திராவிட நாடு கோரியவர்களை தமிழ்நாடு என்றழைக்க வைத்துள்ளோம்.. எங்கள் மாஸ்டர் பிளான் இது.. கனல் கண்ணன்!
சென்னை: திராவிட நாடு என்று கூறியவர்களை தமிழ்நாடு என்று கூற வைத்ததே பாஜகவின் மாஸ்டர் பிளான் என்று திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் தெரிவித்துள்ளார். அதேபோல் இது தமிழ்நாடு மட்டுமல்ல, இந்து நாடு என்றும், திராவிட மண் அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
"உலகப் புகழ் பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் முன் இருக்கும் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்றைக்கு உடைக்கப்படுகிறதோ அன்றுதான் ஹிந்துக்களின் உண்மையான எழுச்சி நாள்" இப்படி சில மாதங்களுக்கு முன் திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து பெரியார் சிலை குறித்து அவதூறு கருத்து தெரிவித்த கனல் கண்ணன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில், சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனை புதுச்சேரியில் வைத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கனல் கண்ணன்
இதன் பின்னர் சில வாரங்களுக்கு பின் ஜாமீனில் வெளியே வந்த கனல் கண்ணன், அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார். தற்போது மீண்டும் அரசியலில் ஆர்வம் காட்டி வருகின்றார். இதனிடையே சில நாட்களுக்கு முன் ராஜ் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு என்று கூறுவதை விடவும், தமிழகம் என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும் என்று பேசினார்.

தமிழ்நாடு
இது தமிழ்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. திமுக, அதிமுக, விசிக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தமிழ்நாடு என்றே அழைக்க வேண்டும் என்று பதிலடி கொடுத்தனர். இதில் பாஜக மட்டும் ஆளுநர் கூறியதில் தவறு இல்லை என்றும், தமிழகம், தமிழ்நாடு இரண்டுமே சரி என்றும் கருத்து தெரிவித்தனர். ட்விட்டரில் தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக் விவாத பொருளாகவே மாறியது

இந்து நாடு
இதுகுறித்து பாஜக நிர்வாகியும், சினிமா சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து கனல் கண்ணன் கூறுகையில், இது தமிழ்நாடு மட்டுமல்ல இந்து நாடு. இது திராவிட மண் அல்ல. தமிழக காவல்துறை, தமிழக முதலைச்சர் என்று இதற்கு முன்பு சொன்னதில்லையா. ஒரத்த நாடு, வல்ல நாடு என்பது போன்ற ஊர்கள் எல்லாம் இருக்கின்றது. அவையனைத்தும் தனி நாடு ஆகிவிடுமா?

மாஸ்டர் பிளான்
நாங்கள் தமிழ்நாடு என்று சொன்னால் நீங்கள் திராவிட நாடு எனச் சொல்லுவீர்கள். நாங்கள் தமிழகம் எனச் சொன்னால் நீங்கள் தமிழ்நாடு என்று சொல்லிவிட்டீர்கள் அல்லவா. இதுதான் எங்கள் மாஸ்டர் பிளான் என்று தெரிவித்தார்.
-
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்!












Click it and Unblock the Notifications