருந்திருந்தால் இன்று இருக்க வேண்டிய இடத்தில் இருந்திருப்பார் என தவெக நிர்வாகி அருண்ராஜ் பேசியிருந்த நிலையில், அதற்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். சினிமா நடிகருக்காக அரசு பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஜால்ரா அடிப்பவன் நான் இல்லை என்றும் ஜால்ரா அடித்து பதவியில் இருக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் அமைதியாக இருப்பதை முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்திருந்தார். இந்து மக்களுக்கு பிரச்சினை வரும்போது விஜய் அமைதியாக இருக்கிறார் என்பது போல விமர்சித்திருந்தார். இதற்கிடையே அண்ணாமலைக்கு தவெக நிர்வாகி அருண்ராஜ் பதிலடி கொடுத்திருந்தார்.

அருண்ராஜ்
இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அருண்ராஜ், "அண்ணாமலை கம்முனு இருக்க வேண்டிய இடத்தில் கம்முனு இருந்திருந்தால் இன்று இருக்க வேண்டிய இடத்தில் இருந்திருப்பார்" என்று தெரிவித்தார். மாநில பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டதைக் குறிப்பிடும் வகையில் அருண்ராஜ் இந்தக் கருத்தைக் கூறியிருந்தார்.
இதற்கிடையே அருண்ராஜிற்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். நடிகருக்காக அரசு பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஜால்ரா அடிப்பவன் நான் இல்லை என்றும் ஜால்ரா அடித்து பதவியில் இருக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
அண்ணாமலை பதிலடி
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நான் எப்போதும் உண்மையை மட்டுமே பேசுவேன். நான் யாருக்கும் ஜால்றா அடிக்க மாட்டேன். இன்று ஒரு கட்சியில் சேர்ந்ததற்காகச் சினிமா நடிகருக்கு ஜால்ரா அடிப்பது போல நான் ஜால்றா அடிக்க மாட்டேன். நான் நாட்டு மக்களுக்கும் மோடிக்காகவும் மட்டுமே விசுவாசமாக இருப்பேன். சினிமா நடிகருக்கு ஜால்ரா அடிக்க நான் அரசு பதவியை ராஜினாமா செய்யவில்லை. ஒரு உன்னதமான ஒரு கோட்பாட்டுக்காக வந்திருக்கிறேன்.
வரும் காலத்திலும் எனக்குப் பிரச்சினை வரும். ஆனால், மக்களுக்காகவே நான் பிரச்சினை சந்திக்கிறேன். எனக்குப் பெருமை தான். ஜல்றா அடித்துத் தான் ஒரு பதவியில் இருக்க வேண்டும் என்றால் அந்தப் பதவியே எனக்கு அவசியம் இல்லை" என்றார். என்டிஏ கூட்டணிக்குள் ஓபிஎஸ் வருவாரா என்ற கேள்விக்கு அவர், "இங்கே அது குறித்துப் பேசினால் தவறாகிவிடும். நான் கண்டிப்பாக இது குறித்து பேசுகிறேன்" என்று மட்டும் பதிலளித்தார்.
100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம்
100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் குறித்துப் பேசிய அவர், "2005ல் இந்த 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தைக் கொண்டு வந்தது. அப்போது காங்கிரஸின் யுபிஏ அரசில் நேஷனல் அட்வைசரி கவுன்சில் என்ற அமைப்பு இருந்தது. அதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நிறைய உறுப்பினர்கள் இருந்தார்கள். அவர்கள் முடிவு செய்து தான் இந்த 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். இது அனைவருக்கும் தெரியும்.
காங்கிரஸ் நண்பர்களுக்குக் கேட்கிறேன். நீங்க இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தபோது மகாத்மா காந்தி பெயரை வைத்தீர்களா? இல்லை. 2005ல் இத்திட்டம் கொண்டு வந்த போது காந்தியின் பெயர் அதில் இல்லை. 2008ல் தான் காந்தியின் பெயரை இதில் சேர்த்தீர்கள். இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்த நீங்களே முதல் நான்கு ஆண்டுகள் மகாத்மா காந்தி பெயரை வைக்கவில்லை. அதேநேரம் 2014ல் மோடி ஆட்சி அமைத்த பிறகு கொண்டு வந்த முக்கிய திட்டமான ஸ்வச் பாரத் மிஷனை, காந்தி பெயருடனேயே வைத்தோம்.
காந்தி
பல இடத்தில் மகாத்மா காந்தியின் பெருமையைப் பிரதமர் நரேந்திர மோடி உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கின்றார். 20 ஆண்டுகளுக்கு முன்பு வந்த திட்டத்தில் இப்போது மத்திய அரசு முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இத்திட்டத்தை இன்னும் கூர்மைப்படுத்தி இருக்கின்றார்கள். 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டமாக இருந்தது, இன்று 125 நாட்களாக மாறியிருக்கிறது. வளர்ந்த பாரதத்தை நோக்கிச் செல்வதால் அதற்கேற்பத் திட்டம் மாற்றி அமைக்கப்படுகிறது.
முன்பு இந்தத் திட்டம் 100% மத்திய அரசு நிதியில் செயல்படுத்தப்பட்டு வந்தது. இப்போது மத்திய அரசு 60%, மாநில அரசு 40% என மாற்றி அமைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் உட்கட்டமைப்புகளை உருவாக்குகிறோம். அந்த உட்கட்டமைப்புகள் மாநில அரசின் சொத்துகள் தான். எனவே தான் மாநில அரசு பங்களிப்பை இருக்க வேண்டும் என்கிறோம். இது சரி என்றே நினைக்கிறேன். தமிழ்நாடு என இல்லை பாஜக ஆளும் மாநிலங்களுக்கும் இதே விதி தான்.
பென்ஷன்
மேலும், இதில் மற்றொரு விதியும் இருக்கிறது. அதாவது கிராமத்தில் ஒருவர் இத்திட்டத்தில் வேலை கோரி விண்ணப்பிக்கிறார். அவருக்கு 15 நாட்களில் வேலைத் தர முடியவில்லை என்றால் வேலையின்மை பென்ஷன் தர வேண்டும். இது மிகப் பெரிய வரப்பிரசாதம். இதன் மூலம் 125 நாட்கள் வேலை கிடைப்பது உறுதி செய்யப்படும்" என்றார்.
-
ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய விஜய்.. கூடுதல் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்து கிரேட் எஸ்கேப்! -
ராதாபுரத்தில் தமிழிசை, மயிலாப்பூரில் அண்ணாமலை? பாஜக எடுக்கும் முடிவு.. கமலாலயத்தில் நடந்தது என்ன? -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
அண்ணாமலை இனி மாநில அரசியலில் இல்லை.. பாஜக டாட்டா காட்டிவிட்டது.. பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கருத்து -
களத்தில் தலைவரை காணோம்.. தேர்தல் ஹீட்டிலும் பனையூரில் ரெஸ்ட்? தவெக தொண்டர்களையே கதறவிடும் விஜய்! -
சர்ப்ரைஸ் வானதி சீனிவாசன்.. நோஸ் கட் அண்ணாமலை.. 2021 தேர்தல் பாஜக பிளாஷ்பேக் -
“அந்த தகுதி மட்டும் போதுமா?.. ஸ்டாலினுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை?” விஜய் மீது சேரன் தாக்கு! -
திடீரென பாஜகவுக்கு ஓட்டு கேட்ட விஜய்.. ஷாக்கான தவெக வேட்பாளர்.. பாவம்யா அவரே ‘கன்ஃபியூஸ்' ஆகிட்டாரு! -
டைம் ட்ராவல் செய்த விஜய்? பெரம்பூர் மனுவில் 52 வயது.. திருச்சி வேட்புமனுவில் 51 வயது! வெரி ராங் ப்ரோ -
தவெகவுடன் பேசியதை சொல்லட்டுமா.. தினகரன் குறித்து புட்டு புட்டு வைத்த முன்னாள் எம்எல்ஏ -
பெரம்பூரில் மூடிக் கிடக்கும் விஜய் தேர்தல் அலுவலகம்.. இவ்வளவுதான் தவெக தேர்தல் ஏற்பாடு! -
ரஜினிகாந்த் திருந்திவிட்டார்.. விஜய் கட்சியை கலைத்துவிட்டு சென்றால் நல்லது - அமீர்












Click it and Unblock the Notifications